தீபாவளி கட்டுரை 4

#அந்த தீபாவளி#_

1983ஆம் வருடம் நான் பிக்கானீர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறேன். அந்த வருடம் மார்ச் மாதத்தில் எனக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்து நான் M.Com;படித்துக் கொண்டிருப்பதால் மகனைப் பார்க்க வரவில்லை. மே மாதம் தொடங்கிய எக்ஸாம் ஜூன் வரை நடந்தது. ஆக்ரா யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருந்தேன் .அங்கு என்ன விசேஷம் என்றால் ஆக்ராவை சேர்ந்தவர்கள் தான் எழுத முடியும் .வேறு ஊரில் உள்ளவர்கள் ஆக்ரா யுனிவர்சிட்டியில் எழுதமுடியாது. அதற்காக நான் முதலில் 1974ல் நான் ஆக்ராவிலிருந்து விலாசத்தை கொடுத்து ஐடி ப்ரூப் வாங்கி அங்கு  சேர்ந்து எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தேன் .பிறகு விடுமுறைக்கு அப்ளை செய்து ஜூலை இறுதி வாக்கில் ஐந்து மாதம் கழித்து தான் எனது மகனை பார்க்க வந்தேன்.

ஆகஸ்டில் திரும்பிச் சென்றேன் பிக்கானீருக்கு. அங்கு அப்பொழுது பயங்கர வெயில் .அதுமட்டுமல்ல பிகானீரில் ஆந்தி என்று சொல்லக்கூடிய அனல் காற்று வீசும். ஆதலால் குளித்து விட்டு வெளியில் சென்று ஏதாவது வாங்கி வரலாம் என்று வீட்டிற்கு அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தால் மினிமும் 100 கிராம் மண் நமது உடலுக்குள் சென்று இருக்கும். நானிருந்த  2 வருடத்திற்குள் ஒன்றரை கிலோ மண்ணை உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.

இதை இங்கு சொல்வதற்கு காரணம் பிறந்த குழந்தையை வெளியில் கொண்டு வராமல் ஆந்தியில் (புழுதி மண்ணில்) வராமல் பாதுகாப்பதற்குள் என் பாடு உன் பாடாகிவிட்டது .சரியாக அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி தீபாவளி வந்தது.(இங்கு ராஜஸ்தானை பற்றி ஒரு சிறு குறிப்பு. நான் செல்வதற்கு ஒரு ஆறேழு வருடம் முன்பு அங்கு மழை என்பதே கிடையாது. சமைத்துவிட்டு பாத்திரம் தேய்ப்பது எப்படி என்றால் வாசலில் உட்கார்ந்து கொண்டு மண்ணை எடுத்து அந்தப் பாத்திரம் முழுதும் காய்ந்த மண் , ஈரம் தான் ஆகவே ஆகாதே மண் ,நீர் இல்லாத காரணத்தால், அதை அப்படியே ஒரு குழப்பு குழப்பி பாத்திரத்தை கவுத்து வார்கள் .பாத்திரம் பளீரென்று ஆகிவிடும் .அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பார்கள். இதை நான் என் கண் கொண்டு பலமுறை கண்டிருக்கிறேன். பள்ளியில் பாடம் நடத்துவார்கள் ஆசிரியர்கள்.வானத்திலிருந்து மழை பொழியும் என்று கூறுவார்கள் .அதை மாணவர்கள் அதிசயமாக கேட்பார்களாம் அப்படி வானத்திலிருந்து பொழியுமா என்று.)

ஆனால் நான் இருந்த காலத்தில் நல்ல மழை பெய்தது .அவ்வாறு மழை பெய்யும் தருணத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து மழையில் நனைவார்கள்.வானத்தை அதிசயமாக பார்ப்பார்கள்.  அவ்வாறு முதல் மழையில் நனைவது உடலுக்கு மிகவும் நல்லது என்று பிற்காலத்தில் மருத்துவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அக்டோபர் 23 பிகானீர் இல் முதல் தீபாவளி.அங்கு எந்த இனிப்பு வாங்க வேண்டுமென்றாலும் அனைத்தும் பாலில் செய்த பொருட்களேகிடைக்கும். ஆதலால் எங்கள் வீட்டில் நாங்கள் சில இனிப்பு வகைகளை, கார வகைகளை செய்தோம் .துணி எடுத்து ரெடியாக இருந்தோம் .நான்கு நாட்கள் முன்பு வரை.அதற்குப் பிறகுதான்  என்னை பயம் ஆட்கொண்டது .காரணம் தீபாவளிக்கு ஓரிரு தினங்கள் முன்பு வரை அனைவரும் அங்கு நாக பூஜை செய்வார்கள் என்றும் ,அனைவர் வீட்டிற்கும் நாகம் வரும் என்றும் ,அவ்வாறு நாகம் வராத வீட்டில் லட்சுமி தாண்டவம் ஆட மாட்டார் என்றும், ஆதலால் அனைவரும் நாகம் வரவேண்டும் என்றும் பிரார்த்திப்பார்கள் என்று கேள்விப்பட்டு எனது அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது,என்னுடன் பணிபுரியும் ஒருவர் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு நாள் குறித்திருந்தார் .4 நாட்கள் முன்பு என்னிடம் வந்து அழத்தொடங்கினார் .என்ன என்று கேட்டால் என் வீட்டிற்கு இன்னும் நாகம் வரவில்லை ,நான்கு நாட்களுக்குள் நாகம் வந்தே தீர வேண்டும் என்றும் இல்லை என்றால் நாங்கள் கிரகப்பிரவேசம் செய்ய முடியாது என்றும் அழ ஆரம்பித்தார்.இதையெல்லாம் கேட்ட உடன் எனக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று.

இனிய தீபாவளியும் வந்தது .நாங்கள் மகிழ்ச்சியுடன் வெடி வெடித்து புதுத்துணி உடுத்தி இனிப்பு வகைகளை அக்கம்பக்கம் கொடுத்து சந்தோஷமாக இருந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வீட்டு முனையில் ரோட்டின் ஆரம்பத்தில் சத்தம், என்னவென்று பார்த்தால், ஐம்பது அறுபது பேர் கையில் பாம்புடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நான் என் மகனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படா இந்த சோதனை தீரும் என்று ,ஒரு நாள் முழுவதும் வெளியில் வராமல், தீபாவளிக்கு அடுத்த நாள் ஊர் சகஜ நிலையை அடைந்தவுடன் அனைவரும் சாதாரணமாக இருந்த நேரத்தில் நாங்களும் வெளியில் வந்து அது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்த வருடம் தீபாவளியைக் கொண்டாடினோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ