பழம் பகவானுக்கு ஏன் படைக்க வேண்டும்

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது எந்த கோவிலுக்கு போனாலும் வீட்டில் பூஜை செய்தாலும் நைவேத்தியம் அதிலும் முக்கியமாக பழம் படைக்கும் வழக்கம் உள்ளது .இந்தப் பழம் தெய்வத்திற்குப் படைக்கும் வழக்கம் எவ்வாறு வந்தது என்பதைப் பற்றி சற்று ஆராய்வோமா!!??

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் உள்ளது. அந்த கோலாப்பூரில் குடி  கொண்டிருப்பவள்  அம்பாள் ஆகிய மகிசாசுர மர்த்தினி. முற்காலத்தில் இந்த கோலாப்பூர் பகுதியில் கோல்ஹா என்ற அசுரன் வசித்து வந்தான். அவன் முனிவர்களை ரிஷிகளை சன்னியாசிகளை மிகவும் துன்பப் படுத்திக் கொண்டிருந்தான் .மேலும் அவன் சிறந்த தவவலிமை பெற்றிருந்த காரணத்தினால் தனது தவ பலத்தால் இந்திரலோகம் சென்று தேவர்களையும் கொடுமைப் படுத்தினான். அவனுடைய கொடுமை தாங்காத தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கோலாப்பூரில் உள்ள மகிஷாசுரமர்த்தினியிடம் முறையிட்டனர். அம்மனும் கவலை வேண்டாம் அவன் அழியும் நேரம் வந்துவிட்டது நான் அவனை அழிப்பேன் என்று கூறினாள்.

 அவ்வாறு தனது பலத்தை தவறாக பயன்படுத்திய அசுரனை மகிஷாசுரமர்த்தினி அழித்தாள் .அவன் இறக்கும் தருவாயில் அன்னையிடம் ஒரு வரம் வேண்டினான் .தாயே என்னை ஒரு பழமாக கருதி ஏற்றுக்கொள் .உனக்கு பூஜை நடக்கும் காலங்களில் எல்லா மக்களும் பழம் படைக்கவேண்டும் என்ற நியதியை உண்டாக்கு.

காரணம் ஒருவன் பிறக்கும்போது பழத்தின் உள்ளிருக்கும் இனிய சதைப்பற்று போல நல்லவனே; அவனை கர்வம் என்ற தோல் மறைத்துள்ளது. அந்த தோலை  அகற்றிவிட்டால் உள்ளிருக்கும் இனிய பகுதி வெளிப்படும். இந்த தத்துவத்தை மக்கள் அனைவரும் உணரும் வகையில் உனக்கு பழம் படைக்க அனுமதி கொடு என்று வேண்டினான். அவன் கோரிக்கையை அம்பாளும் ஏற்றாள். அன்றுமுதல் அம்பாளுக்கு மட்டுமல்ல எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்தியமாக பழம் படைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

 இதுவே தெய்வங்களுக்கு பழம் படைக்கும் வழக்கம் உண்டானதற்கான காரணம்.

 இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி .

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ