Posts

Showing posts from January, 2019

குடியரசு தினத்திற்காக ஒரு கட்டுரை

இன்று குடியரசு தினம் .இந்தியா குடியரசு   ஆகி 70  ஆண்டுகள் ஆகி விட்டது. .இந்த குடியரசு தினத்தில் நான் இந்திய விமானப் படையில் பணிபுரிந்த போது எனக்கு கிடைத்த சில மெடல்களைப் பற்றி இங்கு குறிப்பிடலாம் என்று இருக்கிறேன் .தயவு செய்து தாங்கள் அனைவரும்  சற்று செவிமடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இதை இங்கு பதிவிடுவதற்கு முக்கிய காரணம் சகோதரி radha sriram அவர்கள்.அவர் சார் ‌ தங்களுக்கு  விமானப் படையில் கிடைத்த மெடல்களைப் பற்றி குறிப்பு எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் .மேலும் வருகிற ஜனவரி 26ம் தேதி அவசியம் தாங்கள் தங்களுடைய மெடல்களை  பற்றிய பதிவு வரவேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவை நான் இங்கு பதிவு செய்கிறேன். 1. முதல் மெடல். WAR MEDAL (Sangram Medal). பாகிஸ்தானின் கிழக்குப் பாகிஸ்தானில் பெங்காலிகள் அதிகளவில் வசித்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்று கோரி பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினர் .அது உள்நாட்டு கலவரமாக வெடித்தது .அதிலிருந்து முஜிபுர் ரகுமான் அவர்கள் பெங்காலிகளுக்கு தலைவராக உருவானார் .அவர் அப்போதைய பிரதமர்

ஒரு சிறு கதை

பிப்ரவரி 3ஆம் தேதி மீட்டிங் இன்ஃபோசிஸ் ஹால்  டி. நகர் சென்னை. கூட்டம் குறைவாக இருக்கிறதே என்று தலைவருக்கு சிறு வருத்தம் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சற்று யோசிப்போமா??. நான் நினைக்கிறேன் .அனைவருக்கும் முகநூல் வழியாகத்தான் பழக்கமே அன்றி வேறு பழக்கம் இல்லை. ஒரு சிலரைத் தவிர அனைவரும் நேரில் கண்டு உரையாடியோ அளவளவியோ பழக்கமில்லை. இதற்கு காரணம் தயக்கம் தயக்கம் தயக்கம். நாம் சென்றால் நம்மை மதிப்பார்களா ?? விட்டு விடுவார்களோ ??நமக்கு மதிப்பு கிடைக்காதோ?? என்ற ஒரு சிறு தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்ச்சியும் மனிதர்களுக்குள் தோன்றுவதால் தான் கூட்டம் வரவில்லையோ என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு அனைவரும் தயக்கமின்றி வரவேண்டும் தக்க மரியாதை அனைவருக்கும் தரப்படும் என்பதை உறுதி செய்வதற்காக ஒரு சிறுகதையை இங்கு கூற விரும்புகிறேன். அங்கீகாரம் என்பது  மனிதர்களுக்கு மிகவும் முக்கியம் .அந்த அங்கீகாரம் குழந்தைகளுக்குக்கூட எவ்வாறு தர வேண்டும் என்பதை இக்கதையின் மூலம் கூற விரும்புகிறேன். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தை

காணவில்லை

அவசரம் மிக அவசரம் அர்ஜெண்ட் வெரி அர்ஜென்ட் நான் நாளை குடியரசு தினத்தை ஒட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் .அது போட்டோ சேர்க்கும் போது தவறுதலாக டெலிட் என்று கொடுத்து விட்டேன் .அது கதையோடு சேர்ந்து டெலிட் ஆகிவிட்டது. இப்பொழுது அந்த கட்டுரையை திரும்பப் பெற இயலுமா என்பதை யாராவது தயவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறேன். நான் 1971 பாகிஸ்தான் இந்தியா யுத்தத்தில் தொடங்கி அனைத்தையும் அதில் எழுதி இருந்தேன். ஞாபகப் படுத்தி மீண்டும் எழுதுவது என்பது சற்று கடினம். யாராவது தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது ஃபோன் எண் 9486419333 தற்போதைய ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் அயர்லாந்தில் இருக்கிறார் நீங்கள் செட்டிங்சில் போய் ஆக்டிவேட் லாகில் முயற்சித்தால் கிடைக்கும் என்று கூறினார் நானும் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை வேறு ஏதாவது வழி இருக்கிறதா

அலப்பறைகளும் மீம்ஸ்களும்

தற்போது மத்தியமரில் பிப்ரவரி 3ஆம் தேதி மீட்டிங் பற்றிய அலப்பறைகளும் மீம்ஸ்களும் வந்து கொண்டிருப்பதால் மக்கள் கவனம் வேறு வழியில் செல்லாது என்ற காரணத்தினால் நான் எனது தெரிந்த கதை தெரியாத வரலாற்றை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு பிறகு பதியலாம் என்று இருக்கிறேன். அதுவரை மக்கள் மனம் இது போன்ற கதைகளில் செல்லாது என்று நினைக்கிறேன். மேலும். ஒரு வசனம் ஒரு பழமொழி ஒரு சொல்வடை உண்டு .அதாவது""" பிரகஸ்பதியே ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய சொல்லை சொல்லவில்லை என்றால் அந்த சொல்லிற்கு மதிப்பில்லை என்று கூறுவார்கள். ஆதலால் எனது பதிவை சொல்ல வேண்டிய நேரம் தருணம் இதுவல்ல என்ற காரணத்தினால் எனது பதிவை பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஒத்தி வைக்கிறேன். எல்லோரும் பல அலப்பறைகளும் பதிவும் போடுவதால் நானும் ஒரு சிறிய அலப்பறை. கீழே படத்தில் காணும் எனது ஃபோட்டோ நேற்ற்ற்ற்ற்ற்று எடுத்த லேட்ட்ட்ட்ட்ட்ட்ஸ்ட் போட்டா. இது தான் நான்.மேக்கப் எல்லாம் ஒன்றும் இல்லாமல் இருக்கும் உண்மையான போட்டோ. ஏன் இந்தப் போட்டோவை இங்கு பதிகிறேன் என்றால் என்னை நேரில் கண்டு யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது எ

யார் பெரியவன் பக்தனா பகவானா

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது பகவான் பெரியவனா?? பக்தன்  பெரியவனா ??அது என்ன?? பகவான் பெரியவனா?? பக்தன்  பெரியவனா?? இதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??. ஒரு சிறந்த பக்தன் தனது பூலோக வாழ்வை முடித்துக்கொண்டு வைகுண்டம் சென்றார். இவன் சென்ற நேரம் பெருமாள் சயனத்திலிருந்தார்.அருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார் .அவள் பகவானின் திருவடிகளை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். பக்தன் பகவானை சேவித்துக் கொண்டு இருந்த பொழுது பகவான் அவன் பூலோகத்தில் செய்த நன்மைகளை எல்லாம் கூறி நீ மிகவும் இனிமையான வாழ்வு வாழ்ந்தவன் பூலோகத்தில் .உனக்கு வைகுண்டத்திலும் இனிமையான வாழ்வு உண்டாகும் என்று கூறினார். அப்பொழுது பக்தன் பகவானை நான் பூலோகத்தில் இனிமையான வாழ்வு வாழ்ந்தது என்னமோ  உண்மைதான். ஆனால் என் மனதில் ஒரு சிறிய குறை இருந்து கொண்டே  இருக்கிறது. என்றான்.இவ்வளவு சிறந்த பக்தனாக உனக்கு குறையா.என்ன கூறு என்று கேட்டார் .அதற்கு பக்தன் பகவானே பூலோகத்தில் எப்போதுமே நீ பெரியவனா நான் பெரியவனா யார் பெரியவர் என்ற ஒரு சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. பூலோகத்தில் கடல் மலை அனைத்தும் பெரிதாக இருக்க இந்

அஷ்டாங்க யோகம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது யோகமுறை. தீட்சை. அஷ்டாங்க யோக முறை .எட்டு பகுதிகளை கொண்டது .அது என்னென்ன எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு தீட்சை தரப்படுகிறது என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா. தீட்சை என்பது சீடர்களிடமிருந்து தீயவைகளை நீக்கி, சீலர்களுக்கு சக்தியையும், ஸித்தியையும் அளிப்பது. தீட்சை அளிப்பதில் எட்டுவகை உள்ளன. அவை 1. சகஷஸ்பீ : குரு தன்ன்னுடைய கண் பார்வையால் தன் சீடர்களுக்கு சக்தி கொடுத்தல் இதற்கு உதாரணமாக மீனை எடுத்துக் கொள்ளலாம். மீன் முட்டை இட்டு தன் கண்களாலேயே முட்டையைப்  பார்த்து குஞ்சு பொரிக்கும்.இதற்கு நயன  தீட்சை என்றும் பெயர். 2. ஸ்பர்ஸம்: சிஷ்யர்களின் தலையை தொட்டு ஆசிர்வதித்து, சக்திகளை அளிப்பது. இது தொடுதல் மூலம் தீட்சை அளிப்பது.உதாரணம் கோழி. கோழி முட்டை இட்டு தன்னுடனே  வைத்திருந்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும். இவ்வகை தீட்சைக்கு  ஸ்பரிச தீட்சை என்று பெயர். 3.வாசா: குரு தன்னுடைய ஆசிர்வாதத்தினாலும், ஆசி வார்த்தைகளினாலும் சிஷ்யர்களுக்கு தீட்சை அளிக்கும் முறை. உடலால் மனதால் ஆசீர்வதிப்பது.இது வாசாவாகும். 4. மானஸி: குரு மனப்பூர்வமா

சஃபாரி வரலாறு

மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக ஆண் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஏன் ஆண் நண்பர்கள் அனைவருக்கும் மட்டும் வணக்கம் என்று கூறுகிறேன் என்றால் இங்கு நடக்கும் அலப்பறைகள் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது . என்ன என்று கேட்கிறீர்களா?? சற்று விரிவாக விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். என்று மத்யமர் மீட்டிங் பிப்ரவரி 3ஆம் தேதி என்று அறிவித்த நாளிலிருந்து இன்றுவரை மத்தியமரில்  உள்ள பெண்கள் அனைவரும் எந்த சாரி எந்த சேலை என்ன மேட்சிங் ப்ளவுஸ் என்று தினமும் ஒரு பதிவாக போட்டுக்கொண்டு அதுமட்டுமல்ல அவர்களுக்குள் போன் செய்து சீக்கிரம் முடிவு எடுங்கள் நான் இந்த கலர் வாங்க வேண்டும் அதை நான் வாங்க வேண்டும் பிளவுஸ் தைக்க வேண்டும் என்று கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக மத்தியமரில் அவர்கள் போடும் பதிவுகள் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. அதுமட்டுமல்ல நண்பர்களே நமக்கும் அவர்களே என்ன டிரஸ் போட வேண்டும் என்று முடிவெடுத்து 40 45 வயது உள்ளவர்கள் பேண்ட் சர்ட் என்றும் 45 லிருந்து 55 வரை இருப்பவர்கள் டி ஷர்ட் என்றும் 55 லிருந்து 60 கல் உள்ளவர்களுக்கு வந்து பைஜாமா என்றும் 60லிருந்து 65 எழுவதற்கு மே