டிடி இன்ஜெக்ஷனுக்கு 900 ரூபாய்

சில நேரங்களில் சினிமாவில்  காண்பிப்பது மிகையாக காண்பிக்கிறார்களோ மிகை படுத்துகிறார்களோ என்று தோன்றும். ஆனால் நாம் வாழ்க்கையில் அது போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கும் பொழுதுதான் அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்.

 உதாரணத்திற்கு ஒரு படத்தில்  விஜயகாந்த் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை .அவர் குணமானால் போதும் என்று இறந்த ஒருவரின் உடலை வைத்து ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட் கொடுக்க அவர்களும் பெரிய டாக்டர் வருகிறார் அது இது என்று சொல்லி பணத்தை கறந்து விட்டு இறுதியாக அவர் இறந்துவிட்டார் என்று கூறுவார். அதைக் காணும் பொழுது இது போல் நடக்குமா என்று தோன்றும். ஆனால் என் வாழ்க்கையில் இன்று அது  போல் ஒன்று நடந்தது .அதை பகிரலாம் என்று இருக்கிறேன்.

நான் இன்று எனது சம்பந்தி வீட்டிற்கு செல்லும் பொழுது ஒரு குலோப்ஜாமுன் டப்பா வாங்கிச் சென்றேன். அது தகரத்தால் மூடியிருக்கும் .அதைத் தொறந்து தகரத்தை எடுக்கும்பொழுது என் கை கிழிந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது .உடனே என் மனைவியும் சம்பந்தியும் ரத்தம் கொட்டுவதை நிறுத்த மஞ்சளை வைத்து அப்பி பஞ்சால் கட்டி பேண்டேஜ் போட்டுவிட்டார்கள். இது நடந்தது கோவையில் ஒரு மணிக்கு. நான் உணவை முடித்துவிட்டு 3 மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து அதே கையுடன் காரை ஓட்டிக்கொண்டு நான் பொள்ளாச்சி வந்து சேர்ந்தேன்.

எனது கை சற்று வலிக்க ஆரம்பித்தது. உடனே என் மனைவி நாளை ஞாயிற்று கிழமை .டாக்டர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆதலால் நீங்கள் சென்று ஒரு T T  injunction போட்டு வாருங்கள் என்று கூறினார் .நானும் சரி என்று தனியாக கிளம்பி பொள்ளாச்சி கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள தங்கமுத்து ஹாஸ்பிடலுக்கு சென்று ஒரு டீ டீ போட வேண்டும் என்று கூறினேன்.

அவர்கள் பேண்டேஜ் போட்டு ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்கள்.அவர்களுக்குத் தெரியும் நான் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருக்கிறேன் என்று .மேலும் முன்னாள் ராணுவத்தினர் என்றும் தெரியும். இருந்தும் ஒரு டிடி இன்ஜெக்சனுக்கு பேண்டேஜ் உடன் 900 ரூபாய் என்னிடம் வாங்கி உள்ளார்கள். அதன் ரசீதை உங்கள் பார்வைக்காக இத்துடன் அனுப்பியுள்ளேன். இதைப்பற்றி நான் மற்றவரிடம் கூறும் பொழுது ஒரு டிடி இன்ஜெக்ஷன்னுக்கு 900 ரூபாய். கொள்ளை அடிக்கிறார்கள் சார். மகா பாவிகள் .அதனால்தான் அந்த ஆஸ்பத்திரிக்கு யாரும்  போகவே மாட்டார்கள் .பணம் பிடுங்கி பேய்கள் என்று கூறினார்கள் .எனக்கே மனது வலித்தது .ஒரு டிடி  இன்ஜக்சனுக்கு 900 ரூபாய் வாங்குபவர்கள் யாராவது இருக்கிறார்களா. என்ன செய்வது. காலத்தின் கோலம்.(நான் வலியின் காரணமாக நீண்ட தூரம் போக வேண்டுமே என்று பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அதன் விளைவு தான்)

இது போல் பல கொடுமைகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆதலால் தான் சினிமாவில் மிகையாக எதுவும் கூறவில்லையோ என்று தோன்றுகிறது.

Last but not the least என்று கூறுவது போல் லேசாக கிழித்து இருக்கிறது அவ்வளவுதான் .உடனே அங்குள்ளவர்கள் ஸ்டிச்சிங் செய்ய வேண்டும் சார் .டீச்சிங்ஸ் சார்ஜ் 1700/- என்று கூறினார்கள் .நான் இரண்டு முறை எனக்கு ஒன்றும் அவ்வளவு வலியில்லை என்று அழுத்தி கூறிய பிறகு பெரிய டாக்டர் வந்து ஸ்டிட்சிங் வேண்டாம் என்று கூறியதனால் ஆயிரத்து 700 ரூபாய் எனக்கு மிச்சம். இல்லை என்றால் ஒரு டிடி இன்ஜெக்ஷன் அடக்கம் 2600 ரூபாய் இருக்கும்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ