திருப்பு முனை 2

#திருப்புமுனை#.

எனது வாழ்க்கையில் நான் செய்த இரண்டு பயங்கரமான சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனமான நடவடிக்கை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது .என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம்.

எனக்கு பத்து வயது இருக்கும். என் அண்ணனுக்கு வயது 12. நான் சிறுவயதிலிருந்தே சற்று துடுக்குத் தனமும் வீரமும் ஒரு பலசாலி போல ஒரு நடவடிக்கையும் உடன்பிறந்த குணமாக இருந்தது.

எனது அண்ணன் சற்று ஒல்லியாக நோஞ்சானாக இருப்பார். யாரையும் எதிர்த்துப் பேசுவதோ அடாவடி நடவடிக்கையோ கிடையாது .இவ்வாறு இருக்கையில் நான் ஒருநாள் பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது பழனியில் அடிவாரத்தில் கொழுமம் சத்திரத்திற்கு அருகில் எனது அண்ணனை இரண்டுபேர் அடிப்பதை பார்த்து இயற்கையாக உள்ள வீரம் கொப்பளிக்க நேராக பாய்ந்து இரண்டு பேருடைய கழுத்திலும் கையை வைத்து தள்ள அவர்கள் விழுந்து மண்டையில் அடிபட்டு ரத்தம் வர பிறகு அவர்கள் ஓ  என்று  அழுக அனைவரும் என்னை பிடித்து திட்ட அண்ணனை அடிச்சார்கள். எனக்கு கோபம் வந்தது என்று நான் சொல்ல மிகவும் சிரீயஸ் ஆகாமல் ஓரளவுக்கு சமாளிக்கும் நிலை இருந்ததால் அன்றைய விஷயம் அத்துடன் முடிந்தது. சிறு குழந்தைகள் தானே ஆதலால் அனைவரும் சகஜமாக எடுத்துக் கொண்டு விட்டுவிட்டார்கள். இது எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அன்றிலிருந்து அனாவசியமாக யாரையும் கை வைக்கக்கூடாது என்று நினைத்தேன். இது ஒன்று.

ரெண்டாவது.
1973ம் வருடம் ‌ ஆக்ராவில் சாயந்தரம் ஆறு மணிவாக்கில் அனைவரும் தேனீர் அருந்துவதற்கு கேம்பில் உள்ள ஓட்டலுக்கு(கேண்டீன்) செல்வோம். அவ்வாறு ஒரு நாள் செல்லும் பொழுது பயங்கர குளிர் .அதன் காரணமாக எனது நண்பர் ஒருவர் கழுத்தில் மப்ளர் போட்டிருந்தார்.. நான் பின்பக்கமாகச் சென்று முன்னால் பார்ப்பவர்களிடம் யார் என்று சொல்லாதீர்கள் என்று கூறி, விளையாட்டாக கழுத்துவரை இழுக்க ஒரே நிமிடத்தில் மூச்சுத்திணறி அவர் சாய ,நான் பதை,பதைக்க அனைவரும் விதுர்விதுக்க ஏகதேசம் ஐந்து நிமிடத்தில் அவன் சகஜ நிலைக்கு திரும்ப ,என்னடா வாசு இப்படி பண்னிட்ட என்று கேட்க, மன்னித்துக்கொள் டா நான் விளையாட்டாக தொட்டேன், இவ்வளவு சீரியஸாகும் என்று நினைக்கவில்லை என்று நான் மன்னிப்பு கோர ,பின் அனைவரும் சகஜமாகி தேனீர் அருந்தி இயல்பு நிலைக்கு திரும்பினோம், இது எனது வாழ்க்கையில் அமைந்த இரண்டாவது திருப்புமுனை.(அன்றிலிருந்து இன்றுவரை யாரும் கழுத்தில் துண்டோ மப்ளரோ எதுவாக இருந்தாலும் தொடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு இன்று வரை கடைப்பிடித்து கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் விளையாட்டாக செய்தது எவ்வளவு வினையாகி போய்விட்டது என்று மிகவும் வருந்தினேன். இன்றுவரை வருந்திக் கொண்டிருக்கிறேன்).

இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக திருப்புமுனையாக நான் அதிகமாக யாரிடமும் விளையாடுவதில்லை. விளையாட்டாக கூட இதுபோன்ற காரியங்கள் செய்ய கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு நிகழ்வுகள் என் வாழ்வில் மறக்க முடியாத திருப்புமுனை.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ