Posts

Showing posts from March, 2021

பேச்சிலர்ஸ் டே

என்னுடைய பேச்சிலர்ஸ் டே.  நான் என்னுடைய 18-வது வயதிலேயே இந்திய விமானப் படையில் சேர்ந்து விட்டேன். அதற்கு முன்பு பள்ளிப்படிப்பு கல்லூரிப் படிப்பு. கோடை விடுமுறையில் கூட எங்கும் சுற்ற இயலாமல் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்டுக்கு அனுப்பி அதை படிக்க வைத்தார்கள்.  ஆதலால் இந்த காதல் கத்திரிக்காய் அது கருப்பா சிவப்பா என்பதையெல்லாம் நான் 18 வயது வரை அறியாமல் இருந்து இந்திய விமானப் படையில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி முடிந்த பின்பு ஆக்ராவிற்கு போஸ்டிங் போட்டார்கள். 1972 ,73 எல்லாம் ஆக்ரா ஒரு பாலைவனம் போலத்தான் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் காடும் மரமும் செடியும் கொடியும் தான். மனிதர்களையே பார்க்க முடியாது. இடையில் இந்த நேரத்தில் பெண்களையா.  ஐயா , என்னைப்பொறுத்தவரை பெண்கள் என்பது கற்பனைக்கு எட்டாத பாத்திரமாக எங்களுக்கு பெண்கள் திகழ்ந்தார்கள் .அந்த வயதில் பெண்களை ஓவியங்களிலும் நாடகங்களிலும் தான் பார்த்திருக்கிறோம். பெண்களை அதுவும் இளம் வயதினரை நேரடியாக நாங்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. வருடத்துக்கு ஒரு முறை கோடை விடுமுறையில் வருவோம். அதற்கிடையில் இங்கு சொந்த ஊர் விட்டு பல ஊர்களுக்கு மாறி இருப்

எழில் அரசனைப் பற்றிக் கூறும் கதை

அனைவருக்கும் வணக்கம் .என் பெயர் வாசுதேவன். என்னையும் மத்யமரில் காணோம் என்று சிலர் பலர் தேடினார்கள். அவர்கள் தேடியதின் பலன் இன்று நான் ஒரு கதை எழுதலாம் என்று உள்ளேன். என் வாழ்வில் நடந்த உண்மையான கதை.  அதாவது ஆண்டவன் உங்களுக்கு ஒரு பொருளை கிடைக்க வேண்டும் ,நீங்கள் தேடுவது உங்கள் கண்ணில் பட வேண்டும்," என்று விரும்பினால் மட்டுமே" மேலும் அந்த பொருளால் அந்த நபரால் உங்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என்றால் மட்டுமே "தெய்வம் அந்த பொருளை அந்த நபரை உங்கள் முன் காட்டும். இல்லையென்றால் தேவையற்றது என்று தெய்வமே ஒதுங்கி விடும் ,ஒதுக்கிவிடும்.  மீண்டும் மீண்டும்  நீங்கள் முயற்சி செய்தால் அந்த முயற்சியின் பலனாக தெய்வமே இவனாக புரிந்து கொள்ளட்டும் பட்டுத்தான் திருந்துவான் என்று அவன் கண்ணில் காணிக்கும். என்னடா புதிர் போடுகிறானே என்று பார்க்கிறீர்களா??!! இனிதான் கதையே ஆரம்பம்.  நான் ஏர்போர்ஸ்ல் இருந்த காலத்தில் நகமும் சதையுமாக எலும்பும் தோலுமாக உயிருக்குயிரான ஒரு நண்பன் இருந்தான். பிறகு ஏர்போர்ஸை விட்டு வெளியே வந்தவுடன் எங்கள் நட்பு பிரிந்தது .அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. நான் கடந

கொரோணா ஊசி போட்டு கொண்டோம்

இன்று நானும் என் மனைவியும் குடிலில் தங்கியுள்ள சிலருடன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆதார் கார்டை கொடுத்து மொபைல் நம்பரை எழுதி அவர்கள் கொடுத்த பேப்பரில் பெயரை எழுதி கையொப்பமிட்டு 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என்று நிரூபித்து கொராணா இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டோம்.  பிறகு சைட் எஃபெக்ட் உள்ளதா என்பதை அறிய அரைமணி நேரம் அங்கு அமரச் சொன்னார்கள்.அரைமணி நேரம் கழித்து ஒன்றுமில்லை என்ற உடன் சென்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். நாங்கள் வெளியில் வந்து  வெயில் உக்கிரமாக இருந்த காரணத்தினால் ஒரு கரும்பு சாறு அருந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். நன்றி

ஊனம் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

இன்றைய தலைமுறைக்கு பழைய நிகழ்வுகளை சற்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.  நேற்று ஒருவர் 75 வயது இருக்கும் அவரும் அவருடைய மனைவியும் என்னை காண வந்திருந்தார்கள். நான் பொள்ளாச்சியில் சீனியர் ஹோமில் இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் . அவர் முன்னாள் ராணுவத்தினர். அவர் ஒரு கால் ஊனமான வர் .எப்படி கால் ஊனம் என்பதை பற்றி தான் இங்கு கூற விரும்புகிறேன். அதற்குப்பிறகு அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் நான் இங்கு கூற விரும்புகிறேன்.  அதாவது 1958ல் அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் .65 போரில் அவருக்கு காலில் ஒரு குண்டு பாய்ந்து பிறகு ஆஸ்பிட்டலில் சேர்ந்து அவர் ஆபரேஷன் செய்து கால் குணமா கிவிட்டது. அதற்கு முன்பு அவர் 64 ஆம் வருடம் திருமணத்திற்காக பெண் பார்த்துவிட்டு மீண்டும் விடுமுறை முடிந்து டூட்டிக்கு சென்றுள்ளார். பிறகு யுத்தம் தொடங்கி போரில் பங்கு பெற்று அவர் கால் ஊனமாகி விட்டது. யுத்தம் முடிந்த பிறகு அவர் வருகிறார்.  பெண் வீட்டுக்காரர்களைப் பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய வேண்டி விடுமுறையில் வந்துள்ளார். ஆனால் பெண் வீட்டுக்காரர்கள் அனைவரும் ஏ