போட்டிக் கதை

அருமை அருமை பிரமாதம்
மணிவண்ணன் அந்த சிலையை ஜெர்மனியில் உள்ள  ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விற்பனைக்கு வந்தது. அதற்கு முன்பு அது ரகசிய அறையில் சுரங்கத்தில் இருந்தது .அந்த சிலையை பார்த்துக்கொண்டிருந்த மணிவண்ணன் தமிழனாக இருந்த காரணத்தினால் அந்த சிலையின் அழகையும் நேர்த்தியையும் சிலை செதுக்கிய விதத்தையும் பார்த்து கொண்டே இருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவனது மனதில் ஒரு சிறு பொறி தட்டியது ..அந்தப் பொறியின் விளைவாக அவன் சில பலவற்றை கண்டுபிடித்தான். அது என்ன என்று சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

மணிவண்ணனுக்கு அந்த சிலையை கண்டவுடன் இது கற்கால சிலை போலவும்  மன்னராட்சி காலத்தில் உள்ள  சிலைபோலவும் தமிழ்நாட்டில்  உருவாக்கியதாக தோன்றிய காரணத்தினால் அந்த சிலையை ஆராய முற்பட்டான்.  அது அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உள்ள அதன் வரலாற்றை ஆராயும் பொழுது பல விஷயங்களை கண்டறிந்ததான். அது என்ன என்பதையும் சற்று பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்திற்கு அருகில் உள்ள ஒன்பத்து வேலியில் உள்ள சிவன் கோயிலில் மன்னன் சோழ வேந்தர் பரமேஸ்வரி வர்மன் என்ற மன்னனால் சிவலிங்கம் அங்குள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் அருகில் உமாதேவியார் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதிகாலம் தொட்டு தற்காலம் வரை சிவாச்சாரியார் பார்வதி பீடத்திற்கு பூஜை செய்யாத காரணத்தினால் சிவலிங்கத்திற்கு மட்டும் செய்ததால் அர்ச்சகர் பார்வதி சிலையை மறைத்துக்கொண்டு நின்றதால் அந்த சிலை இருப்பது பலருக்குத் தெரியாமல் போனது .

அதுவே சிலை கடத்தும் கும்பலுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. அந்த பார்வதி சிலையை என்று எப்போது எங்கு கடத்தினார்கள் என்ற விவரத்தை அவனால் அறிய முடியவில்லை .ஆனால் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இந்த சிலை வந்துள்ளது என்பதற்கான விபரம் மட்டும் அந்த குறிப்பில் அவன் கண்டான். மேற்கொண்டு என்ன செய்வது என்று ஆராய்ந்து தற்போதைய ஒரு  இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை உள்ள தமிழ்  தினசரிகளை எல்லாம் வரவழைத்து துருவித்துருவி ஆராய்ந்ததில் பொன்மாணிக்கவேல் அவர்கள் சிலை கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தஞ்சாவூரில் ஒன்பத்து வேலியில்  உள்ள சிலை கடத்தப்பட்டிருக்கிறது என்ற அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதை மேற்கொண்டு அரசுக் குறிப்பில் மட்டும் வெளியிட்டு விட்டு அவர்கள் ஒதுங்கி கொண்டதாகவும் அந்த வரலாற்று குறிப்பு தெரிவிக்கிறது.அதற்குப் பிறகு அந்த சிலையைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்ற காரணத்தினால் அதுவே சிலை கடத்தல் கும்பலுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்ட காரணத்தினால் இவ்வாறு அவர்கள் அந்த சிலையை கடத்தி வெளிநாட்டிற்கு விற்பனை செய்து அது சில பல காலம் சுரங்கத்திலிருந்து யாரோ ஒருவர் கண்டு அது பல கைகள் மாறி இன்று டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மணிவண்ணனுக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

மணிவண்ணன் மேற்கொண்டு ஆராய்ந்து இத்தகவலை சமூக அரசியல்  இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தெரிவிக்கலாமா நேராக அந்த சிலை கடத்தல் விவகாரத்தில் உரியவரிடமே தெரிவிக்கலாமா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறான் .அவன் மேற்கொண்டு என்ன செய்வான் என்ன என்பது தெரியாது. அது தெரிந்து அவன் மேற்கொண்டு செய்த பிறகு உங்களுக்கு கூறுகிறேன் . அதுவரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் வாசுதேவன்.நன்றி வணக்கம்.

(குறிப்பு மேற்கூறிய அனைத்தும் வரலாற்று உண்மையே அல்ல என்றும் எனது கற்பனையில் தோன்றியது என்றும் இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ