என் வாழ்வின் பொன்னான தருணங்கள் ஆர்னவி குட்டி கதை

#என் வாழ்வில் நடந்த பொன்னான தருணங்கள்  2.

என்னுடைய மகன் மருமகள் பேரன் பேத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர் .

எனது பேத்தியின் பிறந்த நாளுக்காக நான் ஜனவரி மாதம் இங்கிருந்து செல்பவர்கள் மூலமாக அவளுக்கு ஏற்கனவே நான் வாங்கி கொடுத்த கொலுசை தொலைத்து விட்டதால் புதியதாக நான் இங்கிருந்து வேறு ஒருவர் மூலமாக அனுப்பி வைத்தேன்.

அவள் பிறந்த நாள் அன்று அந்த கொலுசு கிடைக்கப் பெற்று அதை காலில் அணிந்து கொண்டு எனக்கு வீடியோ கால் மூலமாக எனக்கு காண்பித்து போட்டோவெல்லாம் எனக்கு அனுப்பி கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தாள்.

இவ்வாறு இருக்க பள்ளி கல்லூரி அனைத்தும் அங்கு விடுமுறை என்பதால் இவர்கள் போன வாரம் ஒரு மலைப் பிரதேசம் சென்று வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் தனியாக சுற்றித் திரிந்து வந்தனர்.மலைப் பிரதேசத்தைத் தாண்டி வீட்டுக்கு அருகில் வரும் பொழுது எதேச்சையாக காலைப் பார்த்தால் அவளுடைய காலில் ஒரு கொலுசு கழண்டு எங்கேயோ விழுந்து விட்டது. காணவில்லை. உடனே மீண்டும் இரண்டு மூன்று கிலோமீட்டர் திரும்பிச்சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மிகுந்த மனவருத்தம் அவர்கள் அடைந்தார்கள்..காரணம் பிறந்தநாளுக்காக தாத்தா இந்தியாவிலிருந்து அனுப்பி கொடுத்தாரே தொலைந்து விட்டதே என்ற வருத்தம் தான்.

அங்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் நெக்ஸ்ட் டோர் என்று ஒரு ஆப் உண்டு. அதில் ஏதாவது தொலைந்தால் அதில் பதிவிட்டு விட்டால் கிடைத்தவர்கள் பின் நம்பரை வைத்து போன் நம்பரை வைத்து நம்மை கூப்பிடுவார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு கொலுசை பற்றியோ கொலுசின் மதிப்பு என்னவென்று தெரியாது.

இவர்கள் அதில் பதிவிட்ட இரண்டாவது நாள் தொலைபேசி வாயிலாக இவர்களை அழைக்க அவர்கள் கண்டெடுத்த அவர்கள் மீண்டும் திருப்பி அந்த கொலுசு இவர்களிடம் கொடுக்க இவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்றும் இப்பொழுது சற்று ஏறத்தாழ பத்து நிமிடம் முன்பு என் பேத்தி வீடியோ கால் பேசும் பொழுது இரண்டு காலிலும் கொலுசை மாட்டிக்கொண்டு மிகுந்த சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

இதைவிட பொன்னான தருணம் என்று எனக்கு வேறு ஏது ??தொலைத்து மீண்டும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி சந்தோஷம்.

இன்று உண்மையிலேயே மிகவும் பொன்னான நாள்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ