Posts

Showing posts from December, 2019

மாதங்களின் பெயர்கள் எவ்வாறு தோன்றியது

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது தமிழ் மாதத்தில் 12 மாதங்களின் பெயர்கள். அது எவ்வாறு ஏற்பட்டது?? என்ன? என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது தமிழாசிரியர் எந்த ஒரு பாடத்தையும் மிகவும் தத்துரூபமாக நடத்துவார். ராமாயணத்தில் கும்பகர்ணனை எழுப்பும் படலத்தில் கையிலுள்ள பிரம்பை (அந்த காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பு வைத்துக்கொள்வது வழக்கம்). உலக்கையாக  பாவித்துக் கொள்ளுங்கள் என்று கூறி , உரலில் உலக்கையை இடிப்பது போல் ""உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் எழுந்திராய் ""என்று உலக்கையால் குத்தி எழுப்புவார்கள் என்று தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். வேறொரு சமயத்தில் ஒரு பாடலை விவரிக்கும் பொழுது"" தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும்  சங்கினமும் நீரோடு உலாவி வரும் நெல்லையே கார் ஓடும் கந்தர்ந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் காப்பு"" என்ற பாடலை அது தோன்றிய விதம் அதன் வழித் தோன்றல்கள் அனைத்தையும் அழகாக விவரமாக கூறுவார் .(இதைப் பற்றிய பதிவை நான் தனியாக இடுகிறேன்).

மகாவிஷ்ணு மார்பில் ஸ்ரீதேவி பூதேவி அடைக்கலம் புகுந்த கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு . நாம் கோயில்களில் ஆலயங்களில், ஸ்ரீரங்கத்தில் ,திருவனந்தபுரத்தில், அனேக இடங்களில் நாம் மகாவிஷ்ணுவை பார்த்திருப்போம், மகாவிஷ்ணு சிலா ரூபத்தில் ஆதிசேஷன் குடை தாங்க, வஷ்சஸ்தலத்தில்  ஸ்ரீ  தேவியும் (மார்பில்) ஸ்ரீதேவியும் ,பாத கமலத்தில் பூதேவியும் அமர்ந்திருப்பார்கள். இதன் தத்துவம் ,தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??. ஒருமுறை பாற்கடலில் மகாவிஷ்ணு துயிலும் பொழுது சற்று கண்ணயர்ந்து விட்டார். அப்போது அரக்கர்கள் ஆன மது, கைடபர், ஆகியோர் பாற்கடலில் தோன்றி ஸ்ரீதேவியையும், பூதேவியையும், கவர்ந்து செல்ல முயன்றனர். அவ் வரக்கரர்களைக் கண்டு பயந்த  ஸ்ரீ தேவித் தாயாரும் பூதேவித் தாயாரும் பகவானை எழுப்பக்கூடாது .எழுப்பினால் குற்றம் என  நினைத்து என்ன செய்வது என்று ஒரு வினாடி ஆலோசித்து ஸ்ரீதேவி பகவானின் மார்பிலும் (வஷஸ்தலத்தில்) பூதேவி தாயார் பகவானின் பாதத்திலும் சரணடைந்தனர். அப்போது ஆதிசேஷன் பகவானின் நித்திரையைக் கலைக்கக் கூடாது என்று வருந்தி தன் வாயில் உள்ள விஷத்தை உமிழு விஷத்தின் நெடியினால் அரக்கர்கள் பயந்து அவ்விடம் விட்டு ஓடினர். நித்திரை கலை

ஆத்மவிவாகம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. நம் அனைவருக்கும் தெரியும் கல்யாணம், திருமணம், விவாகம் என்றால் என்ன என்பது .ஆணும் பெண்ணும் ஒன்று இணைந்து நடத்தும் வாழ்க்கை கல்யாணம் ,திருமணம் ,விவாகம் என்று கூறுவார்கள். ஆனால் ஆத்மவிவாகம் என்றால் என்ன என்று தெரியுமா ??!அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??. ராமாயணத்தில் பால காண்டத்தில் ராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடைபெறுகிறது. அப்பொழுது சீதையின் தந்தை ஜனக மகாராஜா ""ராமா ""என்று பெயர் பொறித்த ஒரு அங்குலியத்தை (மோதிரத்தை) தசரதனிடம் கொடுத்து சீதைக்கு போட்டுவிடும் படி கூறுகிறார். ஆனால் சீதை  எனக்கு வேண்டாம் இதை ராமனே போட்டுக் கொள்ளட்டும் என்று சீதையே வாங்கி இராமனின் கையில் அணிகிறார் .இது ஒரு பகுதி. ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் அசோகவனத்தில் வைத்திருக்கும் பொழுது சுந்தரகாண்டத்தில் ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக்கொண்டு வந்து பல இடங்களில் தேடி இறுதியாக அசோகவனத்தில் கண்டு அவள் தன் வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில் (ஆத்மஹர்த்தி )செய்யும் நேரத்தில் ராமாயணத்தை பாடி அதன் மூலம் அவள் உயிரைக் காப்பாற்றி தான் இன்னார் என்று கூறுகிறார் .ச

ஒரு அப்பாவிற்கு தன் பெண்ணே உயர்ந்தவள்

கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சி கே கே ஜி கல்யாண மண்டபத்தில் ராமாயண சொற்பொழிவு திரு.தாமல் ராமகிருஷ்ணனால் நடத்தப்படுகிறது.நேற்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கூறினார். அதை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தால் பகிர்கிறேன். அதாவது அக்காலம் தொட்டு இக்காலம் வரை மன்னரே ஆனாலும் குடிமக்கள் ஆனாலும் அனைவருக்கும் ஒரு பெண் என்ற முறையில் பெற்ற தகப்பனாருக்கு தன் பெண்ணே மிகவும்  உயர்ந்தவள் என்ற எண்ணம் இயற்கையாகவே உண்டு .இது ராமாயண காலத்திலேயே உண்டு என்று கூறும்பொழுது தற்காலத்தைப் பற்றி கூறவும் வேண்டுமோ!!??? அதாவது சுயம்வரம் நடக்கிறது .ராமன் சிவதனுசுவை முறித்துவிட்டார். அனைவரும் கூடி திருமணத்தை நிச்சயம் செய்து திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது மூன்று தலைமுறையை கூறி  கன்னிகா தாரணம் செய்வார்கள் .அவ்வாறு ராமனுடைய பரம்பரையை குலகுரு வசிஷ்டர் கூறுகிறார் எவ்வாறு?? நாபாகு மகாராஜா  நப்த்ரே அஜ மஹாராஜா பவித்ரே தசரத மகாராஜா புத்ரே சாட்சாத் மகாவிஷ்ணு ரூபாய ஸ்ரீ ராமா என்று கூறி முடிக்கிறார். உடனே ஜனக மகாராஜா அவருடைய குலகுரு சனந்தர் கூற சனகர் கூறுகிறார். அவருடைய மூன்று தலைமுறையை கூறிவிட்டு சாட்சாத் மகால

வாரணம் ஆயிரம் விளக்கம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.  கோதை நாச்சியார் என்றழைக்கப்படும் ஆண்டாள்  நாச்சியார்  தனது நாச்சியார் திருமொழியில் ஆறாம் பத்து பாடலில்,  வாரணம் ஆயிரம் புடை சூழ நாரணன் நம்பி நடக்கின்றான் என்று ஒரு பாடல் எழுதியுள்ளார்.  வாரணம் ஆயிரம் அதாவது ஆயிரம் யானைகள் புடைசூழ தன்னை கண்ணன் மணப்பெண்ணாக ஏற்றுக்கொள்வதாக வரும் பாடல் .இதில் ஆண்டாள் ஆயிரம் யானைகள் என்று ஏன் குறிப்பிட்டார்?? என்ன காரணம் ??என்ன கணக்கு ??ஏதோ பேச்சுக்கு  சொல்வதென்றால் 100 200 என்று குறிப்பிட்டு இருக்கலாமே!. குறிப்பாக ஆயிரம் என்று  சொல்வதற்கு என்ன அர்த்தம் .பெரியவர்கள் அதுவும் ஆண்டாள் போன்ற சிறந்தவர்கள் ஏதாவது தவறாக குறிப்பிடுவார்களா!! அதற்கான காரணம் என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!?? கோதை என்று பெரியாழ்வாரால் செல்லமாக அழைக்கப்படும் பெண் ஆண்டாள். சிறுவயது தொட்டே பெரியாழ்வார் பக்தி கதைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் ஒரு வரி விடாமல் தன் பெண்ணிற்கு கூறிக் கூறியே அவளை வளர்த்துள்ளார். அதன் காரணமாக பருவ வயது அடைந்த பின்பு கோதை நாச்சியார்  மானிடர்க்கென்று  வாழ்கிலேன் மணந்தால் அந்தக் கண்ணனையே மணப்பேன் என்று மனதில் வை

பெற்றோர் சொல் கேட்க வேண்டும்

இந்தக் காலத்து பிள்ளைகள் பெற்றோர்கள் ஏதாவது சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள். பெற்றோருடன் சண்டை போடுகிறார்கள். அதனால் விளைந்த விளைவும் இறுதியில் என்ன நடந்தது என்பதையும் ஒரு சிறு கதை மூலம் விளக்கலாமா??? ஒரு பெற்றோர் தங்கள் மகனிடம் ஒழுக்கமாக ,இரு நன்றாக படி ,பொய் பேசாதே, கெட்டவர்களுடன் சேராதே, தொலைக்காட்சி பார்க்காதே ,என்று அடிக்கடி புத்திமதி சொல்லி வந்தார்கள். பயங்கர உபதேசம் செய்வதே இவங்களுக்கு பொழப்பா போச்சு,  நினைத்து  வேண்டாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் அறிவுரைப்படி பெற்றோர்களை வெறுத்து விட்டான். ஒருமுறை அந்த மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தது .நண்பர்கள் உற்றார் உறவினர்கள் யாருமே அருகில் வரவில்லை .பெற்றோர் மட்டும் அக்கறை எடுத்து அவனை மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கிருந்து நர்சுகள் அவனிடம் அன்பாக பேசி மருந்து கொடுத்தனர் .சரியான நேரத்திற்கு உணவு ஊட்டினர்.அன்பாகவும் பாசமாகவும் அவனுடன் பேசினர். தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட நர்சுகளை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு நாளில் நோய் குணமாகி வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது தன் பெற்றோரிடம் இந்த மருத்துவமனையில் உ