Posts

Showing posts from February, 2021

துளசி மகாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. துளசி மஹாத்மியம். சாலிக்ராம மஹாத்மியம். நான் இன்று எது எழுதலாம் துளசி மஹாத்மியம் கார்த்திகை மஹாத்மியம் ஸ்ரீனிவாச மஹாத்மியம் பண்டரிபுர மஹாத்மியம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது மனைவி வேகமாக வந்து இன்று நீங்கள் துளசி மஹாத்மியம் எழுதுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார். அதுவே வேதம் அதுவே சாஸ்வதம் அதுவே கட்டளை (மனசுக்குள் மத்தியானம் பூவா வேணுமில்ல) அதனால் மனைவி சொல்லே மந்திரம் என்று நினைத்து துளசி மஹாத்மியம் எழுத ஆரம்பித்தேன். இனி துளசி மஹாத்மியம். சங்குசூடன் என்று ஒரு அசுரன் பயங்கர தவம் செய்து யாராலும் அழிக்க முடியாத பல வரங்களைப் பெற்று விட்டான். ஆனால் உலகில் பிறந்த அனைவருக்கும் ஒரு நாள் மரணம் உண்டு அதனால் உனது மனைவி பத்தினித் தன்மையோடு இருக்கும் வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது உனக்கு மரணம் இல்லை என்று வரம் அருளினார் பகவான். பின் அவன் பிருந்தா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அந்த ஸ்திரீ மஹா புண்ணியவதி மஹா பதிவிரதை நிறைய பூஜை புனஸ்காரங்கள் செய்து கணவனே கண் கண்ட தெய்வம் என்றும் பதி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்று வாழ்ந்து வந்தாள். சங்குச