இன்கம்டாக்ஸ்

அனைவருக்கும் வணக்கம். நான் ஜூலை 15 வரை விடுமுறை என்று கூறியிருந்தேன். இன்றுதான் எனது மகன் மருமகள் பேரன் பேத்தி வந்துள்ளார்கள் .ஆதலால் இன்று என்னால் எதிலும் பதிவு போட முடியாத சூழ்நிலையில் இருந்த போதிலும் மிகவும் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அதை மட்டும் இங்கு பதியலாம் என்று இருக்கிறேன்.

இது தெரிந்த கதை தெரியாத வரலாறு அல்ல. இது தெரிந்த வார்த்தை தெரியாத வரலாறு. அது என்ன தெரிந்த வார்த்தை தெரியாத வரலாறு. அதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

நான் முன்பே கூறியிருந்தபடி சீனியர் சிட்டிசன் ஹோமில் ஒரு வீடு வாங்கி உள்ளேன் அதை நாங்கள் செல்லமாக குடில் என்று அழைப்போம்.அதில் நாளைக்கு கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறேன்.அதன் காரணமாக அந்த குடிலுக்கு இன்று சென்று வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒரு கடையில் ஒரு பொருள் வாங்குவதற்காக சென்றேன் .அப்பொழுது கடையை ஒட்டி மாடி உள்ளது .அந்த மாடிப்படியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார் அவரைப் பற்றிய சிறிய விளக்கம்.

மாடிப் படியில் உட்கார்ந்ததருந்த அவர் மிகவும் வயதானவர். கலைந்த தலை. மெல்லிய தேகம் .அழுக்கு சட்டை. கிழிந்த லுங்கி. அதுவும் முழங்காலுக்குமேல் கையிலோ பீடி.என்ன இவரை பற்றி கூறுகிறேன் என்று கேட்கிறீர்களா?? இவரை பற்றியதுதான் கதை. கூறுகிறேன் கேளுங்கள்.

இவர் யாரிடமுமோ  மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். சாதாரணமாக அடுத்தவர்கள் பேச்சை கவனிப்பது என்பது எனக்கு வழக்கம் கிடையாது. ஆனால் இவருடைய பேச்சை கவனிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. காரணம். மறுமுனையில் இருந்து இவருக்கு போன். அண்ணே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு இவர் பதிலளிக்கிறார்.

காலையில ஒரு தொகை இன்கம்டாக்ஸ் கட்டிவிட்டேன். மீதித் தொகையை சாயங்காலம் கட்டி விடுவேன். நீ இன்கம்டேக்ஸ் கட்டி விட்டாயா என்று இவர் வினவினார்.

அவர் கூறிய வார்த்தையை கேட்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். உடல் தேகம் அனைத்தும் நடுங்கியது. காரணம் ஆளின் தோற்றப்பொலிவும் அவர் கூறும் வார்த்தைக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லையே என்று என்னுள் ஒரு ஆவல் தோன்ற  இவர் பேசி முடித்ததும் இவர் என்ன வியாபாரம் என்ன தொழில் எத்தனை வருமானம் எவ்வளவு வரி கட்டுகிறார் என்று அனைத்தையும் நாம் கேட்டு  விட வேண்டும் என்று அவர் பேசி முடிக்கும் வரை அருகிலேயே காத்திருந்தேன்.

அவர் பேசி முடித்தவுடன் மிகவும் மரியாதையுடன் பவ்யமாக அவரிடம் சென்று ஐயா தாங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் ,எத்தனை வருமானம், என்ன வியாபாரம், எவ்வளவு வரி, கட்டுகிறீர்கள் என்று அடக்கத்துடன் பவ்வியமாக கேட்டேன் .காரணம் வரி கட்டுபவர் அல்லவா.

அவர் உடனே கூறிய வார்த்தைகளை சற்றும் பிசகாமல் அப்படியே கூறுகிறேன்.

சாமி சும்மா இருங்க சாமி, வலதுபக்கம் பார்த்தீர்களா சாமி, ஒரு பெரிய போர்டு இருக்குல்ல சாமி,  டாஸ்மார்க்னு அதுக்குத்தான் சாமி  காலைல ஒரு இருநூறு  சாயங்காலம் ஒரு இருநூறு என்று  ஒருநாளைக்கு  ரெண்டு தடவை கட்டுவோம் சாமி.700 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதிக்கிறேன் சாமி . காலைல ஒரு தடவை சாயங்காலம் ஒரு தடவை ன்னுஎங்க வருமானத்திலிருந்து கட்றோமே  அதுதான் சாமி வருமானத்திலிருந்து கட்றோம்ல அதுக்கு நாங்க  செல்லமா income tax என்று சொல்வோம் சாமி .அவ்வளவுதான் வேற ஒன்னுமில்ல சாமி என்று கூறினார்..

நான் வெலவெலத்துப் போய்விட்டேன் ஆடி போய் விட்டேன் அவரிடமே கூறினேன் ஐயா ஒரு நிமிஷத்துல என்னை ஆட்டிப்பட்டீங்க .என் உடம்பு ஆடி போச்சு என்று சொல்லி நாட்டில் இன்னும் என்னென்ன வார்த்தைக்கு என்னென்ன கோட் வேர்ட் வைத்திருக்கிறாரோ என்று வியந்து மனம் நொந்து வீடு வந்து சேர்ந்தேன்.

இது இன்று நடந்த சுவாரசியமான தகவல் என்பதால் இதை அனைவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறி இனி எனது அடுத்த பதிவு ஜூலை 15 அப்புறம் தான் வரும் என்று கூறி நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ