நானும் மத்யமரும்

#நானும் மத்யமரும் 2019.

நானும் மத்யமரும். மத்யமர் தலைவர் திரு சங்கர் ராஜரத்தினம் அவர்கள் மத்தியமர் குரூப் ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது அவர் இடும் சில பதிவுகளைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அப்பொழுதே இவரும் திரு பின்னங்குடி சுப்பிரமணியனும் (அவர் எனது நெருங்கிய சொந்தக்காரர்) அவருடனும் திரு முரளிதர பாபு உடனும் இன்னும் சிலருடன் சேர்ந்து ஹோட்டல் பீச் என்று மீட்டிங் நடத்தி அவ்வப்போது சந்திப்புகள் நடைபெறும். அப்பொழுதே சங்கர் ராஜரத்தினம் அவர்கள் ஒரு குரூப் ஃபார்ம் பண்ணி அவர்களுடன்  சநதிப்பை ஏற்படுத்துவார்.அந்த எண்ணம் அடி மனதில் பதிநது இன்று இத்தகைய பெரிய ஒரு குரூப்பை நிர்வாகிக்கும்  தகுதியை அன்றே பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது.

நான் மத்யமர் வருவதற்கு முன்பு எனக்கு எழுத தெரியாது .அதுவும் தமிழில் சுத்தமாக எழுதத் தெரியாது. அவ்வப்பொழுது ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் நான் இங்கிருக்கிறேன் அங்கு இருக்கிறேன் இங்கு போகிறேன் இதுபோன்ற வார்த்தைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு எனது மகன் தமிழில் எழுதுவதை பற்றி சொல்லிக் கொடுத்தான். அப்பவும் மொபைலில் எழுதத் தெரியாமல் நான் கம்ப்யூட்டரில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு சிறு சிறு வாக்கியங்கள் எழுத ஆரம்பித்தேன்.

இவ்வாறு இருக்கும்பொழுது 28ஆம் தேதி ஜனவரி மாதம் 2018 ஆம் வருடம் என்னை திரு சங்கர் ராஜரத்தினம் அவர்கள் மத்தியமர் குரூப்பில் இணைத்தார். சேர்ந்த சில நாட்களிலும் மாதங்களிலும் ஒரு போட்டியை ஆரம்பித்தார் உங்கள் சிறுவயது கனவு என்று. நானும் ஏர்போர்ஸ் ல்  சேர்ந்ததை ஒரு கட்டுரையாக எழுதினேன் அதை நிறுத்தி ஒரு கோர்வையாக எழுதாமல் நேராக ஒரு கட்டுரை பள்ளிகளில் எழுதுவதுபோல் எழுதினேன். அதற்கு POTW கிடைத்தது என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

ரஜினியை சிறுவயதில் பாலச்சந்தர் பார்த்தவுடனே இவர் பெரிய ஆளாக வருவார் என்று மனதுக்குள் நினைத்தார் என்று கட்டுரையில் படித்திருக்கிறேன். அதுபோல் பெருமைக்காகச் சொல்லவில்லை என் தலையின் பின்னால் ஒளிவட்டம் சங்கருக்குகு தெரிந்ததோ என்னமோ அன்றே எனக்கு அவர் பட்டம் கொடுத்தார். அதிலிருந்து எனது எழுத்து திறமை வலுக்க ஆரம்பித்தது.

சிறுசிறு வாக்கியங்களாக எழுதிக் கொண்டிருந்த நான் நான் டூர் செல்லும் பொழுதும் எனது நண்பர்களிடமும் பக்தி கதைகளை அடிக்கடி கூறிக் கொண்டு இருப்பேன். அவர்கள் எல்லாரும் இவ்வளவு அழகாக கதை கூறுகிறாயே ஏன் இதை மத்தியமரில் பதிவிடக் கூடாது என்று கேட்டார்கள் .அப்பொழுதுதான் எனக்கும் உதித்தது .ஏன் அதை செய்யக்கூடாது என்று. முதன்முதலாக கோவில்களைப் பற்றி தெரிந்த கதை தெரியாத வரலாறு என்று எழுத ஆரம்பித்தேன்.

அதன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்று இன்று  தெரிந்த கதை தெரியாத  வரலாறு என்றால் வாசுதேவன் என்று மிகப் பலரும் அறிந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்டது ராஜரத்தினம் தான் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஓவியத்தை வரைந்து யாரென்று கண்டுபிடியுங்கள் என்று சொல்லும்பொழுது கீர்த்திவாசன் வரைந்த ஓவியத்தை பார்த்து குஜராத் ராதா மேடம் அவர்கள் குஜராத்தை விட்டுவிட்டார்கள் ராதா மேடம் அவர்கள் முதல் பதிவாக திரு வாசுதேவன் சார் என்று போட்டிருந்தார் .அவருக்கு நன்றி கூறி எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள்  மத்தியமர் மக்கள் அனைவரின் மனதிலும் நிற்கிறீர்கள் என்று கூறினார். எப்பேர்ப்பட்ட வார்த்தை  அது.எத்தனை  கோடி பரிசு  கொடுத்தாலும் அந்த ஒற்றை வார்த்தைக்கு ஈடாகாது என்று மிகவும் புளகாங்கிதம் அடைந்து விட்டேன்..

அதுமட்டுமல்ல ஓரிரு மாதங்கள் முன்பு சட்ட சபை அமைப்பது போலும் அதற்கு  அறநிலையத் துறை அமைச்சராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் திருமதி அபர்ணா முகுந்தனும் திருமதி கீத் மாலா ராகவுனும் என்னை தேர்ந்தெடுத்தார்கள். அப்பொழுது அவர்கள் இருவரும் நாமிருவரும் ஒருவரையே தேர்ந்தெடுக்கிறோமே அனைவரும் வாசுதேவன் பெயரையே கூறுகிறார்களே என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்ட பொழுது மனம் பூரித்தது. ஆக நாமும் மத்யமரில் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறோம் என்று மனம் குதுகலித்தது.

இன்று நான் சில பல POTW Yum GEM மும் வாங்கி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மத்தியமர்  நண்பர்களே . எனதுஎழுத்துத் திறமையை மென்மேலும் பளிச்சிட செய்த பெருமை மத்யமர் நணபர்களையே சாரும் என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

last but not the least என்று கூறுவதுபோல் சில அட்மின் களைப் பற்றியும் இங்கு நான் கூறியாக வேண்டும் .தலைவர் தனி முத்திரை பதித்தவர். கீர்த்திவாசன் ராஜாமணி நாட்டில் தற்போது நடக்கும் சிறு விஷயத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கின்ற அதிசய மனிதர்.

அடுத்ததாக நான் அவசியம் கூறவேண்டிய admin மதுரைக்கு வந்து மீனாட்சி என்று பெயர் வரக் காரணம் மீன் ஒரே ஒரு இனம் தான் உலகத்தில் நீரில் இருந்து கொண்டு உறங்காமல் இருக்கிறது .அவ்வாறு மதுரையை உறங்காமல் காத்துக் கொண்டிருப்பதால் தான் அம்மனுக்கு மீனாட்சி அம்மன் என்று பெயர் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் நமது அட்மின் திரு மீனாட்சி உலகநாதன் அவர்கள் உறங்குவார்களா  இல்லையா என்று எனக்கு சந்தேகம் .காரணம்.

ஒருமுறை பதினோரு மணி 30 நிமிடம் இரவு எனது பதிவில் யுவர் post has been approved  by மீனாட்சி உலகநாதன் என்று வந்தது .மற்றொரு நாள் காலை 5 மணி 30 நிமிடத்திற்கு your post has been approved by மீனாட்சி உலகநாதன் என்று வந்தது  11 .30மணிக்கும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். காலை ஐந்தரை. மணிக்கும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எப்பொழுது உறங்குவார்கள் என்பதே தெரியாது.அவ்வளவ   dedication sincerity மீனாட்சி உலகநாதன் அவர்கள்.என் மனமார்ந்த இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

இன்னும் இன்னும் திரு ரேவதி பாலாஜி அவர்கள்.திரு ரோகிணி மேடம் அவர்கள் அனைவரும் அவர்களது பணியை செவ்வனே செய்கிறார்கள் என்று கூறி பதிவு மிகவும் நீண்டு விட்டதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று கூறி நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ