Posts

Showing posts from October, 2019

தீபாவளி கட்டுரை 4

#அந்த தீபாவளி#_ 1983ஆம் வருடம் நான் பிக்கானீர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறேன். அந்த வருடம் மார்ச் மாதத்தில் எனக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்து நான் M.Com;படித்துக் கொண்டிருப்பதால் மகனைப் பார்க்க வரவில்லை. மே மாதம் தொடங்கிய எக்ஸாம் ஜூன் வரை நடந்தது. ஆக்ரா யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருந்தேன் .அங்கு என்ன விசேஷம் என்றால் ஆக்ராவை சேர்ந்தவர்கள் தான் எழுத முடியும் .வேறு ஊரில் உள்ளவர்கள் ஆக்ரா யுனிவர்சிட்டியில் எழுதமுடியாது. அதற்காக நான் முதலில் 1974ல் நான் ஆக்ராவிலிருந்து விலாசத்தை கொடுத்து ஐடி ப்ரூப் வாங்கி அங்கு  சேர்ந்து எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தேன் .பிறகு விடுமுறைக்கு அப்ளை செய்து ஜூலை இறுதி வாக்கில் ஐந்து மாதம் கழித்து தான் எனது மகனை பார்க்க வந்தேன். ஆகஸ்டில் திரும்பிச் சென்றேன் பிக்கானீருக்கு. அங்கு அப்பொழுது பயங்கர வெயில் .அதுமட்டுமல்ல பிகானீரில் ஆந்தி என்று சொல்லக்கூடிய அனல் காற்று வீசும். ஆதலால் குளித்து விட்டு வெளியில் சென்று ஏதாவது வாங்கி வரலாம் என்று வீட்டிற்கு அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தால் மினிமும் 100 கிராம் மண் நமது உடலுக்குள் சென்று இருக்கும். நானிருந்த

தீபாவளி கட்டுரை 3

#அந்த தீபாவளி# 1974 ஆம் வருடம் நான் ஆக்ராவில் இருந்தேன். வடநாட்டில் நம் தமிழ்நாட்டைப் போல் அத்தனை விமர்சையாக தீபாவளி கொண்டாடுவதில்லை .ஆனால் தீபாவளியை ஒட்டி அனைத்து வீடுகளிலும் பல வகையான இனிப்பு வகைகளை செய்வார்கள். மேலும் தீபாவளி வருகிறது என்றாலே அனைவரும் பயப்படுவார்கள். காரணம் வடநாட்டில் தீபாவளியை ஒட்டி திருட்டு கொலை கொள்ளை மிக அதிகமாக நடக்கும். அவ்வாறு இருக்கையில், எனக்கு ஆக்ராவில் தூரத்து சொந்தம் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் மிகவும் நட்புடன் இருந்தார். அங்கேயே அவர் இருந்த காரணத்தினால் அவருக்கு வட மாநில நண்பர்கள் மிகவும் அதிகம். அதில் என்னையும் ஒரு வடமாநில நண்பருடன் அறிமுகம் செய்ய நான் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்கள் தரும் ஆஹாரங்களை உண்டு நான் தமிழில் பேசி ஜோக் அடிக்க, மோனோ ஆக்டிங் செய்ய, வசனம் பேச, அவர்கள் மிகவும் விரும்பி அடிக்கடி வரவேண்டும் என்று கூறுவார்கள். அவர் பெயர் ராம் லால் சர்மா. நான் கூறிய  1974ம் வருடம் தீபாவளியை ஆக்ராவில் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், ஒன்றும் சுறுசுறுப்பின்றி தீபாவளி நாளன்று சோம்பலாக காலை நேரமாகியும் எழுந்திருக்காமல் படுத்துக் கிடந்தேன்

தீபாவளி கட்டுரை ஒன்று

#அந்த ஒரு தீபாவளி# தீபாவளியைப் பற்றி சில கெட்ட விஷயங்களையும் சில நல்ல விஷயங்களையும் பகிரலாம் என்று இருக்கிறேன்.  1.எனது சிறிய வயதில் புஸ்வானம் விடுகையில் எனது தங்கை இன்னும் எரியவில்லையே  என்று திடீரென்று தன் முகத்தைப் புஸ்வானத்தில் காண்பிக்க அது திடீரென்று தீ பற்றி சிதற முகம் முழுவதும் தீக்காயங்கள் ஆகி புருவம் முதற்கொண்டு வெந்துவிட்டது .அவளை உடனடியாக டாக்டரிடம் அழைத்து கொண்டு போனால்  அந்த சிறு வயதிலும் அவள் சொன்ன வார்த்தை தான் இன்னும் காதில் ரீங்காரம் அடிக்கிறது. எனது எல்லா வெடியையும்  பத்திரமா பாத்துக்கோங்க யாரும் வெடிக்காமல் பார்த்துக் கொள்க என்று கூறினார்.  துன்பத்திலும் இன்பம் என்று கூறுவது இதைத் தான். 2. நான் ஒருமுறை விமானப்படையில் இருந்து விடுமுறையில் வரும் பொழுது என் அண்ணன் இதே புஸ்வானத்தை கையில் வைத்து பற்றவைக்கும்  பொழுது திடீரென்று வெடித்து கை முழுவதும் தீ பரவி தோல் முழுவதும் வெள்ளை வெளேரென்று ஆகி நான் விடுமுறை முழுவதும் என் அண்ணனின் தீக்காயத்திற்காக கூடவே இருந்து ஒருவழியாக தோல் வளர ஆரம்பித்து பல வருடங்கள் வளராமல் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்லும் பொழுது கூட இது வந்து தொ

அந்த தீபாவளி கட்டுரை ரெண்டு

#அந்த தீபாவளி#_  நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இது இரண்டாவது.  1978-ம் வருடம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாக எனது தங்கையின் திருமணம் கோவையில் பேரூரில் நடந்தது .நான் எனது தங்கை திருமணத்திற்காக டெல்லியில் இருந்து வந்தேன் .திருமணம் வியாழக்கிழமை நடந்தது. வெள்ளிக்கிழமை தங்கையை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட வேண்டும். அந்தக் காலத்தில் எது என்றாலும் வாசுக்கு (நான் தான்) எல்லாம் தெரியும் .அவன்  எல்லாம் சமாளிப்பான் . ஏனென்றால் அவன் பல ஊர்களில் இருந்து உள்ளான் என்று எல்லாவற்றிலும் குடும்பத்தில் என்னையே ஈடுபடுத்துவார்கள். எனது வயது 24 .  ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லாமல் ட்ரெய்னில் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் திருமண  அலைச்சல்.   ஏன் இதை கூறுகிறேன் என்றால் திருமணம் முடிந்து தங்கையை அழைத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் கட்டுச் சோத்து மூட்டை யுடன் பேரூரை விட்டு ஒன்பது மணிக்கு கிளம்பி விட்டோம். வரும் வழியில் சற்று ஸ்லோவாக வரவேண்டிய காரணத்தினால் அனைவரும் பதைபதைப்புடன் இருந்தார்கள் .காரணம் அன்று வெள்ளிக்கிழமை. பத்தரை மணிக்குள் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி விட வேண்டும் என்பது அனைவரின் அவா. நேர

பழம் பகவானுக்கு ஏன் படைக்க வேண்டும்

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது எந்த கோவிலுக்கு போனாலும் வீட்டில் பூஜை செய்தாலும் நைவேத்தியம் அதிலும் முக்கியமாக பழம் படைக்கும் வழக்கம் உள்ளது .இந்தப் பழம் தெய்வத்திற்குப் படைக்கும் வழக்கம் எவ்வாறு வந்தது என்பதைப் பற்றி சற்று ஆராய்வோமா!!?? மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் உள்ளது. அந்த கோலாப்பூரில் குடி  கொண்டிருப்பவள்  அம்பாள் ஆகிய மகிசாசுர மர்த்தினி. முற்காலத்தில் இந்த கோலாப்பூர் பகுதியில் கோல்ஹா என்ற அசுரன் வசித்து வந்தான். அவன் முனிவர்களை ரிஷிகளை சன்னியாசிகளை மிகவும் துன்பப் படுத்திக் கொண்டிருந்தான் .மேலும் அவன் சிறந்த தவவலிமை பெற்றிருந்த காரணத்தினால் தனது தவ பலத்தால் இந்திரலோகம் சென்று தேவர்களையும் கொடுமைப் படுத்தினான். அவனுடைய கொடுமை தாங்காத தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கோலாப்பூரில் உள்ள மகிஷாசுரமர்த்தினியிடம் முறையிட்டனர். அம்மனும் கவலை வேண்டாம் அவன் அழியும் நேரம் வந்துவிட்டது நான் அவனை அழிப்பேன் என்று கூறினாள்.  அவ்வாறு தனது பலத்தை தவறாக பயன்படுத்திய அசுரனை மகிஷாசுரமர்த்தினி அழித்தாள் .அவன் இறக்கும் தருவாயில் அன்னையிடம் ஒரு வரம் வேண்டினான் .தாயே என்ன

கொடுங்கலூர் பகவதி அம்மன் ஆலயம் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது கேரளாவில் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மனின் வரலாறு. நான் பத்தாம் தேதி கோவை குரூப் உடன் கொச்சி சென்று அனைத்து கோயில்களையும் தரிசித்து அதன் வரலாறுகளை விவரமாக எழுதுகிறேன் என்று கூறி அதன்படி இரிஞ்ஞாலகுடா பரதாழ்வார் வரலாறு ., எழுதினேன். அந்த ஆலயத்தில் இருந்து சரியாக எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொடுங்கலூர் பகவதி அம்மன் ஆலயம். அதன் வரலாறைச் பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??. தமிழ்நாட்டில் பிறந்த கோவலன் கண்ணகி மாதவியுடன் கோவலன் தொடர்பு வைத்ததன் காரணமாக செல்வத்தையெல்லாம் இழந்து கண்ணகியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு செல்ல அச்சமயத்தில் மகாராணியின் காறசிலம்பு திருடுபோன தகவலறிந்த பொற்கொல்லன் கோவலனை திருடன் என்று கருதி மன்னர் முன் நிறுத்த மன்னன்  சற்றும் ஆராயாமல் அவன் மேல் கொலைப்பழி சுமத்தி கொலைக்களத்திற்கு அனுப்பி கோவலனின் கதையை முடித்தார் . விபரம் அறிந்த கண்ணகி வெகுண்டு தன் காற்சிலம்புடன் மன்னனிடம் சென்று நீதிகோரி தன் கணவன் திருடன் அல்ல என்று நிரூபித்தார் .நிரூபித்த பிறகு மன்னன் மாண்ட பிறகும் அவருடைய கோபம் தணியவில்லை.

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம்

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலுக்கு 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மனைப்  பற்றியது.நாங்கள் இரிஞ்ஞாலகுடா கொடுங்கலூர் முதலியவற்றை கண்டு அதை பற்றி எழுதிவிட்டேன். இன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மனைப் பற்றி. இதன் வரலாற்றை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!?? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள சோட்டானிக்கரை அடர்ந்த வனமாக காட்சியளித்தது .அங்கு கண்ணப்பன் என்ற ஒரு வேடுவன் வசித்து வந்தான் .(நான் குறிப்பிடும் இந்த கண்ணப்பன் கேரளாவில் வசித்த கண்ணப்பன். எந்தவிதத்திலும் காளஹஸ்தி கண்ணப்பனுக்கு சம்பந்தமில்லை .காலஹஸ்த்தியின் கண்ணப்ப நாயனார்  வேறு .இந்த வேடன் கண்ணப்பன் வேறு. முற்பிறவியில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்திற்காக  தவமிருந்து சிவபெருமான் வேடனாக வந்து அவருடன் மல்யுத்தம் செய்த காரணத்தினால் அடுத்த பிறவியில் நீ வேடனாக பிறப்பாய் என்று சாபத்தின் காரணமாக அர்ஜுனனே அடுத்த பிறவியில் கண்ணப்ப நாயனாராக  காளஹஸ்தியில் தோன்றினார் என்பது வேறு கதை.இதனையும்  அதனையும் முடிச்சு போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்) இனி கதைக்கு வருவோம்.

கொச்சி லூலு மால் முதலியவை

#மத்யமர் குரூப் கோவை.!!"" அனைவருக்கும் வணக்கம். இதற்கு முன்பு கோவை மத்தியமர் குரூப் முதலில்  பரளிக்காடு சுற்றுலா தளம் சென்று அதைப் பற்றி விவரித்து எழுதியுள்ளேன் .அடுத்தபடியாக கோவை குரூப்பைச் சேர்ந்த அனைவரும் கொடுங்கலூர் பகவதி இரிஞாலக்குடா  செராய் பீச்  சர்ச் லூலு மால் முதலியவை சென்றோம் .அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக கூறுகிறேன்(கொடுங்கள்ளூர் பகவதி இரிஞ்ஞாலகுடா அதனைப் பற்றி நான் தனியாக தெரிந்த கதை தெரியாத வரலாறில் எழுதுகிறேன்) முதலில் காலை நாலு மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு அங்கங்கு உள்ள நண்பர்களை எல்லாம் பிக்கப் செய்து கொண்டு பொள்ளாச்சி வந்து என்னையும் பிக்கப் செய்துகொண்டு கொல்லங்கோடு நம்மாரை திருச்சூர் வழியாக கொச்சி சென்றோம். செல்லும்பொழுது வடக்கஞ்சேரி சரவணபவனில்  காலை உணவை முடித்துக்கொண்டோம். நாங்கள் நேராக முதலில் வலது பக்கம் திரும்பி இரிஞ்ஞாலக்குடா பரதன் கோயிலை கண்டுவிட்டு அங்கிருந்து கொடுங்கள்ளூர் பகவதியைக் காண வந்தோம் .இரண்டு கோயிலுக்கும்  மிக மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு உண்டு .அதை எனது தனிப்பதிவில் காணவும். அங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும்