ஊனம் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

இன்றைய தலைமுறைக்கு பழைய நிகழ்வுகளை சற்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

 நேற்று ஒருவர் 75 வயது இருக்கும் அவரும் அவருடைய மனைவியும் என்னை காண வந்திருந்தார்கள். நான் பொள்ளாச்சியில் சீனியர் ஹோமில் இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் .

அவர் முன்னாள் ராணுவத்தினர். அவர் ஒரு கால் ஊனமான வர் .எப்படி கால் ஊனம் என்பதை பற்றி தான் இங்கு கூற விரும்புகிறேன். அதற்குப்பிறகு அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் நான் இங்கு கூற விரும்புகிறேன்.

 அதாவது 1958ல் அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் .65 போரில் அவருக்கு காலில் ஒரு குண்டு பாய்ந்து பிறகு ஆஸ்பிட்டலில் சேர்ந்து அவர் ஆபரேஷன் செய்து கால் குணமா கிவிட்டது. அதற்கு முன்பு அவர் 64 ஆம் வருடம் திருமணத்திற்காக பெண் பார்த்துவிட்டு மீண்டும் விடுமுறை முடிந்து டூட்டிக்கு சென்றுள்ளார். பிறகு யுத்தம் தொடங்கி போரில் பங்கு பெற்று அவர் கால் ஊனமாகி விட்டது. யுத்தம் முடிந்த பிறகு அவர் வருகிறார்.

 பெண் வீட்டுக்காரர்களைப் பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய வேண்டி விடுமுறையில் வந்துள்ளார்.

ஆனால் பெண் வீட்டுக்காரர்கள் அனைவரும் ஏன் நாம் ஒரு ஊனமானவரை கட்டிக் கொள்ள வேண்டும் .எங்களுக்கு அந்த திருமண பந்தத்தில் இஷ்டமில்லை என்று கூறினார்கள் .இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து விருப்பம் இல்லையென்றால் வேண்டாம். நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

 ஆனால் எதற்கும் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் அதற்கு முன்போ பின்போ எனக்கு சரியாக ஞாபகம் இல்லை பாகப்பிரிவினை படம் ரிலீஸ் ஆகியது. அந்த படத்தில் ஒரு பாட்டு தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ என்ற ஒரு பாடல். அந்தப் படத்தில் சிவாஜி ஒரு கை நொண்டியாக நடிப்பார்.(படம் பாகப்பிரிவினை என்று நினைக்கிறேன் தவறாகவும் இருக்கலாம்). இந்த மாப்பிள்ளை வீட்டார் எதற்கும் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டு பதில் கூறுங்கள் என்று கூறினார்கள். 

பெண்ணிடம் கேட்ட பொழுது அந்தக் காலத்தில் டெலிபோன் வசதி இது போன்ற மொபைல்போ வாட்ஸ் அப் போ ஒன்றுமில்லை .மேலும் பெண்கள் சரமாரியாக தன்னுடைய தேவையை விருப்பத்தை ஆசையை வந்து வெளியிட முடியாத காலம். 1965-ஆம் வருடம் மாப்பிள்ளை வீட்டார் இந்த பெண்ணிடம் கேளுங்கள் என்று கூற இந்த பெண் அடுத்து உள்ள ரூமுக்கு  சென்று தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்ற பாட்டை பாடினார். அதன் மூலம் அனைவரும் அந்த பெண்ணிற்கு சம்மதம் ஒருமுறை ஒருவரை நினைத்தால்  வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் என்ற கொள்கை உடையவர் என்ற முடிவில் அனைவரும் சம்மதித்து திருமணம் நடத்தி வைத்தார்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து மூன்று பேருக்கும் திருமணம் ஆகி நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

 அந்தப் பெண்ணும் அந்த ஆணும் தான் நேற்று என்னை காண வந்து அவர்களது இளமைக்கால நிகழ்வுகளை கூறிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களை வணங்கி நீங்கள் சிறந்த உத்தமர். தேச பக்தி மிகுந்தவர். தங்களுக்கு வாய்த்த மனைவியும் போற்றப்பட வேண்டியவர். உங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன் என்று கூறி அவர்களிடம் ஆசி வாங்கி அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஆவல் உந்த அனைவரும் அதை அறிய வேண்டும் என்ற ஆவலில் அதை இங்கு பதிவிடுகிறேன். நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்