Posts

Showing posts from July, 2020

திருப்பு முனை 2

#திருப்புமுனை#. எனது வாழ்க்கையில் நான் செய்த இரண்டு பயங்கரமான சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனமான நடவடிக்கை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது .என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம். எனக்கு பத்து வயது இருக்கும். என் அண்ணனுக்கு வயது 12. நான் சிறுவயதிலிருந்தே சற்று துடுக்குத் தனமும் வீரமும் ஒரு பலசாலி போல ஒரு நடவடிக்கையும் உடன்பிறந்த குணமாக இருந்தது. எனது அண்ணன் சற்று ஒல்லியாக நோஞ்சானாக இருப்பார். யாரையும் எதிர்த்துப் பேசுவதோ அடாவடி நடவடிக்கையோ கிடையாது .இவ்வாறு இருக்கையில் நான் ஒருநாள் பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது பழனியில் அடிவாரத்தில் கொழுமம் சத்திரத்திற்கு அருகில் எனது அண்ணனை இரண்டுபேர் அடிப்பதை பார்த்து இயற்கையாக உள்ள வீரம் கொப்பளிக்க நேராக பாய்ந்து இரண்டு பேருடைய கழுத்திலும் கையை வைத்து தள்ள அவர்கள் விழுந்து மண்டையில் அடிபட்டு ரத்தம் வர பிறகு அவர்கள் ஓ  என்று  அழுக அனைவரும் என்னை பிடித்து திட்ட அண்ணனை அடிச்சார்கள். எனக்கு கோபம் வந்தது என்று நான் சொல்ல மிகவும் சிரீயஸ் ஆகாமல் ஓரளவுக்கு சமாளிக்கும் நிலை இருந்ததால் அன்றைய விஷயம் அத்துடன் முடிந்தது. சிறு குழந்தைகள் தானே

திருப்பு முனை

# திருப்பு முனை#  1971ம் வருடம் நான் பியூசி முடித்து டைப்ரைட்டிங் முடித்து மேற்கொண்டு படிப்பதா?? வேலைக்கு செல்வதா ??என்று யோசித்துக்கொண்டிருந்தேன் .நல்ல மார்க் வந்தால் டிகிரி படிக்கலாம். இல்லை என்றால் வேலைக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எனது நண்பன் ஏர்போர்ஸ்க்கு ஆள் எடுக்கிறார்கள் டூரிஸ்ட் பங்களா கோயமுத்தூரில். நீ சென்று முயற்சி செய்து பார் என்று கூறினான். அப்பொழுது காலேஜ் தொடங்காத நேரம். அட்மிஷன் தொடங்காத நேரம். நான் கோயமுத்தூர் சாய்பாபா காலனியில் ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது சம்பளம் மாசம் 90 ரூபாய். ஆனால் வரவு-செலவு செக் பணம் அனைத்தும் என் பொறுப்பில் தான் இருந்தது.உடனடியாக லீவும் எடுக்க முடியாது. அனுமதியும் கேட்க முடியாது .என்ன செய்வது !!என்று இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தபொழுது, எனது சகோதரர் துணிந்து நீ செல், நடப்பது நடக்கட்டும் என்று கூறினார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. உடனே சாய்பாபா காலனியில் இருந்து நடந்து (அப்பொழுதெல்லாம் அவ்வளவாக பஸ்வசதி கிடையாது) டூரிஸ்ட் பங்களா சென்றால் 15

இந்திரன் அகலிகை யை அடைந்த வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.  இன்று நாம் காண  இருப்பது அகலிகையை அடைய இந்திரன் ஏன் விரும்பினார். அகலிகையின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது. கௌதமர் எவ்வாறு அகலிகையை அடைந்தார் என்பது போன்ற சில முக்கியமான தகவல்களை இங்கு பார்க்கலாம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது பாற்கடலை கடைந்து பகவான் கூர்மாவதாரம் எடுத்து தன் முதுகின் மேல் மந்தார மலையை நிறுத்தி வாசுகியை மத்தாக கொண்டு கடைந்த பொழுது ஆலகால விஷம் வந்து அதை ஈசன் அருந்த, பிறகு அனைத்தும் நல்ல பொருள்களாக வந்தது. அப்பொழுது அகலிகையும் பாற்கடலிலிருந்து பேரழகியாக சொரூப சுந்தரியாக தோன்றினாள். அதைக்கண்டு அப்பொழுது இந்திரனும் கௌதமரும் ஒருசேர அவளை அடைய விருப்பம் தெரிவித்தனர். அப்பொழுது அங்கு தோன்றிய பிரம்மன் நீங்கள் இருவரும் ஒருசேர அவளை அடைய விரும்புவதால், நான் உங்களுக்குள் ஒரு போட்டியை வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ அவர்களே அகலியை அடையத்தக்கவர்கள் என்று கூறினார் .போட்டி என்னவென்றால்!!? எந்த ஒரு பசுமாடு முகம்  முன்னும் பின்னும் உள்ளதோ அதை மூன்று முறை வலம் வந்து எவர் முதலில் வருகிறார்களோ அவர்களே  அகலிகையை அடையத் தக்கவர் என்று கூறி

தசரதர் வரம் ராமனுக்கு

சீதாதேவி அக்னிப்ரவேசம் செய்து வெளி வந்தபோது , வானிலிருந்து அக்னியுடன் பல தேவர்கள் வந்தார்கள் ;  அவர்களுள் தசரத சக்ரவர்த்தியும் இருந்தார் ;  மகனான இராமனைக்  கண்டு புளகாங்கிதம் அடைந்த அவர் , பின் ,                         '' இராமா ...இரண்டு வரம் தருகிறேன் ..கேள்''  என்றார் இராமனிடம் ... ( மனைவியரில் கைகேயியும் , மகன்களில் இராமனும் அவருக்கு பிரியமானவர்கள் ....கைகேயிக்கு ஏற்கனவே இரண்டு வரங்கள் கொடுத்திருந்தார்.....அது அனைவரும் அறிந்ததே........ எனவே , தனது மன உறுத்தலைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு , இப்போது இராமனுக்கு இரண்டு வரங்களை அளிக்க வேண்டியே , இவ்விதம் கேட்டார் தசரத சக்ரவர்த்தி)                         தந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு  இராமன்,    '' ..தந்தையே ...உங்களால் மனைவியல்ல என்று நிராகரிக்கப்பட்ட என்  அன்னை கைகேயியும் , தீயவன் என்று தள்ளப்பட்ட பரதனும் , மறுபடியும் என் தாயும் , தம்பியுமாக உங்களால் ஏற்கப்பட வேண்டும் !''  என்று கேட்டார் ;              " சரி அவ்வண்ணமே அளித்தேன் ! ஆனால், இவ்விரண்டும் ஒரே வரம் தான் ....!  இன்னொரு வரத்தை