Posts

Showing posts from April, 2019

மத்யமரில் இருந்து விலகுவது

அமைதியான நதியினிலே ஓடும். ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓடம் .அமைதியான நதியினிலே ஓடும். அந்தியில் மயங்கி விடும் .காலையில் தெளிந்து விடும் .அன்பு மொழி கேட்டு விட்டால் பிள்ளை மனம் மாறிவிடும். அன்பு மொழி கேட்டுவிட்டால் பிள்ளை மனம் மாறிவிடும். நான் எனது சிறு வயதில் இருந்து எப்பொழுது எல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அலைபாய்கிறதோ துன்பமுற்று இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் பாட்டை பாடித்தான் நான் சற்று அமைதி அடைவேன் .சாந்தி அடைவேன். அமைதி கொள்வேன். சஞ்சலமாக இருப்பதற்கு காரணம். குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று கூறுவர். நான் எனது பேரன் பேத்திகளின் மழலைச் சொல்லைக் கேட்க வேண்டும். ஆதலால் சற்று விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இது எனது இருநூறாவது பதிவு. நான் ஏற்கனவே அனைவரிடமும் கூறி இருக்கிறபடியால் 200ஆவது பதிவு பதிந்துவிட்டு நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருக்கின்றேன். அதற்கான காரணம். 1.எனது மகன் மருமகள் பேரன் பேத்தி அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள். இரண்டு மாத க

பூரி ஜகந்நாதன் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது பூரி ஜெகன்நாதர் வரலாறு. பூரியில் ஜெகன்நாதர் கட்டையாக இருக்கிறார். பலராமன் சுபத்ராவும் அருகில் இருக்கிறார்கள்.இதன் உண்மையான வரலாறு ஏன் கட்டையாக ஆனார்கள் சரித்திரம் என்ன என்பதைப் பற்றி விவரமாக விளக்கமாக பின்பு கூறுகிறேன்.  இன்று ஜாலியாக ஏன் கட்டையாக ஆனார் என்பதைப் பற்றி ஒரு கதை கூறுகிறேன் .இது கதை தானே அன்றி நிஜமல்ல. கதை தான் ஜாலிக்காக ஒரு கதை. பாற்கடலில் உறையும் பரந்தாமன் மகாவிஷ்ணுவுக்கும்  பூமியை ஆளும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. மகாவிஷ்ணுவின் முதல் மனைவி பூமா தான்.புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது வழக்கம் .இது பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் இந்த வழக்கம் உண்டு. ஆகவே புதிய தம்பதிகளான மகாவிஷ்ணுவையும் பூமாதேவியையும் பார்வதியும் பரமேஸ்வரனும் தங்கள் இடத்திற்கு  கைலாயத்திற்கு  வந்து விருந்து உண்ண வேண்டும் என்று அழைத்தார்கள். ஆனால் பூமாதேவி வர மறுத்துவிட்டாள். ஏன்!? ஏன் என்று பார்ப்போமா!??. நாதா! தங்களோடு நான் கைலாயம்  வந்து விட்டால் இந்த பூலோகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் எங்கு போய் இருக்கும் .எனக்கு இன்னொரு பெயரு

28.3.2019 திருப்பதி யாத்திரை

தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது வேங்கடமலை புராண மகிமைகள் பற்றி.நான் அனைவரிடமும் கூறியது போல் 28 .3. 2019 வியாழக்கிழமை திருப்பதி சென்று வந்தேன் .அதன் விவரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலாக உள்ளேன். அனைவரும் நான் உட்பட எத்தனையோ முறை திருப்பதி சென்று இருப்போம். வேங்கடவனை தரிசித்திருப்போம். ஆனால் திருப்பதியில் வேங்கட தரிசனம் தவிர இன்னும் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள் எவை என்று ஒரு சிறுகுறிப்பு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் அனைவரும் மறக்காமல் இரண்டு நாள் வேங்கட மலையில் தங்கி அனைத்து திவ்ய ஸ்தலங்களையும் தரிசிக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். 1.வராஹஸ்வாமி ஆலயம் 1ஏ. வகுளாம்பிகை ஆலயம். 2.புஷ்கரணி குளம். 3.மாடவீதி ஊர்வலம் 4.ந்ரஸிம்மஸ்வாமி ஆலயம் 5.க்ருஷ்ணன் கோவில் இது அனைத்தும் மாடவீதியைச் சுற்றியே உள்ளது .இது தவிர. 6.ஆகாச கங்கை 7. ஸ்ரீ வாரி அதாவது பாத தரிசனம்(கதை உண்டு) 8.வேணுகோபாலஸ்வாமி ஆலயம் 9.பாதாள கங்கா 10. பாபவிநாசம் 11.சிலா தோரணம்(கதை உண்டு) 12.சக்ர தீர்த்தம் (கதை உண்டு) 13.பத்ம தீர்த்தம் 14.ஆஞ்சநேயர் ஆலயம் 15.ஜீவாலஜிகல் பார்க் இது அனைத்