Posts

Showing posts from January, 2020

போகி பண்டிகை தோன்றிய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு இன்று போகிப் பண்டிகை போகி என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும். அதாவது வெறும் வீட்டிலுள்ள வேண்டாதவற்றை தீயிட்டு பொசுக்குவது போகி அல்ல. நம் மனதில் உள்ள காமம், குரோதம், வன்மம், பொறாமை, அனைத்தையும் களைந்து நல்லதை நினைத்து நல்லதையே செய்வதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் என்றும் பொருள். இந்தப் போகிப் பண்டிகை எவ்வாறு வந்தது ஏன் போகியைக் கொண்டாடுகிறோம் என்று புராண ரீதியில் விளக்கம் காண்போமா??? மதுராவில் இந்திர விழா வருடா வருடம் நடக்கும். ஒருமுறை கிருஷ்ணர் இந்திரவிழா வேண்டாம் கோவர்தனகிரி விழா நடத்துவோம் என்று கூறி கோவர்த்தனகிரி  விழாவை  அவ்வருடம் நடத்தினார் .அதனால் இந்திரன் வெகுண்டு மதுராவில் கடும் மழையை பொழிவித்தான். சற்றும் அசராமல் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை தன் சுண்டு விரலால் தூக்கி அனைத்து மதுரா வாசிகளையும் காப்பாற்றினார்.இதனால் கிருஷ்ணரின் மகிமையை அறிந்து தன் ஆணவம் அகம்பாவம் அனைத்தையும் விட்டு கிருஷ்ணரிடம் இந்திரன் மன்னிப்பு கோரினார். இந்திரனுக்கு மறுபெயர்"" போகி"" என்பதாகும். அதனால்தான் மதுராவில் இந்திர விழா என்று கூறுகிறார்கள். இந்திரன

மத்யமர் ரெண்டாவது ஆண்டு விழா

இன்றைய தலைவர் பதிவைப் படித்த பிறகு நாட்டு நடப்பை பற்றிய ஒரு உண்மையை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு டெல்லியில் மத்திய உள்துறையில் சில நண்பர்கள் இருக்கிறார்கள் .அவர்களிடமிருந்து வந்த தகவலை இங்கு யாரும் அறியாவண்ணம் இரகசியமாக பதிவிடுகிறேன்.  மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றிருக்கிறது .அதாவது வரும் 19-ஆம் தேதி சென்னையில் மத்தியமர் மீட்டிங் நடக்க இருப்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்ற காரணத்தினால், ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்த போதிலும் ,சில பேக்டரிகளும் கடைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கும் .அவ்வாறு இயங்கும் பட்ஷத்தில் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் ,அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் ,வணிக நிர்வாகத்திற்கும் ,அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,. அதன் விவரம் என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும், வேண்டும் பேக்டனிகளும், மற்றும் இன்னபிற  நிர்வாகங்களும், மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,அவ்வாறு அந்த ஒருநாள் மூடப்பட்டு இருப்பதால் ஏ