பூரி ஜகந்நாதன் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது பூரி ஜெகன்நாதர் வரலாறு. பூரியில் ஜெகன்நாதர் கட்டையாக இருக்கிறார். பலராமன் சுபத்ராவும் அருகில் இருக்கிறார்கள்.இதன் உண்மையான வரலாறு ஏன் கட்டையாக ஆனார்கள் சரித்திரம் என்ன என்பதைப் பற்றி விவரமாக விளக்கமாக பின்பு கூறுகிறேன்.  இன்று ஜாலியாக ஏன் கட்டையாக ஆனார் என்பதைப் பற்றி ஒரு கதை கூறுகிறேன் .இது கதை தானே அன்றி நிஜமல்ல. கதை தான் ஜாலிக்காக ஒரு கதை.

பாற்கடலில் உறையும் பரந்தாமன் மகாவிஷ்ணுவுக்கும்  பூமியை ஆளும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. மகாவிஷ்ணுவின் முதல் மனைவி பூமா தான்.புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது வழக்கம் .இது பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் இந்த வழக்கம் உண்டு. ஆகவே புதிய தம்பதிகளான மகாவிஷ்ணுவையும் பூமாதேவியையும் பார்வதியும் பரமேஸ்வரனும் தங்கள் இடத்திற்கு  கைலாயத்திற்கு  வந்து விருந்து உண்ண வேண்டும் என்று அழைத்தார்கள். ஆனால் பூமாதேவி வர மறுத்துவிட்டாள். ஏன்!? ஏன் என்று பார்ப்போமா!??.

நாதா! தங்களோடு நான் கைலாயம்  வந்து விட்டால் இந்த பூலோகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் எங்கு போய் இருக்கும் .எனக்கு இன்னொரு பெயருண்டு .அசலா என்று ஒரு பெயர் உண்டு. அசலா என்றால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பவள்  என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா!! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும் .நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள். அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா !!??நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்று அனுப்பி விட்டாள்.

முதல் மனைவியிடம் மிகவும் நொந்துபோன பகவான் (மனிதர்கள் மட்டுமல்ல பகவானும் மனைவியிடம் நொந்து போய் உள்ளார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்).எங்கு சென்றாலும் மனைவி வரலையா ??நீங்கள் மட்டுமா  !?வந்தீர்கள்! என்ற கேள்வியை கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்து வேறு ஒரு திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்து சமுத்திரராஜன் பெண்ணான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமியும் ஒரு வீட்டிலும் நிரந்தரமாக தங்க மாட்டாள் .
ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால் மறுநாள் இன்னொரு வீட்டிற்கு போய் விடுவாள். செல்வத்தின் அதிபதி அல்லவா!! நிலையில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார் பெருமாள் .அவளை அழைக்கச் செல்லும் நேரம் எங்காவது போய் இருக்கிறாள் என்றே பதில் கிடைக்கும். அவள்  அசைய மறுக்கிறாள் .இவளோ ஓடிக்கொண்டே இருக்கிறாள்.பெருமாளும் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார் .ஆனால் அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்று விட்டார்.பூலோகத்தில் மானிடர்கள் வயதாகிவிட்டால் மனைவியின் தயவும் இல்லை என்றால் பின் தேடும் இடம் மகனின் வீடாகத்தான் இருக்கும் .அதுபோல் பகவானும் தன்னை யாரும் கவனிக்க வில்லை என்ற காரணத்தினால் கடைசியாக தன் மகன் வீட்டிற்குச் செல்லலாம் என்று மன்மதன் வீட்டிற்கு சென்றார்.

அவ்வாறு மன்மதன் வீட்டிற்குச் சென்று தங்கலாம் என்று செல்லும் பொழுது வழியில் அவரை ஒரு முனிவர் பார்த்து உன் மகன் செய்த வேலையைப் பார்த்தாயா!! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டு வைக்கிறான் .அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்து இருக்கிறார் .பஸ்பம் ஆகி விட்டான் என்று சொன்னதும் மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் .மீண்டும் வேறு வழியில்லாமல் பாற்கடலுக்கே வந்தார். வந்து ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்து கொண்டார் .ஆனால் இத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த ஆதிசேஷனும் அவர் மேல் அக்கறை இல்லாமல் விஷக் காற்றை வெளியிட்டபடி இருந்தான்.(அதாவது பூலோகம் மேலோகம் மனிதன் தெய்வம் என்று ஒன்றும் வித்தியாசம் இல்லை. கவனிப்பதற்கு யாரும் இல்லை என்றால் கவனிக்க நாதி இல்லை என்றால் அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்).

சரி ஆதிசேஷன் தான் கோபமாக இருக்கிறான். நாம் சற்று வெளியே போய் வரலாம் என்று கருடன் மீது ஏறி அமர்ந்தார்.கருடன் மீது ஏறி பறந்து கொண்டிருக்கும் பொழுது கருடன் பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்து கருடன் சுவாமியிடம் ,சுவாமி நீங்களோ வேளாவேளைக்கு உணவு உண்டு விடுகிறீர்கள்.ஆனால்  எனக்கோ மிகவும் பசிக்கிறது. இதோ என் ஆகாரமான பாம்பு  பூமியில் ஊர்ந்து செல்கிறது. நான் அதைப்பிடித்து உண்டு எனது பசியை ஆற்றிக் கொள்ளப் போகிறேன் என்று கூறி பகவானை நடுவழியில் இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டான் கருடன்.

அனைத்தையும் பார்த்தார் பகவான் முதல் மனைவியும் ஒத்துழைக்கவில்லை இரண்டாவது மனைவியும் ஒத்துழைக்கவில்லை .மகனும் இல்லை. வாகனமான கருடன் சதி செய்கிறான். படுக்கையான ஆதிசேஷனும் ஒத்துழைக்க மறுக்கிறான். என்ன செய்வது என்று மனம் நொந்து தன்னை கவனிக்க யாரும் இல்லையே நாம் இந்த உருவத்துடன் இருந்து என்ன பிரயோஜனம் என்று நினைத்து ஒரு கட்டையாக மாறி அங்கேயே பூரியில் தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில் பெருமாள் கட்டை வடிவத்தில் இருக்கிறார்.

பூரி ஜெகன்நாதர் கோயிலில் பெருமாள் கட்டையாக இருப்பதன் காரணத்தை அறிந்து கொண்டீர்களா!! இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி இருந்தால் யாராக இருந்தாலும் அந்த விதியை மாற்ற முடியாது. அனுபவித்தே ஆகவேண்டும் .துன்பம் வந்தாலும் அனுபவிக்க வேண்டும் .இன்பம் வந்தாலும் அனுபவிக்க வேண்டும். பகவானுக்கே இந்த கதி என்றால் நாமெல்லாம் சாதாரணம் அல்லவா.

இதுவே பெருமாள் பூரியில் கட்டை ஆகிய கதை.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ