மனைவி சொல்லே மந்திரம்

உடன்பிறப்புகளுக்கு வணக்கம் இதுவரை கடந்த ஓராண்டாக நான் மத்யமரில் 16 மணி நேரத்திற்கு குறையாமல் பார்த்துக் கொண்டு பதிவிட்டு கொண்டு கமெண்டிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறது. காரணம் நான் கடந்த ஓராண்டாக காலை எழுந்து விடாமல் ஒரு மணி நேரம் யோகா செய்து மாலையில் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் விடாமல் வாக்கிங் செல்வேன். அப்பொழுதெல்லாம் மத்யமர் பார்த்து கண் வலி என்றாலும் கை வலி என்றாலும் எனது மனைவி ஆயின்மென்ட் ஊற்றிவிட்டு கண்ணுக்கு கை வலிக்கு மருந்து தடவி விடுவார்கள்.

கடந்த 15 நாட்களாக இல்லை இல்லை ஒரு மாத காலமாக மீட்டிங்கிற்கு பத்து நாட்கள் முன்பாகவும் மீட்டிங் முடித்துவிட்டு வந்து இன்றுவரை யோகாவோ  வாக்கிங்கோ செல்லாமல் செய்யாமல் மத்யமரே கதி என்று கிடக்கிறேன்

இதன் விளைவு என்ன என்றால் நீங்கள் செல்லை தொடுவதை நிறுத்துங்கள் என்று குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது. காரணம் சமையல் செய்து வைத்துக் கூப்பிட்டால் வருகிறேன் வருகிறேன் என்று அரைமணி நேரம் இழுத்தடிப்பது ஏதாவது ஒரு காரியத்திற்கு வேலையாக வெளியில் செல்ல சொன்னால்   டபாய்ப்பது அல்லது செல்லாமல் சாக்கு போக்கு சொல்வது.இது போல ஒரு மாதமாக செய்து நிறைய கெட்ட பேரு வாங்கி விட்டேன் போல தோன்றுகிறது. ஆதலால் நீங்கள் ஒரு மாதம் செல்லை தூக்கிப் போடுகிறீர்களாஇல்லையா என்று அதிரடி குரல் கேட்கிறது. உடன்பிறப்புகளே தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் . மத்யமர் பார்க்காமலோ பதிவிடாமலோ என்னால் இருக்க முடியாது அடிக்ட் ஆகிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

அதற்கு அவர்கள் (என் மனைவி) கூறும் காரணம் சுகர் பிபி என்று எகிரி விட்டால் யாரைக்கொண்டு ஆகும் என்று வேறு சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதும் என்னமோ சரியாகத் தான் படுகிறது. ஆனால் மத்யமரில் இருந்து பார்வையை கண் அகற்ற மறுக்கிறது. இதற்கு என்ன தீர்வு ??மத்தியம மெம்பர்களே நண்பர்களே உடன்பிறப்புக்களே இதற்கு உடனடியாக ஒரு தீர்வை தெரிவிக்குமாறு தங்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

நல்ல தீர்வை தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

மேலும் முக்கியமாக இங்கே நான் தெரிவிப்பது என்னவென்றால் இதைப்பற்றி அமெரிக்காவில் இருக்கும் என் மகனுக்கு இன்னும் புகார் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்து  விட்டால் என் நிலைமை இன்னும் மிகவும் மோசமாக போய்விடும்.

ஆகையால் அதற்குள் தகுந்த உபாயம் தந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ