ஆத்மவிவாகம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

நம் அனைவருக்கும் தெரியும் கல்யாணம், திருமணம், விவாகம் என்றால் என்ன என்பது .ஆணும் பெண்ணும் ஒன்று இணைந்து நடத்தும் வாழ்க்கை கல்யாணம் ,திருமணம் ,விவாகம் என்று கூறுவார்கள். ஆனால் ஆத்மவிவாகம் என்றால் என்ன என்று தெரியுமா ??!அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??.

ராமாயணத்தில் பால காண்டத்தில் ராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடைபெறுகிறது. அப்பொழுது சீதையின் தந்தை ஜனக மகாராஜா ""ராமா ""என்று பெயர் பொறித்த ஒரு அங்குலியத்தை (மோதிரத்தை) தசரதனிடம் கொடுத்து சீதைக்கு போட்டுவிடும் படி கூறுகிறார். ஆனால் சீதை  எனக்கு வேண்டாம் இதை ராமனே போட்டுக் கொள்ளட்டும் என்று சீதையே வாங்கி இராமனின் கையில் அணிகிறார் .இது ஒரு பகுதி.

ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் அசோகவனத்தில் வைத்திருக்கும் பொழுது சுந்தரகாண்டத்தில் ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக்கொண்டு வந்து பல இடங்களில் தேடி இறுதியாக அசோகவனத்தில் கண்டு அவள் தன் வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில் (ஆத்மஹர்த்தி )செய்யும் நேரத்தில் ராமாயணத்தை பாடி அதன் மூலம் அவள் உயிரைக் காப்பாற்றி தான் இன்னார் என்று கூறுகிறார் .சீதை நம்ப மறுக்கிறார் .பல அடையாளங்களைக் கூறி மீண்டும் சந்தேகம் இருக்கவே இறுதியாக ராமனால் கொடுக்கப்பட்ட ""ராமா"" என்று பொறிக்கப்பட்ட அங்குலியத்தை (மோதிரத்தை) கொடுக்கும் பொழுது அதை வாங்கி அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்கிறார். இது இரண்டாவது பகுதி.

ஆஞ்சநேயர் நான் திரும்பி செல்கிறேன் என்று கூறும்பொழுது மீண்டும் பல கதைகளையும் கூறியும் திருப்தியுறாத ஆஞ்சநேயன் தங்களைப் போல் ராமரும் நம்ப மறுத்தால் நான் என்ன செய்வது என்று வினவ இறுதியாக தன்னுடைய சூடாமணியை தருகிறார்.

அதை வாங்கிக்கொண்டு இக்கரை அடைந்து ,அனைவருடனும் மதுவனம் சென்று அழித்து ,ராமரைக் கண்டு, ""கண்டேன் சீதையை ""என்று கூற, ஒவ்வொரு வரியாக நடந்த விவரத்தை கூற ,இறுதியாக ராமர் ஆஞ்சநேயரை ஏறிட்டுப் பார்க்க, சீதை கொடுத்த சூடாமணியை ராமன் கையில் கொடுக்க, அதை வாங்கி அவர் அப்படியே சீதையின் நினைவாக ஆலிங்கனம் செய்ய, அசோகவனத்தில் சீதை அங்குலத்தை ஆலிங்கனம் செய்ய ,இருவரும் ஒன்றிணைந்து இருவரும் ஒருவர் நினைப்புடன் வாழ்வதே ""ஆத்மவிவாகம்"" திருமணங்களில் ஒன்றிணைந்து ஒருசேர இருவரும் இவர் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டும்  அவர் இவரைப் பற்றியே நினைத்துக் கொண்டும் இருப்பதற்கு அதற்குப் பெயர்தான் ""ஆத்ம விவாகம்""

மனதால் இருவரும் இணைந்து, ஒருவர் மற்றவரைப் பற்றிய எண்ணத்தில், சிந்தனையில் ,நினைப்பில் ஆத்மாவோடு இணைந்து வாழ்வதே ""ஆத்மவிவாகம்"" என்று பெயர்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ