Posts

Showing posts from March, 2019

கருக்கல்

உலகிலேயே நமது தாய் மொழி தமிழ் மொழிக்கு இணையான மொழி வேறு இல்லை என்று கூறலாம். காரணம் தமிழில் உள்ள சில வார்த்தைகளுக்கு நிகரான வார்த்தைகள் இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான நிச்சயமான சத்தியமான உண்மை. ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் எங்கள் கொங்கு தேசத்தில் ஒரு வார்த்தையை பிரயோகிப்பார்கள். சாதாரணமாக கிராமத்தில் உள்ளவர்கள் அசாதாரணமாக உபயோகிப்பார்கள். ஆனால் அதற்கு நிகரான வார்த்தை இன்று வரை வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதுதான் உண்மை. சாண்டில்யன் அவர்களுடைய ஒரு சரித்திர நாவலில்  இந்த வார்த்தையைச் சிலாகித்து எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். அது  என்ன நாவல் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கூட கூறியிருக்கிறார் இதற்கு நிகரான வார்த்தை எங்கும் இல்லை என்று. என்னடா பயங்கர சஸ்பென்ஸ் வைக்கிறான் இன்னும் வார்த்தையை கூறவில்லையே என்று யோசிக்கிறீர்களா!?? இதோ கூறுகிறேன். அத்தகைய அருமையான வார்த்தை என்ன தெரியுமா??                        """கருக்கல்"""" இதற்கு இணையான நிகரான வார்த்தை இதுவரை எந்த மொழியிலும் இல்லை. ""கருக்கல்

பணம் பதவி அந்தஸ்து முதலியவை மனிதனை மாற்றுமா

பணம் பதவி அந்தஸ்து சமூகத்தில் ஏற்றத் தாழ்வு முதலியவை ஒரு மனிதனின் குணத்தை செயலை சொல்லை நடவடிக்கையை மாற்றுமா! மாற்றாதா? என் பதிவைப் பார்த்து தீர்ப்பை நீங்களே கூறுங்கள். 2014ஆம் வருடம் மே மாதம். தேதி சரியாக நினைவில் இல்லை. நான் எனது வீடு சம்பந்தமாக பத்திரத்தை பதிவு செய்யும் விஷயத்திற்காக வேண்டி பொள்ளாச்சி பத்திரப்பதிவு ஆபீசில் நின்று கொண்டு இருக்கிறேன். ரிஜிஸ்ட்ரர் வரத் தாமதமாகும் என்று சொன்னதால் நான் வெளியில் காத்திருக்கிறேன் அப்பொழுது வெள்ளை  வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கொண்டு இன்னொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார் .பொழுது போக வேண்டுமே என்ற நோக்கில் நான் அவரிடம் உரையாடலைத் தொடர அவரும் என்னிடம் பேசுகிறார் எப்படி.!? நான் தாங்க மகேந்திரன் எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் எண்ணெயைத்தான் அம்மா ஜெயலலிதா பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்காங்க .நான் தான் பொள்ளாச்சி தொகுதியில் எம்.பி க்கு நிக்கறேங்க. நாமினேஷன் ஃபைல் பண்ணிட்டா ரிஜிஸ்டிரார் ஆபிஸீக்கு வரமுடியாது. ஆதலால் கொஞ்சம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வேலையை அதுக்குள்ள முடிக்கனுன்னு வந்திருக்கேங்க .என்னைக்கு நாமினேசன் தாக்கல் செய்யணும்னு

மாங்காய் உப்பும் சேர்த்து நன்கு சாப்பிட்டேன்

ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று. அதற்கு என்ன அர்த்தம் என்றால், சிறுவயதில் பழகிய பழக்கம் எத்தனை வயதானாலும் நம்மை விட்டு விலகாது போகாது என்பதுதான் அதன் அர்த்தம். இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் நான் சிறுவயதில் பழனியில் இருந்த பொழுது பழனி மலையை சுற்றி கிரிவலம் வரும் பொழுது மூல வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் உண்டு .அங்குதான் சென்று நாங்கள் நீராடுவோம். சில நேரங்களில் சாயந்தரம் ஆறு ஏழு மணி வரை கூட குளிப்போம். அப்போதெல்லாம் எங்கள் தலை மேல் தண்ணீர் பாம்பு உருண்டு ஓடும். அதைப்பற்றி எல்லாம் அப்பொழுது பயம் இல்லை. நான் முக்கியமாக கூற விரும்புவது அவ்வாறு உள்ள வாய்க்காலின் அருகில் மாங்காய் மரம் நிறைய காய்த்துத் தொங்கும் .கிளிமூக்கு மாங்காய் ஆக. எனக்கு சிறுவயதிலிருந்தே மாங்காய் என்றால் கொள்ளை பிரியம் .நிறைய பறித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்து நறுக்கி உப்பு மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடுவேன். இது எனது எட்டு பத்து வயதில் தொடங்கிய பழக்கம். நான் தஞ்சாவூரில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் திருமணமான பிறகு என் மாமனார் வீட்டிற்கு செல்வேன். ஒரு நாள் அவர்கள்

அரசியல் வத்தக்குழம்பு

வத்தக்குழம்பு செய்வது எப்படி? (எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சரியான அட்ரஸுக்குத்தான் வந்திருக்கீங்க!) விரைவில் தமிழகத்தில் (இந்தியா) நடைபெறவிருக்கிற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு! வத்தக்குழம்பு (அ) தேர்தல் அறிக்கைக்குழம்பு செய்வது எப்படி? தேவையான பொருட்கள் இலவசச்சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு மொழிப்பற்று - 1 தேக்கரண்டி சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்) வறுமையொழிப்பு- 2 தேக்கரண்டி ஈழம்-சிறிதளவு இட ஒதுக்கீடு-1/2 தேக்கரண்டி வரிக்குறைப்பு- 5 பல் கொள்கை-சிறிதளவு வளர்ச்சித்திட்டங்கள்-சிறிதளவு சமூகநீதி-1/2 தேக்கரண்டி மதச்சார்பின்மை-தேவையான அளவு விவசாயம்-1 தேக்கரண்டி மானியங்கள்-3 தேக்கரண்டி சுயபிரதாபம்-1 கைப்பிடி இலவசச்சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும். மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச்சலுகைகள் கரைசலை ஊற்றி மதச்சார்பின்மை போட்டு கொதிக்க வ

பஞ்ச பாத்திரம்

பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது? பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம்  இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு,  ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர். அது என்ன பஞ்ச பத்ரம்? அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும்.  இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு  உகந்தது துளசிதளம் ( திருத்துழாய்). ஸ்மார்த்தார்கள

சாலிவாகன சகாப்தம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது சாலிவாகனன்  கதை.சாலிவாகனன் யார்?? எவ்வாறு தோன்றினார்?? ஏன் தோன்றினார் ??சாலிவாகன ஆண்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது !!அதன் காரணம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??. உஜ்ஜயினியில் ஆட்சி செய்து 2000 வருஷம் ஆட்சிக் கட்டிலில் இருந்த விக்கிரமாதித்தனுக்கு சாலிவாகனனால் தான் மரணம் என்று சாபம் உள்ளது. அப்பேர்ப்பட்ட சாலிவாகனன் எவ்வாறு தோன்றினான் என்று பார்ப்போம். சாலிவாகனன் தோன்றியதைப் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. நமது கதையின் கருத்தை பின்னால் கூறுகிறேன். முன்னாள் ஒரு சிறுகுறிப்பு மட்டும் தருகிறேன். ஒரு நாள் ஒரு அந்தணர் தன் மனைவியை விட்டு வெகுதூரம் சென்று ஒரு நதியைக் கடந்து பணி நிமித்தமாக சென்றார். அவர் திரும்பி வரும் பொழுது நாள் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு இந்த நேரத்தில் ஒரு பெண் கருவுற்றால் மிகுந்த பலசாலியான ஒருவனை பெறுவாள் என்று ஆராய்ந்து நதியை கடக்க வேகமாக தன் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறார் .ஆனால் நதியில் வெள்ளப்பெருக்கு உண்டான காரணத்தினால் அவர் நினைத்த உடன் அவருடைய வீட்டை அடைய முடியவில்லை. அந்த நேரம் அங