Posts

Showing posts from July, 2019

சிறுகதைப் போட்டி

#சின்ன சின்ன ஆசை சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறி அதற்காகத்தான் நான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இடையில் சின்ன சின்ன ஆசை என்பதை விட சின்ன சின்ன சோதனை ,சின்ன சின்ன வேதனை ,சின்ன சின்ன குறும்பு முதலியவற்றை எழுதலாம் என்று நினைத்தேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நான் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் .இது சின்ன சின்ன ஆசை யா சின்ன சின்ன வேதனையா  என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். 63 ,64 ஆம் ஆண்டு நாங்கள் பழனியில் ஓட்டல் வைத்திருந்தோம் .அந்த நேரத்தில் அரிசித் தட்டுப்பாடு, சர்க்கரை தட்டுப்பாடு முதலியவை மிகுந்திருந்தது,1964ம்  ஆண்டு பாரதப் பிரதமர் நேரு இறந்தவுடன் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதம மந்திரியாக வந்து திங்கட்கிழமை  இரவு கம்பல்சரியாக   ஓட்டலை மூட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஒருவர் எலிக்கறி தின்னலாம் என்றெல்லாம் கூறினார். அவ்வளவு உணவுத் தட்டுப்பாடு இருந்தது. உணவுத் தட்டுப்பாடை விட  சர்க்கரை தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருந்தது. ஏன் நான் சக்கரை தட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகிறேன் என்றால் எனது ஒன்பது வய

சமையல் அருமை

இன்று அம்மாவைக் கூட்டிக் கொண்டு மகன் கண் டாக்டரிடம் சென்று விட்டான். மருமகள் பேரன் பேத்தியுடன் கோவை சென்று விட்டார்கள். நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். சற்று முன்பு ராதை ஸ்ரீராம் பதிவு பின் மற்றவர்களுடைய பதிவுகளை பார்த்தேன். அவர்கள் சமையல் செய்ததை போட்டிருந்தார்கள். நான் என்ன சளைத்தவனா?? என்று நினைத்து நானும் சமைத்திருக்கிறேன். இன்று அவர்கள் தலைவிதியோ என்னுடைய அதிர்ஷ்டமுமோ துரதிர்ஷ்டமோசமைக்க வேண்டிய சூழ்நிலை வந்த காரணத்தினால் இன்று நான் சமைத்திருக்கிறேன். அதை பதிவிட்டிருக்கிறேன். அவர்கள் இன்னும் டாக்டரிடமிருந்து வரவில்லை. சாப்பிட்ட பிறகு திட்டுவார்களோ புகழ்வார்களோ தெரியாது. நானும் சமையல் செய்து விட்டேன் என்ற பதிவை போடுகிறேன். சாதம் முள்ளங்கி பொரியல் தக்காளி ரசம் மற்றும் பருப்பு பொடி அப்பளம் மாவடு ஊறுகாய் . போதுமா. அவர்கள் சாப்பிட்ட பிறகு என்ன கூறுகிறார்கள் என்பதை மீண்டும் ஒரு தனிப் பதிவாக போடுகிறேன் .நன்றி வணக்கம்.

போட்டிக் கதை

அருமை அருமை பிரமாதம் மணிவண்ணன் அந்த சிலையை ஜெர்மனியில் உள்ள  ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விற்பனைக்கு வந்தது. அதற்கு முன்பு அது ரகசிய அறையில் சுரங்கத்தில் இருந்தது .அந்த சிலையை பார்த்துக்கொண்டிருந்த மணிவண்ணன் தமிழனாக இருந்த காரணத்தினால் அந்த சிலையின் அழகையும் நேர்த்தியையும் சிலை செதுக்கிய விதத்தையும் பார்த்து கொண்டே இருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனது மனதில் ஒரு சிறு பொறி தட்டியது ..அந்தப் பொறியின் விளைவாக அவன் சில பலவற்றை கண்டுபிடித்தான். அது என்ன என்று சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா. மணிவண்ணனுக்கு அந்த சிலையை கண்டவுடன் இது கற்கால சிலை போலவும்  மன்னராட்சி காலத்தில் உள்ள  சிலைபோலவும் தமிழ்நாட்டில்  உருவாக்கியதாக தோன்றிய காரணத்தினால் அந்த சிலையை ஆராய முற்பட்டான்.  அது அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உள்ள அதன் வரலாற்றை ஆராயும் பொழுது பல விஷயங்களை கண்டறிந்ததான். அது என்ன என்பதையும் சற்று பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் உள்ள ஒன்பத்து வேலியில் உள்ள சிவன் கோயிலில்

பழநி துர்க்கை அம்மன் ஊர்க் கோயில் மஹிமை

தெரிந்த கதை தெரியாத வரலாறு. (அனைவருக்கும் வணக்கம்.நான்  ஜூலை 15 வரை விடுப்பு கூறியிருந்தேன் .என் மகன் மருமகள் அனைவரும் வந்திருந்து 15ஆம் தேதி கிளம்பி சென்று விட்டார்கள் அமெரிக்காவிற்கு..  இடையில் இரண்டு கண்ணும் புரையோடிப் போய் இருந்ததால் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு செய்து தற்போது ஓய்வில் இருக்கிறேன். 19ஆம் தேதி மறுபடியும் செக்கப்புக்கு செல்ல வேண்டும் .அதற்குப் பிறகு டாக்டர்கள் கூறுவார்கள் மேற்கொண்டு என்ன செய்யலாம் .மருந்து வேண்டுமா வேண்டாமா?? சரியாகிவிட்டதா!!. கண்ணாடி போட வேண்டுமா என்ற தகவலையும் கூறுவார்கள் ) இன்று நாம் காண இருப்பது பழனி ஊர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனின் மகத்துவம் பற்றி. அந்த துர்க்கை அம்மன் யாருக்கு என்ன மகிமையை செய்தார் என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா இனி கதைக்கு செல்வோம். .இது ஒரு உண்மைச் சம்பவம்..  1965  66ல்  நான் பழனியில் இருந்த பொழுது நடந்த உண்மை சம்பவம்.. நாங்கள் பழனியில் அடிவாரத்தில் குடியிருந்தோம் .எனக்குத் தெரிந்த மிகவும் நல்ல ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் நிறைய குழந்தைகளுடன் வசித்து வந்தார்கள் .அத