ஆர்னவி க்ருஷ்ணாஷ்டகம்

#தனித் திறமைகள் 2020#.

நான் முன்பே கூறியபடி எனது பேத்தி அமெரிக்காவில் வசிக்கிறாள். ஏற்கனவே ஆதித்யஹ்ருதயம் சொல்லி அது சங்கரா டிவியில் ஒளிபரப்பாகி அதை நமது மத்யமரில் பதிந்து இருந்தேன். அனைவரும் பாராட்டி இருந்தீர்கள்.

தனித்திறமைகள் போட்டி ஆரம்பித்தவுடன் நான் எனது மருமகளுக்கு போன் செய்து, கிருஷ்ணாஷ்டகத்தை நான்கு தினங்களுக்குள் பேத்திக்கு சொல்லி கொடுத்து, அவள் அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

எனது மாட்டுப் பெண்ணும் அதை உடனடியாக செய்வதாக கூறி, களத்தில் இறங்கி, நான்கு நாள்களுக்குள் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பதை இந்த வீடியோ வை தாங்கள் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

எனது பேத்தி ஸ்பஷ்டமாக கூறுகிறாள் என்ற ஒரு காரணத்தின் காரணமாகத் தான், நான் இந்த போட்டியையே அவளுக்கு வைத்தேன். அதில் வென்றுவிட்டாள் என்று மனப்பூர்வமாக கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாங்களும் கண்டு வடுவை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ