Posts

Showing posts from June, 2019

இன்கம்டாக்ஸ்

அனைவருக்கும் வணக்கம். நான் ஜூலை 15 வரை விடுமுறை என்று கூறியிருந்தேன். இன்றுதான் எனது மகன் மருமகள் பேரன் பேத்தி வந்துள்ளார்கள் .ஆதலால் இன்று என்னால் எதிலும் பதிவு போட முடியாத சூழ்நிலையில் இருந்த போதிலும் மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அதை மட்டும் இங்கு பதியலாம் என்று இருக்கிறேன். இது தெரிந்த கதை தெரியாத வரலாறு அல்ல. இது தெரிந்த வார்த்தை தெரியாத வரலாறு. அது என்ன தெரிந்த வார்த்தை தெரியாத வரலாறு. அதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா. நான் முன்பே கூறியிருந்தபடி சீனியர் சிட்டிசன் ஹோமில் ஒரு வீடு வாங்கி உள்ளேன் அதை நாங்கள் செல்லமாக குடில் என்று அழைப்போம்.அதில் நாளைக்கு கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறேன்.அதன் காரணமாக அந்த குடிலுக்கு இன்று சென்று வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒரு கடையில் ஒரு பொருள் வாங்குவதற்காக சென்றேன் .அப்பொழுது கடையை ஒட்டி மாடி உள்ளது .அந்த மாடிப்படியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார் அவரைப் பற்றிய சிறிய விளக்கம். மாடிப் படியில் உட்கார்ந்ததருந்த அவர் மிகவும் வயதானவர். கலைந்த தலை. மெல்லிய தேகம் .அழுக்கு சட்டை. கிழிந்த லுங்கி. அதுவும் முழங்காலுக்குமேல் கையில