Posts

Showing posts from November, 2019

லைஃப் சர்டிபிகெட் கண் ஆபரேஷன்

இன்று நவம்பர் 30. மத்திய அரசில் பணிபுரிபவர்கள்  இன்று லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கான கடைசி நாள் . நான் 20 தினங்களுக்கு முன்பே சென்று இந்தியன் வங்கியில் எனது லைஃப் சர்டிபிகெட்டை கொடுத்துவிட்டேன். இம்முறை அனைவருக்கும் அவருடைய பிபிஓ நம்பர் தவறு என்று பலருக்கு பல முறை வந்ததால் மீண்டும் மீண்டும் திருத்தி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது .அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்ட சமயத்தில் நான் பேங்கிற்கு சென்ற பொழுது அங்கு அவர்கள் படும் இன்னலை கண்ட பொழுது எனது நண்பர் தான் அங்கு அப்டேட் செய்து கொண்டிருந்ததார். அவர் என்னிடம் உதவி கோரினார். நானும் சரி என்று அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்து 6 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை விடாமல் தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பேங்கில் இருந்து அனைவரும் லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதவி செய்தேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என் மனதை மிகவும் பாதித்தது . அதாவது தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ,மேம்பட்டு விட்டது, கல்வி வளர்ச்சியில் மிகவும் உயரத்திற்கு சென்று விட்டது ,என்று கூறுவது அனைத்தும் பொய்யோ என்று தோன்றும் அளவிற்கு, லைப் சர்டிபிகேட்  கொடுக்க வந்தவ

உறங்காவில்லி கதை

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது உறங்கா வில்லி என்ற சீடரின் கதை. இவர் ராமானுஜரின் முக்கியமான சீடர்களில் ஒருவர் .இவர் மேல் ராமானுஜர் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். இவர் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.இவர் மேல் அன்பும் பாசமும் வைத்திருந்தது ஏனைய சீடர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவரை பற்றி குற்றம் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும் ராமானுஜர் அவரிடம் அன்பாக பழகுவதும் பேசுவதும் அவர் வீட்டில் உண்பதும்  இவர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. எப்படியாவது அவருடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று சீடர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு இருக்கையில் ஒருநாள். ஒருமுறை இவருடைய சீடர்களில் ஒருவருடைய காவியாடை கிழிந்து இருந்தது. அவ்வாறு கிழிந்து இருந்த ஆடையை கண்ட  சீடர்  மற்றவர்கள் மேல் சந்தேகப்பட்டு குற்றம் கூறிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஒரு ஆடை கிழிந்து இருந்தால் தங்களுக்குள் வாதம் செய்து கொண்டும் அடித்துக்கொண்டும்  இருந்தார்கள்.ஒருவர் மற்றவர் மேல் பழி கூறிக்கொண்டிருந்தார். அப்போது ராமானுஜர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் நமது உ

ஏகலைவன் மிகவும் உயர்ந்தவன்

அதாவது, மனிதனுக்கு உடலில் ஒவ்வொரு அங்கமும் எவ்வளவு முக்கியம் என்பதை அவனவனுக்கு வரும் வலியால் ,நோயால் தான் கண்டுபிடிக்க முடியும். நேற்று மதியம் எனது வலது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், நான் இன்று காலை படும் அவஸ்தையை, அதாவது பல் தேய்ப்பதிலிருந்து, குளிப்பதில், ஆகாரம் உண்பதில்,  அனைத்திற்கும் கட்டைவிரல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நாள் நான் செய்யும் வேலையை என்னால் செய்ய முடியாமல் கட்டைவிரலை உபயோகிக்க முடியாமல் நான் படும் அவஸ்தையை எண்ணி வருந்துகின்றேன். ஆனால் புராணத்தில் துரோணரின் கெட்ட மதியால் அரசியலில் அரசாட்சியில் அர்ஜுனனை யாரும்  விஞ்சி விடக்கூடாது என்ற ஒரு மனப்பான்மையால் ,ஏகலைவனின் கட்டைவிரல் வேண்டும் என்று கேட்டு, அவனும் குருதட்சணையாக எந்தவித தயக்கமுமின்றி துரோணருக்கு கட்டை விரலை வெட்டிக் கொடுத்த நிகழ்ச்சியை, ஒரு நிமிடம் நாம் நினைத்தோமானால் தன் வாழ்க்கையையே குருவிற்காக அர்ப்பணித்து இருக்கிறான். ஒரு மனிதனுக்கு கட்டைவிரலை தியாகம் செய்வது என்பது தன்னுடைய அனைத்து தேவைகளையும் குருவுக்காக அர்ப்பணம் செய்ததற்கு ஈடாகும். அதற்கு விலை மதிப்பே கிடையாது. இந்த விஷயத்தில் ஏ

டிடி இன்ஜெக்ஷனுக்கு 900 ரூபாய்

சில நேரங்களில் சினிமாவில்  காண்பிப்பது மிகையாக காண்பிக்கிறார்களோ மிகை படுத்துகிறார்களோ என்று தோன்றும். ஆனால் நாம் வாழ்க்கையில் அது போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும் பொழுதுதான் அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்.  உதாரணத்திற்கு ஒரு படத்தில்  விஜயகாந்த் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை .அவர் குணமானால் போதும் என்று இறந்த ஒருவரின் உடலை வைத்து ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட் கொடுக்க அவர்களும் பெரிய டாக்டர் வருகிறார் அது இது என்று சொல்லி பணத்தை கறந்து விட்டு இறுதியாக அவர் இறந்துவிட்டார் என்று கூறுவார். அதைக் காணும் பொழுது இது போல் நடக்குமா என்று தோன்றும். ஆனால் என் வாழ்க்கையில் இன்று அது  போல் ஒன்று நடந்தது .அதை பகிரலாம் என்று இருக்கிறேன். நான் இன்று எனது சம்பந்தி வீட்டிற்கு செல்லும் பொழுது ஒரு குலோப்ஜாமுன் டப்பா வாங்கிச் சென்றேன். அது தகரத்தால் மூடியிருக்கும் .அதைத் தொறந்து தகரத்தை எடுக்கும்பொழுது என் கை கிழிந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது .உடனே என் மனைவியும் சம்பந்தியும் ரத்தம் கொட்டுவதை நிறுத்த மஞ்சளை வைத்து அப்பி பஞ்சால் கட்டி பேண்டேஜ் போட்டுவிட்டார்கள். இது நடந்தது கோவையில் ஒரு மணிக்கு. நான் உணவை முடித்

பத்து வரிக் கதை

#10 வரிக் கதை#. கண்ணீரும் கம்பலையுமாக விசும்பலுடன் படுக்கையில் விழுந்தாள் பர்வதவர்த்தினி . என்ன காரணம் !!?அவளுக்கு ஒரே மகன். சீராட்டி பாராட்டி தாலாட்டி மிக்க அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தாள்.  அவ்வளவுதான் பிறவியிலிருந்தே மேல்நாட்டு மோகத்தை ,மேல்நாட்டு ஆதிக்கத்தை, செயலை, செய்கையை, அவன் ரத்தத்தில் செலுத்தினாள்.ஆங்கிலத்தில் படிக்க வைத்தாள்.  வீட்டில் ஆங்கிலம் தான் பேசவேண்டும் என்று ஊக்குவித்தாள். ஆங்கில மோகத்தை அளவுக்கு அதிகமாகவே ஊட்டினாள். அவள் நினைத்தது யாவும் நடந்தது. மகன் நன்றாகப் படித்து தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வேலை. கை நிறைய சம்பளம். தேவைக்கு அதிகமாகவே அம்மாவிற்கு அனுப்பி கொடுத்தார்.பின் ஏன் அழுகிறாள்.  மகனுக்கு வயதாகிவிட்டது. திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம். ஆனால் அவனிடம் இருந்து ஓலை வந்தது. நாளை திருமணம் என்று!!. அதற்காக மகிழாமல் ஏன் அழுகிறாள்.   திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சாஸ்திர சடங்கு சம்பிரதாய பண்பாடு கலாச்சாரப்படி நடக்கவேண்டும் .ஆனால் இவள் மகனோ ஜேம்ஸ் பிரிக்ஸ் என்ற ஆங்கிலேயனை ஒரு ஆணை லிவ்விங் டு கெதர் ஆக இருந்தார்களாம், ப

நந்தி தேவர் வரலாறு

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது நந்தி தேவர் வரலாறு. சிவபெருமான் கோயில்களுக்கு சென்றால் முதலில் நாம் தரிசிக்க வேண்டியது நந்தியைத் தான். நந்திதேவரை தரிசித்துவிட்டுத்  தான் நாம் சிவபெருமானை தரிசிக்க முடியும். அவ்வாறு புகழும் பெயரும் அவருக்கு எவ்வாறு கிடைத்தது .அவர் யார் ??எவ்வாறு  நந்தி ஆனார் என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!? திருவையாற்றில் ஒருசமயம் சிலாத முனிவர் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது. அவர் உடனே சிவனை நோக்கி குழந்தை பாக்கியம் வேண்டும் என்று தவம் இருந்தார் .அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து முனிவரே நீங்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று கூறி, மேலும் நீங்கள் யாகம் செய்யும் நிலத்தை உழும்போது பூமியிலிருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். அந்த குழந்தை இந்த பூமியில் 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும் என்று கூறிவிட்டு மறைந்தார். சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில் மூன்று கண்கள் நான்கு தோள்களுடன் சந்திரன

இக்கரைக்கு அக்கரை பச்சை

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.  ஒரு பழமொழி ஒன்று கூறுவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று. அதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மற்றவனைப் பார்த்தால் அவன் சுகமாக இருப்பதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவன் அல்லல் படுகிறான் என்பது அவனுக்கே மட்டும் புரியும் .இதை விரிவாக விளக்குவதற்காக ஒரு கதை. ராமபிரானின் முன்னோரான மாந்தாதா என்பவர் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தார் .அப்பொழுது சவுபரி என்னும் ஒரு வயதான மகரிஷி இருந்தார். அவருக்கு சகல யோகங்களும் சித்திகளும் அவருள் அடக்கம் .ஆதலால் அவர் நீரின் அடியிலிருந்து தவம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். அவ்வாறு ஒருநாள் நீரினில் இருந்து தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆண் மீனும் பெண் மீனும் மகிழ்ச்சியுடன் ஜோடியாக விளையாடுவதை கண்டார். அதைக்கண்ட மகரிஷிக்கு தானும் ஏன் இல்லறத்தில் இணைய கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது .அதை செயலாற்ற உடனே மாந்தாதாவின் அரண்மனையை நோக்கி புறப்பட்டார் .நேராக மன்னரிடம் சென்று மன்னா நான் இல்லற வாழ்வில் ஈடுபட விரும்புகிறேன். உனக்கு 50 பெண்கள் உள்ளனர் அவர்களில் ஒருத்தியை எனக்கு திருமணம் செய்து கொடு என்

கற்புக்கரசி களைப்பற்றி பதிவிரதைகளைப் பற்றி

வாழ்வில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை நாம் அனேக கதைகளிலும் புராணங்களிலும் கற்புக்கரசி களைப்பற்றி பதிவிரதைகளைப் பற்றி பத்தினிகளை பற்றி கேட்டிருப்போம். படித்திருப்போம் .ஆனால் வாழ்க்கையில் அது போன்ற ஒரு பத்தினியை பார்த்து இருப்போமா என்பது சற்று சந்தேகம். என் வாழ்வில் அதுபோல் நான் ஒருவரை பார்த்திருக்கிறேன். அதைப்பற்றி இங்கு அவசியம் அனைவருக்கும் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் 2005இல் திருச்சியில் சுமங்கலி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்பது கஜம் புடவை வாங்க வேண்டும் எங்கு செல்லலாம் எங்கு வாங்கலாம் சாரதாவா!! என்ன ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கம்பரசம்பேட்டை அக்ரகாரத்தில் ஒரு மாமி பெரியார் நகரில் ஒரு மாமி நல்ல புடவைகளை விற்றுக் கொண்டிருக்கிறார் .வீட்டில் வைத்துதான் வியாபாரம் செய்கிறார். அவரிடம் சென்று வாங்குங்கள் புடவையும் நன்றாக இருக்கும் .விலையும் அதிகம் இருக்காது என்று கூறினார். அதைக் கேட்டு அவருடைய விலாசத்தை வாங்கிக் கொண்டு எங்கள் குடும்பத்தில் உள்ள நாலைந்து பேர் வாங்குவதற்காக அங்கு சென்றோம். பெரியார் நகரில் அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது வீடு மிகவு