யார் பெரியவன் பக்தனா பகவானா

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது பகவான் பெரியவனா?? பக்தன்  பெரியவனா ??அது என்ன?? பகவான் பெரியவனா?? பக்தன்  பெரியவனா?? இதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??.

ஒரு சிறந்த பக்தன் தனது பூலோக வாழ்வை முடித்துக்கொண்டு வைகுண்டம் சென்றார். இவன் சென்ற நேரம் பெருமாள் சயனத்திலிருந்தார்.அருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார் .அவள் பகவானின் திருவடிகளை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். பக்தன் பகவானை சேவித்துக் கொண்டு இருந்த பொழுது பகவான் அவன் பூலோகத்தில் செய்த நன்மைகளை எல்லாம் கூறி நீ மிகவும் இனிமையான வாழ்வு வாழ்ந்தவன் பூலோகத்தில் .உனக்கு வைகுண்டத்திலும் இனிமையான வாழ்வு உண்டாகும் என்று கூறினார்.

அப்பொழுது பக்தன் பகவானை நான் பூலோகத்தில் இனிமையான வாழ்வு வாழ்ந்தது என்னமோ  உண்மைதான். ஆனால் என் மனதில் ஒரு சிறிய குறை இருந்து கொண்டே  இருக்கிறது. என்றான்.இவ்வளவு சிறந்த பக்தனாக உனக்கு குறையா.என்ன கூறு என்று கேட்டார் .அதற்கு பக்தன் பகவானே பூலோகத்தில் எப்போதுமே நீ பெரியவனா நான் பெரியவனா யார் பெரியவர் என்ற ஒரு சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.

பூலோகத்தில் கடல் மலை அனைத்தும் பெரிதாக இருக்க இந்த மனிதர்கள் தாங்களே உயர்ந்தவர்கள் என்று சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் . உண்மையில் பூலோகத்தில் உயர்ந்தவர் யார். இவ்வாறு மக்கள் கூறுவதற்கு என்ன காரணம் என்று வினவினான். அதற்கு பகவான் மக்கள் கூறுவது சரிதானே உண்மையிலேயே  கடலும் மலையும் பெரிது தானே என்று கேட்டார்.

அதற்கு பக்தன் சுவாமி என்ன கூறுகிறீர்கள். ஏழு கடலையும் ஒரு கையால் வாங்கி  குடித்துவிட்டார் குறுமுனி அகத்தியர் .முருகப்பெருமானும் கிரவுஞ்ச மலையை தகர்த்து இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க எவ்வாறு கடலும் மலையும் பெரிதாகும் என்று வினவினான்.பூலோகத்தில் தானே இவ்வளவும் நடந்தது.அப்படியிருக்க பூலோகத்தில் மலையும் கடலும் பெரிதென்று எவ்வாறு ஒத்துக்கொள்ள முடியும் என்று வினவினார்.

இல்லையப்பா உலகில் பெரியவர்கள் உன்னை போன்ற பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள். எது நடந்தாலும் அனைத்தும் ஆண்டவன் செயல் என்று கூறுவோர் நிறைய இருக்கிறார்கள் என்று பகவான் பதிலுரைத்தார் .அது எவ்வாறு சாத்தியம் தாங்கள் சர்வவியாபி வாமன அவதாரம் எடுத்த போது சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் உலகத்தை அளந்தீர்கள். விண்ணை ஓர் அடியால் அளந்தீர்கள்.அப்படியிருக்க நீங்கள் தானே பெரியவர் என்று திருப்பிக் கேட்டான்.

உடனே பெருமான் ஒரு தேவலோக கண்ணாடியை கொண்டுவரச் சொல்லி அவன் முன்னால் அந்த பக்தனை நிற்கச் சொன்னார். அவனை அந்த கண்ணாடியில் உன் மார்பை பார் என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான் .ஏனெனில் அவ்வளவு சர்வ வியாபியான பகவான் தனது மார்பிற்குள் இரண்டு விரக்கடை அளவுக்கு உள்ளார் .அதைக் கேட்டு என்னை மாற்றி உன் மனதில் வைத்துக் கொண்டு  உள்ளாய்.இப்போது கூறு. யார் பெரியவன் .??நீயா நானா?? நீ தானே பெரியவன்?? என்று கூறினார்.

இதைக் கேட்டு பக்தன் மனம் பூரித்தான். அப்பொழுது பகவான் பக்தனிடம் கூறுகிறார். மனதுருக என்னை எவன் ஒருவன் தியானித்து பூஜித்து சதா சர்வ காலம் என்னை நினைத்துக் கொண்டிருக்கிற பக்தன் பகவானை விட உயர்ந்தவன் .ஆதலால் நீ உயர்ந்தவன் என்று கூறினார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உலகத்தில் சிறந்தது பக்தி . பகவானே கதி என்று பக்தி செய்தால் பகவான் பக்தனுக்கு அருள் புரிவார். பகவானை விட பக்தனே சிறந்தவன் என்று நிரூபிப்பார். ஆதலால் பக்தியே சிறந்தது பக்தி செய்வோம் .நாமும் பகவானை அடைவோம்.

இதிலிருந்து  பகவானை விட பக்தனே சிறந்தவன் என்று தெரிகிறது.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ