பேச்சிலர்ஸ் டே

என்னுடைய பேச்சிலர்ஸ் டே.

 நான் என்னுடைய 18-வது வயதிலேயே இந்திய விமானப் படையில் சேர்ந்து விட்டேன். அதற்கு முன்பு பள்ளிப்படிப்பு கல்லூரிப் படிப்பு. கோடை விடுமுறையில் கூட எங்கும் சுற்ற இயலாமல் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்டுக்கு அனுப்பி அதை படிக்க வைத்தார்கள்.

 ஆதலால் இந்த காதல் கத்திரிக்காய் அது கருப்பா சிவப்பா என்பதையெல்லாம் நான் 18 வயது வரை அறியாமல் இருந்து இந்திய விமானப் படையில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி முடிந்த பின்பு ஆக்ராவிற்கு போஸ்டிங் போட்டார்கள்.

1972 ,73 எல்லாம் ஆக்ரா ஒரு பாலைவனம் போலத்தான் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் காடும் மரமும் செடியும் கொடியும் தான். மனிதர்களையே பார்க்க முடியாது. இடையில் இந்த நேரத்தில் பெண்களையா.

 ஐயா , என்னைப்பொறுத்தவரை பெண்கள் என்பது கற்பனைக்கு எட்டாத பாத்திரமாக எங்களுக்கு பெண்கள் திகழ்ந்தார்கள் .அந்த வயதில் பெண்களை ஓவியங்களிலும் நாடகங்களிலும் தான் பார்த்திருக்கிறோம். பெண்களை அதுவும் இளம் வயதினரை நேரடியாக நாங்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. வருடத்துக்கு ஒரு முறை கோடை விடுமுறையில் வருவோம். அதற்கிடையில் இங்கு சொந்த ஊர் விட்டு பல ஊர்களுக்கு மாறி இருப்பார்கள் பெற்றோர்கள். முதலில் பழனி, பிறகு கோவை ,பிறகு சென்னை, பிறகு திருச்சி என்று. எங்கும் பழக்கம் என்பது யாரிடமும் இல்லாமல் இருந்தது. மேலும் இரண்டு மாத லீவில் வந்தால் எல்லா இடங்களிலும் பத்து நாட்கள் இருந்தாலே விடுமுறை தீர்ந்துவிடும். இடையில் யாரிடமாவது பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தாலே 10 நாட்கள் ஓடிவிடும். எங்கிருந்து பழகுவது.

பழகவேண்டும் என்றால் முதலில் பார்க்க வேண்டும். பிறகு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு பேச வேண்டும். பிறகு தானே நட்பு என்பது. வாசு இதெல்லாம் நடக்கிற காரியமா??? இவ்வாறாக திருமணம் ஆகும் வரை எந்த பெண்களிடமும் பழக்கமும் காதலும் ஒன்றும் ஏற்படாமல் புனிதத்தன்மையுடன் நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதை இங்கு பெருமையாக கூற கடமைப்பட்டுள்ளேன். இதுவே எனது பேச்சிலர் வாழ்க்கை

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ