Posts

Showing posts from September, 2019

கவிதை போட்டி

கவிதைப்போட்டி # வீழ்வேன் என நினைத்தாயோ!!?? மண்ணில் பிறந்தேன் மனிதனாய்!? மனிதன் என்று சொல்லுதல் தகுமோ! காரணம் சொல்லால் நீவிர் அறிவீரோ? செப்புகிறேன் என்னால் இயன்றதை மட்டும். மனிதன் என்று சொன்னால், பிறந்தவுடன் குடிக்க பால் வேண்டும் கிட்டியதா ? பசித்தவுடன் உண்ண உணவு வேண்டும் கிட்டியதா !? மானம் மறைக்க ஒரு ஆடை வேண்டும் கிட்டியதா!? இவையெல்லாம் இல்லா உலகில் மனிதன் என்று சொல்லுதல் தகுமோ!! பின்பும் வளர்ந்து நின்றேன் உலகில் ஒர் மரமாய் அனைவரின் ஏச்சும் பேச்சும் அளவின்றி கேட்டேன் நான்  தனியாய் ஏழை என்ற ஓர் வரியன்றி வேறு காரணம் தேடி நான் அறியாய் இல்லார்க்கு இல்லையடாஇப்பூவுலகம் நிலையாய். இத்தனையும் சகித்தும் இப்பூவுலகில் வாழ்கின்றேன் இறவாமல் இருப்பதனால்  இங்கு உள்ளோரை கேட்கின்றேன் புவியில் வாழ்வதற்கு பணம் தான் பெரிது என்றால் பாசம் என்ற ஒன்று உண்டு என்று உன் வாழ்நாளில் கண்டீரோ மானிடரே!!?? நீர் என்னை நோகடிக்க சாகடிக்க வார்த்தைகளால் முயன்றாலும் மீண்டும் எழுந்து மனிதனாய் ஜொலிப்பேன் இப்பூவுலகில் ஒருநாள் அன்றி வாழ்வதை விட்டு கோழை போல் வீழ்வேன் என்று நினைத்தீரோ.?? பொய்யாமொழி புலவன் போல்

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. (அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாக முகநூலில் மத்தியமரில் வராமல் இருந்ததற்கு காரணம் எனது மகன் மருமகள் வந்ததும் எனக்கு கண் ஆபரேஷன் ஆனதும் அது இன்னும் சரியாகவில்லை என்பதும் அதுவும் என்னால் சிறிய எழுத்துக்களை ஊன்றிப் படிக்க முடியாததால் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். நான் இடையில் ஒரு பதிவு போட்ட பொழுது நண்பர் வெங்கடேஷ் விஜயராகவன் அவர்கள் மீண்டும் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம் என்று கூறியிருந்தார் .அவரது ஆலோசனைப்படி நான் ஓய்வு எடுத்துக் கொண்டு வரும் ஆறாம் தேதி மீண்டும் டாக்டரிடம் சென்று கண் செக் செய்த பிறகு புதிய மனிதனாக மீண்டும் வலம் வருவேன் என்று உறுதி கூறுகிறேன். இனி மீண்டும் டூர் சென்று பல ஆலயங்களையும் தரிசிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தியும் அதுவுமாக ஒரு பதிவு போடாமல் இருப்பது எப்படி என்ற காரணத்திற்காக விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் பற்றிய ஒரு பதிவு.) இனி கதைக்கு செல்வோம். விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. கணபதி ஃ,விநாயகர் ,விக்னேஷ்வர், சித்தி புத்தி விநாயகர் ,வெற்றி விநாயகர்,

ஓணம் பண்டிகை முதலில் துவங்கும் கேரள கோயில்

தெரிந்த கதை தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று முதன்முதலில் ஓணம் துவங்கும் திருக்கோவில் எது!!? அதன் தாத்பரியம் என்ன ?வரலாறு என்ன? என்பதை சற்று விவரமாக விரிவாக காண்போம். அதற்கு முன்பு ஓணத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.. மகாபலி சக்கரவர்த்தி இந்திர பதவியை அடைய வேண்டி யாகம் செய்ய அவருடைய கர்வத்தை அடக்க வேண்டி மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு மூன்றாவது அடியாக அவன் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். தமிழில் நரகாசுரன் போல அவனும் பாதாளலோகம் செல்வதற்கு முன்பு நான் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கேரள மக்கள் அனைவரையும் காண வருவேன் .அன்று அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளாசமாக ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று பரமாத்மாவிடம் வரம் கேட்க அவரும் அவ்வாறே அருளினார் .அதுவே கேரளத்தில் ஓணம் பண்டிகை திருவோண நட்சத்திரத்தன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.. இனி ஓணம் பண்டிகை முதன்முதலாக ஈந்தக் கோவிலில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது என்று காண்போம். கேரளாவில் ஓணம் முதன்முதலில் எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணி துறையில் பூர்ணத்திரயேஸ்வரர் கோவிலில் தான்