கருக்கல்

உலகிலேயே நமது தாய் மொழி தமிழ் மொழிக்கு இணையான மொழி வேறு இல்லை என்று கூறலாம். காரணம் தமிழில் உள்ள சில வார்த்தைகளுக்கு நிகரான வார்த்தைகள் இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான நிச்சயமான சத்தியமான உண்மை.

ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் எங்கள் கொங்கு தேசத்தில் ஒரு வார்த்தையை பிரயோகிப்பார்கள். சாதாரணமாக கிராமத்தில் உள்ளவர்கள் அசாதாரணமாக உபயோகிப்பார்கள். ஆனால் அதற்கு நிகரான வார்த்தை இன்று வரை வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதுதான் உண்மை.

சாண்டில்யன் அவர்களுடைய ஒரு சரித்திர நாவலில்  இந்த வார்த்தையைச் சிலாகித்து எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். அது  என்ன நாவல் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கூட கூறியிருக்கிறார் இதற்கு நிகரான வார்த்தை எங்கும் இல்லை என்று.

என்னடா பயங்கர சஸ்பென்ஸ் வைக்கிறான் இன்னும் வார்த்தையை கூறவில்லையே என்று யோசிக்கிறீர்களா!?? இதோ கூறுகிறேன்.

அத்தகைய அருமையான வார்த்தை என்ன தெரியுமா??
                       """கருக்கல்""""

இதற்கு இணையான நிகரான வார்த்தை இதுவரை எந்த மொழியிலும் இல்லை.

""கருக்கல்""  என்றால் பொழுது சாய்ந்து காலையில் சூரியனும் சந்திரனும் மறையாத ,பொழுது புலராத, அதேசமயம் இருட்டும் அல்லாத, இன்னும் சற்று நேரத்தில் விடியப்  போகிற பொழுது புலர போகிற நேரத்தை ""கருக்கல் ""என்று கூறுவார்கள்.

கிராமத்தில் பார்த்தீர்கள் என்றால்  ""புள்ள" பொழுதோட போயிட்டு கருக்கலில் வந்துடறேன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். அதாவது வைகறைப் பொழுதில் சென்று விடியலுக்கு முன் வீட்டிற்கு வந்து விடுவேன் என்பதை இவ்வாறு உழைப்பார்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கு இணையான தமிழ் வார்த்தை இல்லை என்று நினைக்கிறேன் .ஏதாவது இதற்கு இணையான வார்த்தை இருந்தால் கூறுமாறு கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ