மத்யமரில் இருந்து விலகுவது

அமைதியான நதியினிலே ஓடும். ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓடம் .அமைதியான நதியினிலே ஓடும்.

அந்தியில் மயங்கி விடும் .காலையில் தெளிந்து விடும் .அன்பு மொழி கேட்டு விட்டால் பிள்ளை மனம் மாறிவிடும். அன்பு மொழி கேட்டுவிட்டால் பிள்ளை மனம் மாறிவிடும்.

நான் எனது சிறு வயதில் இருந்து எப்பொழுது எல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அலைபாய்கிறதோ துன்பமுற்று இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் பாட்டை பாடித்தான் நான் சற்று அமைதி அடைவேன் .சாந்தி அடைவேன். அமைதி கொள்வேன். சஞ்சலமாக இருப்பதற்கு காரணம்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று கூறுவர். நான் எனது பேரன் பேத்திகளின் மழலைச் சொல்லைக் கேட்க வேண்டும். ஆதலால் சற்று விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.

இது எனது இருநூறாவது பதிவு. நான் ஏற்கனவே அனைவரிடமும் கூறி இருக்கிறபடியால் 200ஆவது பதிவு பதிந்துவிட்டு நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று இருக்கின்றேன். அதற்கான காரணம்.

1.எனது மகன் மருமகள் பேரன் பேத்தி அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள். இரண்டு மாத காலம் இங்கு தங்குவார்கள் .அவர்களுடன் பொழுதை கழிக்க வேண்டும். அவர்களுடன் கோவில் குளம் எல்லாம் சுற்ற வேண்டும். அந்த நேரத்தில் என்னால் மத்யமரில் முழுமையாக ஈடுபட முடியாது என்ற காரணத்தினால் சற்று ஓய்வு தேவை என்று நினைப்பதால் சற்று ஓய்வு எடுக்கிறேன்.

2.அவர்கள் வந்து இருக்கும் பொழுது நான் கைபேசியே கதி என்றோ மத்தியமரே  கதி  என்றோ இருந்தால் அவர்கள் தவறாக நினைப்பார்கள். ஆதலால் நான் சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன் .விலகி இருக்க விரும்புகிறேன்.

3.மத்தியமரில் முழுநேரமும் ஈடுபடுவதால் நான் எனது பூஜை புனஸ்காரம் யோகா தியானம் வாக்கிங் முதலியவற்றை சரிவர செய்யமுடியவில்லை .முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை.ஆதலாலும்  சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

4.எனது அன்றாட தேவைகளான கடைக்குச் செல்வது வங்கிக்குச் செல்வது முதலியவற்றை கூட நான் ஈடுபடாமல் தட்டிக் கழிப்பது அனைவரிடமிருந்தும் கெட்ட பெயர் வாங்குவதாலும் சற்று விலகி இருக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

5.மேலும் முழு நேரமும் இதிலேயே ஈடுபடுவதால் வலதுகை நோண்டி நோண்டி வலி எடுப்பதாலும் கண்பார்வை சற்று மங்குவதாலும் புத்தகங்கள் எதையும் படிக்க முடியாத காரணத்தினாலும் சற்று இதிலிருந்து விலகி இருக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

6.கடந்த ஒரு வருட காலமாக சொந்த பந்தங்களோடும் நண்பர்களோடும் ஆளாவளாவது எதுவுமில்லை என்ற காரணத்தினாலும் அனைவரும் அவனுக்கு முழு நேரமும் மத்யமர் தான் கதி வேற வேலையே இல்லை என்று கிண்டலடித்ததாலும் இதிலிருந்து சற்று ஓய்வெடுத்து விலகி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

Last but not least என்று கூறுவது போல் மனதையும் உடலையும் தேற்றிக்கொண்டு ஆன்மிக பயணத்திற்கு பல ஊர்களுக்கு சென்று, கண்டு, வந்து புத்துணர்ச்சியுடன் மூன்று மாதம் கழித்து மீண்டும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் மத்தியமரி பிரவேசிப்பேன் என்று கூறி அனைவரிடம் நன்றி கூறி விடை பெற்றுக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி.

மீண்டும் ஜூலையில் சந்திப்போம் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் உங்கள் உங்கள் வாசுதேவன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ