Posts

Showing posts from November, 2018

மத்யமரும் நானும்

மத்யமரும் நானும் மத்யமர் தலைவர் திரு  சங்கர் ராஜரத்தினம் அவர்களுடன் மத்யமர் ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு முகநூலில் நல்ல பழக்கம் இருந்தது. அவருடைய கதைகளை விரும்பிப் படிப்பவன் நான் .மத்யமர் தொடங்கியவுடன் ஜனவரி 2018 ல் என்னை அவர் மத்யமரில் இனைத்தார். எனக்கு மொபைலில் டைப் செய்வதோ அதிலும் தமிழில் டைப் செய்வதோ பத்தி பிரித்து போடுவதோ  பாரா பிரிப்பதோ ஃபுல் ஸ்டாப் கமா கொடுப்பதோ எங்கு நிறுத்த வேண்டும் எங்கு தொடங்க வேண்டும் என்பதோ போன்ற ஒன்றும் அறியாமல் இருந்தேன் நான். இவ்வாறு இருக்கும்பொழுது முதன்முதலாக உங்கள் வாழ்க்கையின் லட்சியம் பற்றி ஒரு போட்டி ஆரம்பமானது மத்யமரில். சரி நாம் நடந்த நிகழ்ச்சியை எழுதித்தான் பார்ப்போமே என்று நான் 1972ல் ஏர்போர்ஸ்ல் சேர்ந்த விதத்தை ஒரு கோர்வையாக எழுதினேன். பாரா பிரித்து  எழுதத் தெரியாமல் ஒரே நிகழ்ச்சியாக  ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சிகளை இடையில் சேர்க்கவோ ஒன்றும் தெரியாமல் நடந்ததை ஒரு கோர்வையாக நானும் எழுதினேன். இதைப் படித்த குஜராத் மேடம்  அனு மேடம் அவர்கள் கூட நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராவாக பிரித்து எழுதுங்கள் என்று கூறினார்கள் .தெரிஞ்சா தானே எழுதுறது. நான் முத

அட்சதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு அட்சதை ஏன் மணமக்களுக்கு தூவுகிறோம் அதன் தாத்பரியம் என்ன அதை சற்று விரிவாக பார்ப்போமா அட்சதை அட்சதை க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். (சதக் சதக் என்று குத்தினான் என்று தமிழ் பேப்பரில் எழுதுவதும் இதனால் தான்) அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள். அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, பசு நெய், மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர். முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் . பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பச

தன்மானச் சிங்கம் கோதை அம்மாள்

’தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ..! பெயர்: கோதையம்மாள். வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை.. ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்.. பிள்ளைகள்: தறுதலைகள்.. தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது.. சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500.. ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்.. என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..) ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்.. ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு

தீபாவளி சுமையே

#மத்யமர்_பார்வையில்_பண்டிகைகள் celebrating Diwali நான் தீபாவளிப் பண்டிகை சுமையே என்று கூற விரும்புகிறேன். காரணம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 10 பேர் .5 அண்ணன் தம்பி 5 அக்கா தங்கை .நான் இவ்வாறு கூற காரணம் சிறுவயதில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வு காரணமாக நான் சுமை என்று கூறுகிறேன். அது என்ன என்று சற்று விரிவாக பார்ப்போமா. ஒரு இரண்டு தீபாவளி நிகழ்வுகளை மட்டும் இங்கு கூறிவிட்டு பிறகு நான் மற்ற பதிவுக்கு வருகிறேன். எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன் நாங்கள் பழனியில் இருக்கிறோம் .என் தந்தை பழனி மடப்பள்ளியில் நிர்வாகியாக இருக்கிறார் ஒரு தீபாவளிக்கு பத்து பேருக்கும் துணி எடுப்பதற்கு வசதி இல்லை .ஆனால் புதுத்துணி போட வேண்டுமே என்ற எண்ணம் தாய் தந்தையருக்கு மேலோங்கி நிற்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் இந்தக் காலம் போல் ரெடிமேட்  டிரஸ்ஸோ இல்லை  விரும்பியதை எடுத்து வைப்பதோ கிடையாது .ஒரு குடும்பத்துக்கு என்றால் மொத்தமாக எடுத்துட்டு வந்து தைப்பது தான் .அந்த வருட தீபாவளிக்கு வழியில்லாமல் என் தந்தையார் 15 மீட்டர் காடாதுணி எடுத்துட்டு வந்து அண்ணன்-தம்பி அக்கா-த

ஒரு பெண்ணின் தற்பெருமை கதை

1982ம் வருடம் நான் ராஜஸ்தானில் உள்ள பிக்கானீர் இல் வசித்து வந்தேன் .அப்பொழுது அங்கு அருகில் நிறைய கிராமங்கள் உள்ளது. அந்த கிராமங்களில் ஒரு மிகவும் அருமையான கதையை அடிக்கடி அனைவரும் கூறிக் கொண்டிருப்பார்கள் .அது எனக்கு மிகவும் பிடித்தமான கதையும்கூட .அதை தற்போது இங்கு கூறலாம் என்று இருக்கின்றேன். அதாவது பிக்கானீரில் அனுமன் காத்தா என்ற கிராமத்தில் சுமேலி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள்..அவளுக்கு இயற்கையாக அமைந்த குணம் என்னவென்றால் அவள் எந்த ஒரு புதியது அணிந்தாலும் அதை ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். அவ்வாறு பாராட்ட தவறினார்கள் என்றால் அதன் விளைவு மிகவும் விபரீதமாக இருக்கும். அவ்வாறு விபரீதமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்ன என்று இங்கு காண்போமோ. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் அந்தக் காலத்தில் ராஜஸ்தானில் அனைவரும் குடிசை வீட்டில் தான் வசித்து வந்தனர். ஒருமுறை சுமேலி புதிய பாவாடை தாவணி அணிந்து வீட்டிலிருந்து வெளியே வந்தார். உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் சுமேலி  அருமையாக இருக்கிறது எங்கு வாங்கினாய் எப்பொழுது தைத்தாய்  என்று கேட்டார்கள். அதனால் மிகவும் பரவசமடைந்து ரோட்