திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

(அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாக முகநூலில் மத்தியமரில் வராமல் இருந்ததற்கு காரணம் எனது மகன் மருமகள் வந்ததும் எனக்கு கண் ஆபரேஷன் ஆனதும் அது இன்னும் சரியாகவில்லை என்பதும் அதுவும் என்னால் சிறிய எழுத்துக்களை ஊன்றிப் படிக்க முடியாததால் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். நான் இடையில் ஒரு பதிவு போட்ட பொழுது நண்பர் வெங்கடேஷ் விஜயராகவன் அவர்கள் மீண்டும் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம் என்று கூறியிருந்தார் .அவரது ஆலோசனைப்படி நான் ஓய்வு எடுத்துக் கொண்டு வரும் ஆறாம் தேதி மீண்டும் டாக்டரிடம் சென்று கண் செக் செய்த பிறகு புதிய மனிதனாக மீண்டும் வலம் வருவேன் என்று உறுதி கூறுகிறேன். இனி மீண்டும் டூர் சென்று பல ஆலயங்களையும் தரிசிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தியும் அதுவுமாக ஒரு பதிவு போடாமல் இருப்பது எப்படி என்ற காரணத்திற்காக விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் பற்றிய ஒரு பதிவு.)

இனி கதைக்கு செல்வோம்.

விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. கணபதி ஃ,விநாயகர் ,விக்னேஷ்வர், சித்தி புத்தி விநாயகர் ,வெற்றி விநாயகர், இப்படி பல பெயர்கள் உண்டு. இதில் இங்கு நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது வலம்புரி விநாயகர் என்ற வெள்ளை விநாயகரைப் பற்றி. இவருக்கென்று திருவலஞ்சுழியில் ஆலயம் உள்ளது .இந்த விநாயகர் எவ்வாறு அங்கு தோன்றினார் .எவ்வாறு திருவலஞ்சுழியில் அமர்ந்தார் என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக காண்போமா.!!!??

நீ எந்த ஒரு செயலையும் துவங்குவதற்கு முன்பு முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கித் தான் தொடங்க வேண்டும் என்பது இந்து தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. விநாயகர் துதி தொடங்கியபின்  அனைத்து நல்ல காரியங்களையும் தொடங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி இந்து மதத்தில்..

ஆனால் அனைத்தும் கற்றுணர்ந்த தேவர்கள் திருப்பாற்கடலை கடையும் பொழுது விநாயகரைத் துதிக்காததன் காரணமாகத்தான் திருப்பாற்கடலில் முதன்முதலாக நஞ்சு வெளிப்பட்டது. அமிர்தத்திற்கு  பதிலாக நஞ்சு வெளிப்பட்டதின்  காரணம் விநாயகரை வணங்காமல் அந்த காரியத்தை தொடங்கியதன் விளைவு தான் திருப்பாற்கடலில் முதலில் நஞ்சு வெளிப்பட்டது என்று தேவேந்திரன் நம்பினான்..

உடனே அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டி கடலில் தோன்றிய வெள்ளை நுரைகளை எடுத்து ஒரு வலம்புரி விநாயகரை உருவாக்கினான். இவர் வெள்ளை விநாயகர் என்றும் வெள்ளைவாரணர் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுவார்.

இவரை தேவேந்திரன் உருவாக்கி முறைப்படித் தொழுது வணங்கிய பிறகு பாற்கடலை கடையும் பொழுது எவ்வித தடங்கலும் இன்றி அனைத்து ஐஸ்வர்யங்களும் இறுதியாக அமிர்தமும் கிடைத்தது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று..

இந்த வலஞ்சுழி விநாயகர் என்றழைக்கப்படும் வெள்ளை விநாயகர் முதலில் கிருதயுகத்தில் கைலாயத்திலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் பிரம்ம லோகத்திலும் இந்த விநாயகர்வழிபடபட்டார்.
தேவலோகத்தில் இந்திரன் வழிபாடு செய்து வந்தான்.

ஒரு முறை இந்திரன் பூலோகம் வரும் பொழுது இந்த வெள்ளை விநாயகர் விக்ரகத்தை எடுத்து வந்தான். காவிரிக்கரையில் உள்ள  அனைத்து ஸ்தலங்களை எல்லாம்  தரிசித்துக் கொண்டு வந்த வேளையில் திருவலஞ்சுழி என்ற ஊரில் அந்த விநாயகரைக் கீழே வைத்தான். அதன்பின் அந்த விக்ரகத்தை அங்கிருந்து எடுக்கவோ அசைக்கவோ நகர்த்தவவோ முடியவில்லை.

அன்றிலிருந்து திருவலஞ்சுழியில் உள்ள வழஞ்சுழிநாதர் கோவிலில் இந்த விநாயகர் வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 9 ஆம் நாளில் இந்திரன் சார்பாக இந்த விநாயகருக்கு சிறப்பு ஆராதனையும் அபிஷேகமும் நடக்கிறது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒன்று.

இவ்வாறாகத் தான் பூலோகத்திற்கு வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படும் வெள்ளை விநாயகர் திருவலஞ்சுழியில் அமர்ந்தார்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

இனி அடுத்த புராணம் ஆறாம் தேதிக்கு மேல் தினமும் வரும் என்று கூறிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ