Posts

Showing posts from February, 2019

நீதி தவறாத ராஜவர்மன் என்ற பாண்டிய மன்னன் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது நீதிநெறி தவறாத ஒரு மன்னனின் கதை . யார் அந்த மன்னன்.ஏன்  சோதனை ஏற்பட்டது!!?? பின்பு அது எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டது என்பதைப் பற்றி சற்று விரிவாக  விளக்கமாகக் காண்போமா??? முன்பொரு காலத்தில் மதுரையை நீதிநெறி தவறாத ராஜவர்மன் என்ற பாண்டிய மன்னன்ஆண்டு வந்தான். அவன் நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதித்து வந்தான். தன் ஆட்சியில் ஒரு சிறு தவறும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வந்தான். அவ்வாறு கவனம் செலுத்தியவனுக்கு  ஆண்டவனும் அருகிலிருந்து உதவி வந்தார். அப்படியிருக்கையில் ஒரு நாள்.   வேறு ஒரு  ஊரிலிருந்து ஒரு அந்தணரும்  அவனது மனைவியும் இவனுடைய நாடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் மிகவும் சோர்வாகவும் உச்சி வெயிலும் ஒரு சேர நடக்கமுடியாமல் ஒரு மரத்தின் அடியில் சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அயர்ச்சியின்  காரணமாக சற்று கண் அயர்ந்து விட்டனர் .அப்போது சற்றும் எதிர்பாராமல் ஒரு அம்பு வந்து அவனுடைய மனைவியின் மார்பைத்  துளைத்தது. அக்கணமே அவர் உயிரிழந்துவிட்டார். அதே சமயத்தில் சற்ற

மஹா காளேஸ்வரர் ஆலய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் லிங்கம். இது எவ்வாறு உண்டானது. இதன் சரித்திரம் என்ன என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா?? இது உஜ்ஜையினி நகரில் ஷீப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது .இந்நகரை அவந்திகா என்றும் அழைப்பர் .ஏழு புண்ணிய நகரங்களில் இதுவும் ஒன்று .அந்த ஏழு புண்ணிய நகரங்கள் யாவன என்றால் அயோத்தியா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா பூரி த்வாரவதீ சைவ ஸப்தைதே மோஷதாயகாம் என புராணத்தில் சொல்லப் படுகிறது. மேலும் இச் ஜோதிர்லிங்கத்தைப் பற்றி புராணங்களில் மிகப் பெருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. கந்தபுராணத்தில் அவந்தி காண்டம் சிவபுராணத்திலும் மகாபாரதத்திலும் இந்நகரின் பெருமை விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நதியில் நீராடியவர்களுக்கு சர்வ பாவமும் விலகும் என்றும் அஷ்ட தரித்திரம் விலகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் கல்விகற்ற சாந்தீபினி ஆசிரமமும் இங்கே உள்ளது .மேலும் விக்ரமாதித்தனின் தலைநகராகவும் காளிதாசனின் பிறப்பிடமாகவும் இந் நகர் திகழ்கிறது. இனி ஜோதிர்லிங்கம் எவ்வாறு உண்டானது என்பதை பற்றி சற்று பார்ப்

Astrology

தற்போது ஜோசியம் தான் முக்கிய டிரண்ட் ஆகி விட்டது போல் தோன்றுகிறது .காரணம் அனுராதா விஸ்வேஸ்வரன் ,யாழ் குழலி, அவரைத் தொடர்ந்து முரளிதர பாபு, தலைவர் சங்கர் ஆகியோர் அனைவரும் கடந்த ஒரு சில நாட்களாக, வாரங்களாக ஜோசியத்தின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் சும்மா இருக்கலாமா?? நாமும் சற்று அதைப் பற்றி குறிப்பிட வேண் டாமா?? அத்தகைய ஜோசியத்தை பற்றி குறிப்பிடவே இந்தப் பதிவு. நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கண்ணால் கண்டதை பற்றி, ஞான திருஷ்டியில் உணர்ந்து கூறியதைப் பற்றி  அவர் கூறிய கூறிய அனைத்தும் பலித்ததைப் பற்றி, சத்தியமே உரைத்த ஒரு மனிதரைப் பற்றி. கோவைக்கு அருகில் பேரூரில் பட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.( இந்த ஆலயத்தைப் பற்றி இதன் புனிதத் தன்மையைப் பற்றி இது  தோன்றியதைப் பற்றி இதன் மகிமையை பற்றி இங்குள்ள பிறவாப்புளி இறவாப்பனை ஆகியவற்றைப் பற்றி பின்பு விளக்கமாக தெரிந்த கதை தெரியாத வரலாற்றில் கூறுகிறேன்). தற்போது ஜோஸியத்தைப் பற்றி மட்டும் கூறுகிறேன். பட்டீஸ்வரர் ஆலயத்தை வலமாக சுற்றி வந்தால் ஆலயத்தின் பின்புறம் முத்துக்குமாரசாமி முருகன் ஆலயம் உள்ளது. 1982 வாக்கில்

மனைவி சொல்லே மந்திரம்

உடன்பிறப்புகளுக்கு வணக்கம் இதுவரை கடந்த ஓராண்டாக நான் மத்யமரில் 16 மணி நேரத்திற்கு குறையாமல் பார்த்துக் கொண்டு பதிவிட்டு கொண்டு கமெண்டிக் கொண்டு இருந்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறது. காரணம் நான் கடந்த ஓராண்டாக காலை எழுந்து விடாமல் ஒரு மணி நேரம் யோகா செய்து மாலையில் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் விடாமல் வாக்கிங் செல்வேன். அப்பொழுதெல்லாம் மத்யமர் பார்த்து கண் வலி என்றாலும் கை வலி என்றாலும் எனது மனைவி ஆயின்மென்ட் ஊற்றிவிட்டு கண்ணுக்கு கை வலிக்கு மருந்து தடவி விடுவார்கள். கடந்த 15 நாட்களாக இல்லை இல்லை ஒரு மாத காலமாக மீட்டிங்கிற்கு பத்து நாட்கள் முன்பாகவும் மீட்டிங் முடித்துவிட்டு வந்து இன்றுவரை யோகாவோ  வாக்கிங்கோ செல்லாமல் செய்யாமல் மத்யமரே கதி என்று கிடக்கிறேன் இதன் விளைவு என்ன என்றால் நீங்கள் செல்லை தொடுவதை நிறுத்துங்கள் என்று குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. காரணம் சமையல் செய்து வைத்துக் கூப்பிட்டால் வருகிறேன் வருகிறேன் என்று அரைமணி நேரம் இழுத்தடிப்பது ஏதாவது ஒரு காரியத்திற்கு வேலையாக வெளியில் செல்ல சொன்னால்   டபாய்ப்பது அல்லது செல்லாமல்

திருக்குறள் விளக்கம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது ஒரு திருக்குறளுக்கான விளக்கம் .அது என்ன திருக்குறள் என்ன விளக்கம்? சற்றுப் பார்ப்போமா?. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. இதன் விளக்கம். புற இருளை நீக்குகின்ற சூரியன் சந்திரன் தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. மனத்தகத்து ஏற்றப்படுகின்றன உண்மை என்னும் விளக்கே சான்றோர்க்கு அழகு தருவதாகும். இது சான்றோர்களுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை நாம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியை கூறினால் இந்த குரலின் அர்த்தத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும். ராமகிருஷ்ணர் பிறப்பால் பிராமணர் .அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய ஒன்பதாவது வயதில் அவரது குல வழக்கப்படி அவருக்கு பிரம்மோபதேசம் அதாவது பூணல் என்னும் உபநயனச் சடங்கு நடந்தது. இந்த உபநயனச் சடங்கு, சடங்கின் வழக்கின்படி உபநயனம் முடிந்து சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப் படுவான். பிராமண குல வழக்கப்படி அந்த காலத்தில் பிரம்மச்சாரி என்பவன் வீடுவீடாக சென்று யாசகம் பெற்று பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். ஆதிசங்கரர் பிரம்மச்சார