கொச்சி லூலு மால் முதலியவை

#மத்யமர் குரூப் கோவை.!!""

அனைவருக்கும் வணக்கம்.
இதற்கு முன்பு கோவை மத்தியமர் குரூப் முதலில்  பரளிக்காடு சுற்றுலா தளம் சென்று அதைப் பற்றி விவரித்து எழுதியுள்ளேன் .அடுத்தபடியாக கோவை குரூப்பைச் சேர்ந்த அனைவரும் கொடுங்கலூர் பகவதி இரிஞாலக்குடா  செராய் பீச்  சர்ச் லூலு மால் முதலியவை சென்றோம் .அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக கூறுகிறேன்(கொடுங்கள்ளூர் பகவதி இரிஞ்ஞாலகுடா அதனைப் பற்றி நான் தனியாக தெரிந்த கதை தெரியாத வரலாறில் எழுதுகிறேன்)

முதலில் காலை நாலு மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு அங்கங்கு உள்ள நண்பர்களை எல்லாம் பிக்கப் செய்து கொண்டு பொள்ளாச்சி வந்து என்னையும் பிக்கப் செய்துகொண்டு கொல்லங்கோடு நம்மாரை திருச்சூர் வழியாக கொச்சி சென்றோம். செல்லும்பொழுது வடக்கஞ்சேரி சரவணபவனில்  காலை உணவை முடித்துக்கொண்டோம்.

நாங்கள் நேராக முதலில் வலது பக்கம் திரும்பி இரிஞ்ஞாலக்குடா பரதன் கோயிலை கண்டுவிட்டு அங்கிருந்து கொடுங்கள்ளூர் பகவதியைக் காண வந்தோம் .இரண்டு கோயிலுக்கும்  மிக மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு உண்டு .அதை எனது தனிப்பதிவில் காணவும்.

அங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் கொச்சி சென்று அங்குள்ள சரவணபவனில் மதிய உணவை முடித்துக் கொண்டு நேராக செராய் பீச் சென்று சற்று நேரம் இருந்துவிட்டு கொச்சி போட்டிங் சென்றோம்.

நாங்கள் 15 பேர் தனியாக ஒரு போட் ஏற்பாடு செய்துகொண்டு ஒன்னரை மணிநேரம் அங்குள்ள அனைத்து இடங்களையும் நன்கு கண்டு களித்தோம். பிறகு அங்கிருந்து நேராக உலக புகழ்வாய்ந்த ஏசுநாதர் ஆலயம் சென்று கண்டுவிட்டு(கொச்சின் ஃபஸாலிகா என்று கூறுவார்கள்) நேராக நாங்கள் லூலு மால் சென்றோம்.(ஆசியாவிலேயே சிறந்த லூலு மால் கொச்சி லூலு மால் என்று கூறுவார்கள்).

லூலு மாலில் ஊசி முதற்கொண்டு உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். இங்கு இறங்குவதற்கும் ஏறுவதற்கும் எஸ்கலேட்டர் உண்டு .அது மட்டுமல்லாமல் இறங்குவதற்கு ஒரு கூண்டு ஏறுவதற்கு ஒரு கூண்டும் (லிப்ட் வசதி)தனியாக உண்டு. அங்கு உண்பதற்கு ,ஆடை அலங்காரத்திற்கு, மளிகைப் பொருட்களுக்கு ,அனைத்து அனைத்து அனைத்து விதமான பொருட்களும் அங்கு கிடைக்கும். நாங்கள் ஒரு சென்ட் கடையில் சென்று கவுண்டமணி கூறுவதுபோல்  ( இங்க பூசு இங்க பூசு இந்த பக்கம் இந்த பக்கம் பூசு வாசம் இல்லை இன்னும் கொஞ்சம் பூசு வாசம் பத்தாது  என்று உடலையும் கையையும் திருப்பித் திருப்பிக் காண்பித்து உடல் முழுதும் மணக்கச செய்து கொண்டு வெளியில் வந்து விட்டோம் .வாங்கவில்லை என்பது வேறு விஷயம்)

இரவு ஏழு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருக்கிறோம் .மழை என்றால் மழை அடை மழை பேய் மழை என்று கூறுவார்களே அது போன்ற ஒரு மழை. இத்தகைய தீவிரமான மழையை பத்தாம் தேதிக்கு முன்பு வரை நான் நேரில் கண்டிருக்கிறேனா என்று எனக்கு ஒரு சந்தேகம் .கொச்சியில் அத்தனை அடைமழை. இரவு உணவருந்த மழை காரணமாக எங்கும் இறங்க முடியாத காரணத்தினால் மீண்டும் காலை உணவருந்திய இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஆர்யாவுக்கு வந்து இரவு உணவை முடித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய சிப்ஸ் ஐட்டங்களை எல்லாம்  வாங்கிக்கொண்டு இரவு 12 30 மணிக்கு பொள்ளாச்சி வந்து சேர்ந்தேன் என்று கூறிக்கொண்டு மிக மிக இனிமையாக அருமையாக பயணம் இருந்தது என்று கூறி நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.

(கோயில் வரலாறு எனது தெரிந்த கதை தெரியாத வரலாற்றுப் பகுதியில் அடுத்ததாக வெளியாகும்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ