28.3.2019 திருப்பதி யாத்திரை

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது வேங்கடமலை புராண மகிமைகள் பற்றி.நான் அனைவரிடமும் கூறியது போல் 28 .3. 2019 வியாழக்கிழமை திருப்பதி சென்று வந்தேன் .அதன் விவரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலாக உள்ளேன்.

அனைவரும் நான் உட்பட எத்தனையோ முறை திருப்பதி சென்று இருப்போம். வேங்கடவனை தரிசித்திருப்போம். ஆனால் திருப்பதியில் வேங்கட தரிசனம் தவிர இன்னும் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள் எவை என்று ஒரு சிறுகுறிப்பு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் அனைவரும் மறக்காமல் இரண்டு நாள் வேங்கட மலையில் தங்கி அனைத்து திவ்ய ஸ்தலங்களையும் தரிசிக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

1.வராஹஸ்வாமி ஆலயம்
1ஏ. வகுளாம்பிகை ஆலயம்.
2.புஷ்கரணி குளம்.
3.மாடவீதி ஊர்வலம்
4.ந்ரஸிம்மஸ்வாமி ஆலயம்
5.க்ருஷ்ணன் கோவில்
இது அனைத்தும் மாடவீதியைச் சுற்றியே உள்ளது .இது தவிர.

6.ஆகாச கங்கை
7. ஸ்ரீ வாரி அதாவது பாத தரிசனம்(கதை உண்டு)
8.வேணுகோபாலஸ்வாமி ஆலயம்
9.பாதாள கங்கா
10. பாபவிநாசம்
11.சிலா தோரணம்(கதை உண்டு)
12.சக்ர தீர்த்தம் (கதை உண்டு)
13.பத்ம தீர்த்தம்
14.ஆஞ்சநேயர் ஆலயம்
15.ஜீவாலஜிகல் பார்க்
இது அனைத்தும் மலை மேலே உள்ளது இன்னும் ஒன்றிரண்டு விட்டுப்போயிருக்கலாம் ஞாபகமில்லை.

மலையின் கீழே கோவிந்தராஜ பெருமாள் கோவில் .அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில். முடிந்தால் ஸ்ரீகாளஹஸ்தி அனைத்தையும் பார்த்து வரவேண்டும் . இனி அனைத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு.

வராஹஸ்வாமி:_
திருப்பதியில் முதலில் வராக சுவாமி கோயில் கொண்டிருந்ததாகவும் பிறகு ஸ்ரீநிவாச பெருமாள் வராக சாமியிடம் அனுமதி கேட்டு கோவில் கொள்ள இடம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதற்குப் பலனாக என்ன தருவாய் என்று கேட்டதற்கு தங்களைத்தான் முதலிலே தரிசனம் செய்ய வேண்டும் .தங்களை தரிசித்த பிறகுதான் என்னை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டளையை பக்தர்களுக்கு வைக்கிறேன் என்று கூறினாராம் .ஆதலால் பக்தர்கள் முதலில் குளத்தில் நீராடிவிட்டு வராக சுவாமியை தரிசித்து விட்டுத்தான் திருப்பதி வேங்கடவனைத் தரிசிக்க வேண்டும்.

வகுளாம்பிகை ஆலயம்:_
ஸ்ரீனிவாசப் பெருமாளின் வளர்ப்பு தயாரான வகுளாம்பிகை ஆலயம் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது. வேங்கடவனை தரிசித்து விட்டு வெளி வரும் போது அனைவரும் வகுளாம் பிகையையும் தரிசிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

சிலா தோரணம்:_(படம் இணைத்து உள்ளேன்).
ஸ்ரீநிவாசன் பத்மாவதி தாயாரை  தேடி வனத்தில் அலைந்த பொழுது பாறைகளின் மேல் படுத்துக் கிடந்தாராம். பகவான் தங்கள் மேல் படுத்துக் கிடப்பதை பார்த்த பாறைகள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஒரு மாலை போல் தோரணம் கட்டி பகவானுக்கு சூட்டியதாம்.அதுவே தற்போது சிலாதோரணம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ வாரி ( அ) பாத தரிசனம்.
பகவான் தாயாரைத் தேடி மலைமேல் அலைந்த பொழுது தன்னுடைய பாதத்தை அழுந்த ஊன்றி இருந்த இடம்தான் ஸ்ரீவாரி அல்லது ஸ்ரீபாதாளு என்று தெலுங்கிலும் ஸ்ரீ பாத தரிசனம் என்றும் தமிழிலும் அழைக்கப்படுகிறது.
இது மலைமேல் உள்ளது அவசியம் காண வேண்டிய ஒரு இடம்.

பாப விநாசம்:_
இந்த இடத்தை தரிசித்தால் நமது அனைத்து பாவங்களும்  விலகும் என்பது ஐதீகம்.  ஆதலால் இதையும் மறக்காமல் தரிசிக்க வேண்டும்.

ஆகாய கங்கை;_

இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் குளித்தாலோ அல்லது நீரை தலையில் தெளித்துக் கொண்டாலோ (புரோஷித்துக் கொண்டால்) சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சக்ர தீர்த்தம்:_
பத்மநாபன் என்றொரு பக்தன் இங்கு பெருமாளை குறித்து தவம் செய்து கொண்டிருந்தான். கடும் தவம் மேற்கொண்டான் .சருகு இலை காற்று முதலியவையே ஆகாரமாகக் கொண்டு இருந்தான். அவனுடைய தவத்தை மெச்சி பெருமாள் அவனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டதற்கு தாங்கள் எப்பொழுதும் என்னை ரட்சித்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான் .பெருமாளும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி அங்கு அவனுக்காக ஆலயம் கொண்டு அமர்ந்துள்ளார்.

இவ்வாறு அவன் மீண்டும் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு அரக்கன் அவன் முன் தோன்றி அவனை விழுங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான் .அப்பொழுது அவன் பெருமாளை அழைக்கையில் பெருமாள் தன்னுடைய சக்கரத்தை  அனுப்பினார். சக்கரம் அரக்கனின் கழுத்தை அறுத்து தள்ளியது .பிறகு அங்கு ஒரு தீர்த்தம் உண்டாகியது. அவ்வாறு உண்டாகிய தீர்த்தத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர்.

இதுபோல் பத்ம தீர்த்தம் பாதாள கங்கா அனைத்திற்கும் சிறு சிறு குறிப்பு கொடுத்துக் கொண்டே இருந்தால் கதை மிகவும் நீண்டு விடும் என்ற காரணத்தினால் பக்தர்கள் அனைத்தையும் தரிசித்து பலன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி என்று கூறி விடை பெறுகிறேன்.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

(அதேசமயம் மறக்காமல் ஒரு குறிப்பு மட்டும் தர விழைகின்றேன் .) அதாவது 1000 வருடங்களுக்கு முன்பு ராமானுஜர் காலத்தில் சைவ வைணவ சண்டை மிகவும் பிரசித்தம் .கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் இதைப் பற்றி மிகவும் விலாவரியாக விவரித்து கூறியுள்ளார்.அவ்வாறு இருந்த பொழுது குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் .ஆகவே திருப்பதியில் முருகன் தான் தெய்வம் என்று சைவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.ஒருநாள் ராமானுஜர் திருப்பதி சென்று வேல் சங்கு சக்கரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டு ஆலயத்தில் வைத்து எது உனக்கு விருப்பமோ அதை எடுத்துக்கொண்டு அந்த தெய்வம் போல் காட்சி அளிக்க வேண்டும் என்று கூறி கதவை சாத்திக் கொண்டு வந்து விட்டாராம்.மறுநாள் சென்று பார்க்கையில் சங்கு சக்கரத்தை எடுத்துக் கொண்டு பெருமாள் ஸ்ரீநிவாசனாக வேங்கடேசனாக  காட்சி தந்தாராம். அன்றிலிருந்து திருப்பதியில் ஸ்ரீவேங்கடேசனாக ஸ்ரீநிவாசனாக மக்கள் தெய்வத்தை தொழுகிறார்கள் வணங்குகிறார்கள் கும்பிடுகிறார்கள். இது ஒரு சிறிய ஸ்ரீநிவாசனை பற்றிய ஒரு குறிப்பு)

நன்றி நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ