Posts

Showing posts from March, 2020

என் வாழ்வின் பொன்னான தருணங்கள் ஆர்னவி குட்டி கதை

#என் வாழ்வில் நடந்த பொன்னான தருணங்கள்  2. என்னுடைய மகன் மருமகள் பேரன் பேத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர் . எனது பேத்தியின் பிறந்த நாளுக்காக நான் ஜனவரி மாதம் இங்கிருந்து செல்பவர்கள் மூலமாக அவளுக்கு ஏற்கனவே நான் வாங்கி கொடுத்த கொலுசை தொலைத்து விட்டதால் புதியதாக நான் இங்கிருந்து வேறு ஒருவர் மூலமாக அனுப்பி வைத்தேன். அவள் பிறந்த நாள் அன்று அந்த கொலுசு கிடைக்கப் பெற்று அதை காலில் அணிந்து கொண்டு எனக்கு வீடியோ கால் மூலமாக எனக்கு காண்பித்து போட்டோவெல்லாம் எனக்கு அனுப்பி கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தாள். இவ்வாறு இருக்க பள்ளி கல்லூரி அனைத்தும் அங்கு விடுமுறை என்பதால் இவர்கள் போன வாரம் ஒரு மலைப் பிரதேசம் சென்று வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் தனியாக சுற்றித் திரிந்து வந்தனர்.மலைப் பிரதேசத்தைத் தாண்டி வீட்டுக்கு அருகில் வரும் பொழுது எதேச்சையாக காலைப் பார்த்தால் அவளுடைய காலில் ஒரு கொலுசு கழண்டு எங்கேயோ விழுந்து விட்டது. காணவில்லை. உடனே மீண்டும் இரண்டு மூன்று கிலோமீட்டர் திரும்பிச்சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மிகுந்த மனவருத்தம் அவர்கள் அடைந்தார்கள்..காரணம் பிறந

என் வாழ்வின் பொன்னான தருணங்கள்

#என் வாழ்வின் பொன்னான தருணங்கள்# 2000 வருடம் எனது மகன் பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளான்.ஓரோர்  எக்ஜாம் முடிந்த பிறகும் எவ்வாறு எழுதி இருக்கிறாய் என்று கேட்டால் பரவாயில்லை என்று ஒற்றை வரியில் தான் பதில் வரும் .இறுதித் தேர்வு எழுதிய பிறகும் எவ்வாறு எழுதியிருக்கிறாய் என்று கேட்டதற்கும் அதேபோல் ஒற்றை வரியில் தான் பதில்.(இந்த காலத்து பசங்க இல்ல. அப்படி ஒரு வரியில் தான் சொல்லுவாங்க. நம்மள மாதிரி எல்லாம் நம்ம காலம் மாதிரி விளாவரியா சொல்ல மாட்டார்கள்). லீவில் அவனை டைப்ரைட்டிங் ,கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று பல கோர்ஸ்களுக்கு அனுப்பி உள்ளேன்.மனதில் உள்ளூர ஒரு பயம். நல்ல மார்க்கு வந்தால் இன்ஜினியரிங், இல்லையென்றால் காமர்ஸ் .மேலும், பணமும் வைத்திருந்தேன் .பணம் கொடுத்து ஒரு நல்ல காலேஜில் இன்ஜினியரிங் சேர்க்கலாம் என்று. ஆனால் எதையுமே நான் அவனிடம் முன்கூட்டி சொல்லவில்லை .அவனும் என்னிடம் எப்படி என்ன என்று மார்க்கைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் மவுனம் காத்து இருந்தோம் ரிசல்ட் வரும் வரை. ரிசல்ட் வருவதற்கு முன்பு எனக்கு பள்ளியில் இருந்து போன் வந்தது .என்ன

வாசு பேரன் என்று பெயர் வந்த காரணம்

நான் ஏற்கனவே கூறியபடி எனது மகன் அமெரிக்காவில் டெக்ஸாஸில் இருக்கிறான். அவன் பெயர் அருண். ஆனால் அங்குள்ளவர்கள் வி அருண் என்று எழுதினால் வாசுதேவ அருண் என்று படிப்பதில்லை .ஏ வாசுதேவன் அருண் வாசுதேவன் என்றே படிக்கிறார்கள்.பிற்பாடு ஏ வை சேர்த்து அழைப்பதில்லை .வாசுதேவன் என்றே அழைக்கிறார்கள். இதை நான் இங்கு ஏன் கூறுகிறேன் என்றால் நான் சிவனேன்னு பொள்ளாச்சியில் இருந்தாலும் என் மகன் அங்கு வீடு வாங்கினால் அங்குள்ள வீட்டிற்கு வாசுதேவன் இல்லம் என்று அங்குள்ள ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் சூட்டப்பட்டு அங்குள்ள நிலவரப்படி என் பெயரில் வீடு உள்ளது போல் உள்ளது. இது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தாலும் இதைவிட மிகவும் ருசீகரமான ஒரு தகவலும் உண்டு. அதாவது எனது பேரனின் இயற்பெயர் வாசுதேவன் ஆனால் அனைத்திலும் பள்ளி முதல்கொண்டு ஆரூஷ் என்ற பெயர் தான் உள்ளது.அவன் ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்து வலது கை எலும்பு முறிந்து விட்டது அவசர சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்று பெயரைச் சொன்னால் வாசுதேவன் என்றால் அவர்களுக்கு  புரியவில்லை .ஆதலால் அவர்கள் வாசுதேவன் என்பதை வாசு பேரன் என்று டைப் அடித்து பதிவு செய்து விட்டார்க

ராமாயணம் தோன்றக் காரணம்

வணக்கம் இன்று முதல் எனது இரண்டாம் பாகம் தொடரும். பாகம் 2. தெரிந்த கதை. தெரியாத வரலாறு. நமது இதிகாசங்கள் புராணங்கள் அனைத்துக்கும் நடந்த விதத்தை ஊன்றி கவனித்தோமேயானால் சாபம்தான் அதற்கு காரணமே அன்றி வேறில்லை. அனைத்தும் சாபத்தினால் தான் நடந்தது.நமது ராமாயணம் தோன்றுவதற்கு மூல காரணமே சாபம்தான். அது என்ன  எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??. பாரசுராமரின் தந்தை   ஜமதக்னி முனிவர்.அவரின் மனைவி பெயர் ரேணுகாதேவி. அங்கு அப்பொழுது ஆட்சியில் இருந்தவன் கார்த்த வீர்யார்ஜுனன்.அவனுடைய நடவடிக்கை பிடிக்காமல், அவனை  எச்சரிக்கும் பொருட்டு ஒருநாள் ரேணுகாதேவி அவனுடைய அரண்மனையில் புகுந்து அவனை எச்சரித்து விட்டு வந்தார் .ஆனால் ஜமதக்னி முனிவர் தன் மனைவியை காணவில்லை என்று எல்லா இடத்திலும் தேடி சலிப்புற்று நேரடியாக விஷ்ணுவுக்கு சாபம் கொடுக்கிறார். ஹே விஷ்ணுவே !!நான் என் மனைவியைக் காணாமல் தேடி தவிக்கின்றேன் ..நீயும் உன் மனைவியை தொலைத்துவிட்டு என்னைப்போல் தேடி அலைவாயாக !! என்று சாபம் கொடுக்கிறார்..உடனே மகாவிஷ்ணு தங்கள் சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ராமாவதாரத்தில் நான்  ராமனாக அவதா

அர்ஜுனனுக்கு வில்லனுக்கு விஜயன் என்று பெயர் எவ்வாறு வந்தது

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது அர்ஜுனன் எவ்வாறு வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.வில்லுக்கு விஜயன் என்ற பெயர்  அவனுக்கு பின்னாளில் எவ்வாறு அமைந்தது என்பதை பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போம். துருபத மன்னனால்  அவமானப்படுத்தப்பட்டு, மனம் நொந்து, வெந்து, சோர்ந்து, நடை தளர்ந்து, துரோணர் வந்து கொண்டிருந்தார், கிருபாச்சாரியாரின் குருகுலம் நோக்கி. அப்பொழுது அவரின் குருகுலத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் .அவர்கள் வீசிய பந்து வேகமாக சென்று ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது .கிணற்றை சுற்றி அனைவரும் மிகுந்த கவலையுடன் சத்தமிட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது அழுக்குத் துணி உடுத்தி, மீசை தாடியுடன் ,பரிதாமாக வந்து நின்ற துரோணர் ,அவர்களை நோக்கி ஏன்? கிணற்றை சுற்றி அனைவரும் நின்று கொண்டிருக்கிறீர்கள்! என்று கேட்டார். அவருடைய தோற்றத்தைக் கண்டு முகம் சுழித்து, ஒரு அலட்சிய பார்வையுடன் துரியோதனன் ,அவரிடம் நாங்கள் எதற்கு நின்றால் உங்களுக்கு என்ன? உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறினான்.(தமிழில் ஒரு பழமொழி உண்டு. உருவம் கண்டு எடை போடாதே! தோற்றத்தை வைத்த

வீபீஷணனின் முற்பிறவி

தெரிந்த கதை. தெரியாத வரலாறு . இன்று நாம் காண இருப்பது ராவணனின் தம்பியும் தங்கையும் ஆன விபீஷணனும் சூர்ப்பனகையினையும் பற்றியது. அவர்களது முன் பிறவியில் அவர்கள் என்னவாக இருந்தார்கள் ??எப்படி விபீஷணன் நல்லவனாக இருந்தான்! அவன் எவ்வாறு ராமனிடம் சேர்ந்தான்! என்பதைப் பற்றிய விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறும் கதை இது .அதை சற்று நன்கு கவனித்து பார்ப்போமா. (இன்றுவரை சிலபல அலுவல் நிமித்தமாக கதை எழுதாமல் இருந்தேன். இப்பொழுது சும்மாவே வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருப்பதால் தினமும் ஒரு வரலாறு எழுதலாம் என்று உள்ளேன்.) சத்திய விரதன் என்று ஒரு அரசன் இருந்தான் .அவனுக்கு ஒரே மகன் .பெயர் சந்திரசூடன் .அவன் மிகவும் விஷ்ணுவின் மீது பக்தி கொண்டவனாக இருந்தான். சத்தியவிரதனுக்கு ""அனந்தன் ""என்று ஒரு ராஜ குரு இருந்தார் .அந்த மன்னனுக்கு குருவின் வாக்கு வேதவாக்கு .குரு சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாது.குருவிற்கு" சுமுகி"என்ற ஒரு மகள் இருந்தாள். மன்னன் மகனும் குருவின் மகளும் தந்தையின் குருகுலத்தில் இருந்து சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று வந்தார்கள். தந்தை மகள் என்ற வித்தியாசம் பாராமல் தனது

இறைவன் பேசிய தருணங்கள்

#இறைவன் பேசிய தருணங்கள்#. இறைவன் பேசிய தருணங்கள் எடுத்துரைத்தால் அது எண்ணிக்கையில் அடங்காது .ஒன்றா ,இரண்டா,?? குழந்தைப் பருவத்திலிருந்து அறியாப் பருவத்தில், அது வேண்டும்  இது வேண்டும் என்பதில் இருந்து அறிந்து வேண்டுவது தொடங்கி, அனைத்தையும் நிறைவேற்றி வைத்திருக்கிறான் ஆண்டவன் .நிறைவேற்ற வில்லை என்றாலும் சில காலங்களில் அதை நிறைவேற்றியதாக நாம் நினைத்துக் கொண்டு அவனை வழிபட வேண்டும். நல்லதே செய்திருக்கிறான் .அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. எத்தனையோ காரியங்கள் இருக்க இங்கு முக்கியமாக இரண்டே இரண்டு காரியங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதற் காரியமாக 2015ஆம் ஆண்டில் நான் புதியதாக ஒரு மொபைல் வாங்கி காசி கயா முதலிய இடங்களுக்கு சென்றேன். அங்கு பல இடங்களில் நன்கு போட்டோவும் வீடியோ எடுத்த பிறகு ஒரு வாரம் நன்கு சுற்றிய பிறகு புறப்படத் தயாரானோம்.  அது மார்ச் மாதம் என்பதால் பீகாரில் பயங்கர குளிர். நான் ஒரு கோட் போட்டு அதில் மொபைலை வைத்து அவர்கள் அமர்த்திய வேனில் அமர்ந்து ரயில்வே ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறோம். ரயில்வே ஸ்டேஷன் வந்துசேர்ந்தோம் 12 மணிக்கு ட்ரெயின் என்று சொன்னார்கள். இறங்கி லக்கேஜ் எல்லாம்