Posts

Showing posts from December, 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image

புரந்தரதாசர் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது புரந்தரதாசரின் வரலாறு. புரந்தரதாசர் யார் ??தாய் தந்தையர் யார்!!அவருடைய முந்தைய பிறவி என்ன?? அவர் ஏன் தவ வாழ்க்கை மேற்கொண்டார். எல்லாவற்றையும் சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!. பண்டரிபுரத்தில் வேமன்னபுரி என்ற ஒரு சிறிய கிராமம். இது மிகவும் பசுமை நிறைந்த கிராமம். அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரும் தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினர் . அந்த ஊரில் மாதவராவ் ரத்தினா பாய் என்ற மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர் .அவர்களுக்கு வெகு காலம் பிள்ளைப்பேறு ;மக்கட்செல்வம் இல்லாமல் இருந்தது. அவர்கள் பிள்ளை வரம் வேண்டி கோவில் கோவிலாக சென்று இறுதியாக திருப்பதிக்கு வந்து சீனிவாச பெருமானை மனதார உருக்கமாக குழந்தை வரம் வேண்டி வேண்டினார்கள். சீனிவாசன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவர்களுக்கு ஒரு ஆண்மகனை வரமாக கொடுத்தார். ஸ்ரீனிவாச பெருமானின் அருளால் குழந்தை பிறந்த காரணத்தினால் அக்குழந்தைக்கு ஸ்ரீனிவாச நாயக் என்றே பெயரிட்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீனியப்ப  நாயக்கன் வளர்ந்து வந்தான். முதலில் சீனிவாசன் நாயக் ன் முந்தைய பிறவியைப் பற்றி சொல்ல வேண்டா

நானும் மத்யமரும்

#நானும் மத்யமரும் 2019. நானும் மத்யமரும். மத்யமர் தலைவர் திரு சங்கர் ராஜரத்தினம் அவர்கள் மத்தியமர் குரூப் ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது அவர் இடும் சில பதிவுகளைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அப்பொழுதே இவரும் திரு பின்னங்குடி சுப்பிரமணியனும் (அவர் எனது நெருங்கிய சொந்தக்காரர்) அவருடனும் திரு முரளிதர பாபு உடனும் இன்னும் சிலருடன் சேர்ந்து ஹோட்டல் பீச் என்று மீட்டிங் நடத்தி அவ்வப்போது சந்திப்புகள் நடைபெறும். அப்பொழுதே சங்கர் ராஜரத்தினம் அவர்கள் ஒரு குரூப் ஃபார்ம் பண்ணி அவர்களுடன்  சநதிப்பை ஏற்படுத்துவார்.அந்த எண்ணம் அடி மனதில் பதிநது இன்று இத்தகைய பெரிய ஒரு குரூப்பை நிர்வாகிக்கும்  தகுதியை அன்றே பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது. நான் மத்யமர் வருவதற்கு முன்பு எனக்கு எழுத தெரியாது .அதுவும் தமிழில் சுத்தமாக எழுதத் தெரியாது. அவ்வப்பொழுது ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் நான் இங்கிருக்கிறேன் அங்கு இருக்கிறேன் இங்கு போகிறேன் இதுபோன்ற வார்த்தைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு எனது மகன் தமிழில் எழுதுவதை பற்றி சொல்லிக் கொடுத்தான். அப்பவும் மொபைலில் எழுதத

மலையின் மூன்று பிறப்பு

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது ஒரு மலையைப் பற்றி .ஒரு மலை மூன்று யுகத்திலும் பகவானுக்கு உதவியது. எவ்வாறு உதவியது அது எந்த மலை என்ன!? அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!!!? முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். அந்தக் காலத்தில் மலைகள் பறக்கும். அதற்கு இறக்கைகள் இருந்தது. ஒரு முறை இந்திரன்  புஷ்பக விமானத்தில் வரும்பொழுது மலையும் பறந்து கொண்டிருந்ததால் சரியாக கவனிக்காமல் இவனது புஷ்பக விமானம் மலையில் மோதி விட்டது. கோபமடைந்த இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டி விட்டான் .அன்றிலிருந்து மலை பறக்கும் தன்மையை இழந்தது .இது ஒன்று. இரண்டாவது நிலையாக பூமியில் இருக்கும் மலை பிறகு வளர ஆரம்பித்தது. உதாரணம் விந்திய மலை. விந்திய மலை வளர்வதை அகத்தியர் அடக்கினார். பிறகு ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் மைந்நாகமலை. இதுபோன்ற மலைகள் பறப்பதும் வளர்வதும்  அந்த காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்தது. இனி கதைக்கு வருவோம். கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்யலாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகுண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுலத்தில் மழை பெய்வித்து