Posts

Showing posts from June, 2020

#தனித்திறமைகள்2020#

#தனித் திறமைகள் 2020# இப்பவும்  மத்யமரின் தனித் திறமைகள் போட்டிக்காக நான் இன்று மாலை சரியாக நாலு மணி 15 நிமிடத்திற்கு யோகாவில் சில ஆசனம் செய்யலாம் என்று முடிவு செய்து அதன்படி ஹட யோகாவில் சில ஆசனங்கள் செய்துள்ளேன். எல்லா யோகாவும் செய்தால் பல மணி நேரம் ஆகும் என்ற காரணத்தினால் சில குறிப்பிட்ட ஆசனங்களை மட்டும் செய்துள்ளேன் தங்களின் பார்வைக்காக இங்கு வீடியோவும் போட்டோவும் பதிவிட்டுள்ளேன். நன்றி.

ஆர்னவி க்ருஷ்ணாஷ்டகம்

#தனித் திறமைகள் 2020#. நான் முன்பே கூறியபடி எனது பேத்தி அமெரிக்காவில் வசிக்கிறாள். ஏற்கனவே ஆதித்யஹ்ருதயம் சொல்லி அது சங்கரா டிவியில் ஒளிபரப்பாகி அதை நமது மத்யமரில் பதிந்து இருந்தேன். அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். தனித்திறமைகள் போட்டி ஆரம்பித்தவுடன் நான் எனது மருமகளுக்கு போன் செய்து, கிருஷ்ணாஷ்டகத்தை நான்கு தினங்களுக்குள் பேத்திக்கு சொல்லி கொடுத்து, அவள் அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். எனது மாட்டுப் பெண்ணும் அதை உடனடியாக செய்வதாக கூறி, களத்தில் இறங்கி, நான்கு நாள்களுக்குள் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பதை இந்த வீடியோ வை தாங்கள் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எனது பேத்தி ஸ்பஷ்டமாக கூறுகிறாள் என்ற ஒரு காரணத்தின் காரணமாகத் தான், நான் இந்த போட்டியையே அவளுக்கு வைத்தேன். அதில் வென்றுவிட்டாள் என்று மனப்பூர்வமாக கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாங்களும் கண்டு வடுவை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ஆரூஷ் அமெரிக்காவில் ஆவணி அவிட்டத்திற்கு காயத்ரி மந்திரம் சொல்கிறான்

#தனித்திறமை 2020# இப்போவும் எனது பேரன் அமெரிக்காவில் வசிக்கிறான். ஆனால் நான் முன்பே கூறியபடி என் மகன் ஆவணி அவிட்டத்திற்கு காயத்ரீ ஜபம் ஜெபிக்கும் பொழுது பூணூல் போடாத என் பேரனும் அருகில் உட்கார்ந்து ஸ்பஷ்டமாக காயத்ரி மந்திரம் ஜெபிப்பதைப் பாருங்கள். ஒரு முறை இரு முறை சொல்லிக் கொடுத்தது வயது 9 தான் ஆகிறது.

வரங்களும் சாபங்களும்

இன்று நாம் காணவிருப்பது சில சாபங்களும், வரங்களும். அது என்ன? சாபங்களும் வரங்களும், நமது இதிகாச புராணங்களை படித்தால் அதில் பெருமளவு வருபவை சாபங்களும் வரங்களும் தான். சாபத்தின் காரணமாக பிறவி எடுப்பது, வரத்தின் காரணமாக பிறவி எடுப்பது, என்று பல பல கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம். பிரம்மதேவன் சனகாதி முனிவர்களை படைத்தார். அவர்கள் பிரஜாபதி ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர்கள் அதை வெறுத்து தவத்தை நாடினார்கள். ஒருசமயம் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். அப்போது வாயில் காப்பாளர்களாக இருந்த ஜெய விஜயர்கள் அனுமதி மறுக்க உடனே அவர்களுக்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தனர். இதுதான் நமது இதிஹாச புராணத்தில் தோன்றிய முதல் சாபம். இதன் காரணமாகத்தான் இரணியன், இரணியாட்சன், கும்பகர்ணனும், ராவணனும், கம்சனும்,  சிசுபாலனும், தோன்றினார்கள்.  அது மாத்திரமல்ல வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் ,ராம அவதாரம், பலராம, கிருஷ்ண அவதாரம் இந்த சாபத்தின் காரணமாகத் தான் எடுக்க வேண்டி வந்தது. இனி இரண்டாவது சாபம் பார்ப்போம். பிருகு முனிவரின் மனைவி அரக்கர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற

சீனியர் சிட்டிசன் ஹோம் ஆலம்

மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பவும் நமது மத்யமர் குழுவில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் .மேலும் அவர்களுடைய குழந்தைகள் நிறைய பேருடைய குழந்தைகள் வெளிநாடுகளில் செட்டிலாகி இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தனியாக பல ஊர்களில் வாழ்வதற்கு சிரமப்பட்டு கொண்டிருப்பார்கள். நானும் அவர்களில் ஒருவன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த வயதான காலத்தில் சமைப்பது, வீடு பெருக்குவது, மொழுகுவது, பாதுகாப்பிற்கு ஆட்கள் இல்லாதது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய நான் இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சி மாநகரில் 15 கிலோமீட்டர் தூரத்தில் புரவி பாளையத்தில் ஸ்டெப்ஸ் டோன் ஆலமென்று சீனியர் சிட்டிசன் ஹோம் ஒன்று நடக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு வீடு ஒன்று வாங்கி (நமக்கே நமக்கான வீடு ஒன்று) வாங்கி தற்சமயம் அங்கு வசித்து கொண்டு இருக்கின்றேன். அங்கு சாப்பாடு அவர்களே தருகிறார்கள். ஒரு ஆளுக்கு மாதம் 5,000 ரூபாய். நாம் வாங்கும் வீட்டை பொறுத்து மெயின்டனன்ஸ் சார்ஜ் வாங்குகிறார்கள்.(maintenance including house keeping stp water security club house park recreation room gym walking space generator acqa water a

ஆர்னவி சங்கரா டிவியில் ஆதித்ய ஹ்ருதயம்

அனைவருக்கும் வணக்கம்.  நான் ஏற்கனவே அனைவருக்கும் தெரிவித்து இருந்தேன். என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். என் பேரன் பேத்தியும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று. இதற்கு முன்பு என் பேரன் பியானோ வாசித்து அமெரிக்காவில் பிரைஸ் வாங்கியதை பற்றி ஒரு கட்டுரை போட்டு இருந்தேன். இவர்கள் அமெரிக்காவில் வசித்தாலும் என் மருமகள் அங்கு தமிழ் கலாச்சாரப்படி பண்பாட்டின்படி வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு தினமும் ஆன்மீக கதைகளும் நமது சுலோகங்களும் இடைவிடாமல் சொல்லித் தருகிறாள். அதன் காரணமாக ஐந்து வயதே நிரம்பிய என் பேத்தி ஆர்னவி அருண் ,ஆதித்ய ஹ்ருதயத்தை இடைவிடாமல் சொல்லிக்கொடுத்து, கற்று, தேர்ச்சி பெற்று, இன்று சங்கரா டிவியில் 16 .2020 அன்று மாலை நாலரை மணி முதல் 5 மணி வரை என் பேத்தி ஆதித்திய ஹ்ருதயம் சொல்ல அது ஒளிபரப்பாகியது என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் .அதை நமது மத்திய குழு உறுப்பினர்களும் பார்க்க வேண்டும் என்ற அவாவின் காரணமாக இங்கு பதிவிடுகிறேன். நன்றி.