பழநி துர்க்கை அம்மன் ஊர்க் கோயில் மஹிமை

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

(அனைவருக்கும் வணக்கம்.நான்  ஜூலை 15
வரை விடுப்பு கூறியிருந்தேன் .என் மகன் மருமகள் அனைவரும் வந்திருந்து 15ஆம் தேதி கிளம்பி சென்று விட்டார்கள் அமெரிக்காவிற்கு..  இடையில் இரண்டு கண்ணும் புரையோடிப் போய் இருந்ததால் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு செய்து தற்போது ஓய்வில் இருக்கிறேன். 19ஆம் தேதி மறுபடியும் செக்கப்புக்கு செல்ல வேண்டும் .அதற்குப் பிறகு டாக்டர்கள் கூறுவார்கள் மேற்கொண்டு என்ன செய்யலாம் .மருந்து வேண்டுமா வேண்டாமா?? சரியாகிவிட்டதா!!. கண்ணாடி போட வேண்டுமா என்ற தகவலையும் கூறுவார்கள் )

இன்று நாம் காண இருப்பது பழனி ஊர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனின் மகத்துவம் பற்றி. அந்த துர்க்கை அம்மன் யாருக்கு என்ன மகிமையை செய்தார் என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா

இனி கதைக்கு செல்வோம். .இது ஒரு உண்மைச் சம்பவம்..  1965  66ல்  நான் பழனியில் இருந்த பொழுது நடந்த உண்மை சம்பவம்..

நாங்கள் பழனியில் அடிவாரத்தில் குடியிருந்தோம் .எனக்குத் தெரிந்த மிகவும் நல்ல ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் நிறைய குழந்தைகளுடன் வசித்து வந்தார்கள் .அதில் மூத்த பெண் பருவமடைந்து மிகவும் அழகாக இருப்பாள். இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் வீட்டில் பெண்களை வெளியில் அனுப்ப மாட்டார்கள். எதேச்சையாக அந்தப் பெண் வெளியிலோ எங்கோ செல்லும் பொழுது ஒரு கயவன் பார்த்து விட்டு அவளை அடைய வேண்டும் என்று நினைத்து அது முடியாத காரணம் சூழ்நிலை என்பதை அறிந்து பில்லி சூனியம் மாயமந்திரம் முதலியவை செய்தாவது அவளை அடைய வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

அவர்கள் வீட்டிற்கு தயிர்க்காரி ஒருவர் தினமும் தயிர் மோர் பால் கொண்டு வருவாள் .இவனும் இந்த தயிர்க்காரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவரிடம் நைசாக பேசி அந்தப் பெண்ணின் சிறுநீரை வாங்கி வரும்படி கூற அவள் சென்று அம்மா குழந்தைக்கு முடியாத ஒரு நோய். தங்கள் மகளின் சிறுநீர் கொடுத்தால் சரியாகும் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே கன்னிப் பெண் சிறுநீர் சற்று வேண்டும் என்று கூற அவர்கள் எதேச்சையாக இதை நம்பி அவர் கேட்டபடி கொடுத்து இருக்கிறார்கள்.

இவன் அதைப் பெற்று ஊரிலுள்ள மந்திரவாதியிடம் சென்று பில்லி சூனியம் ஏவல் செய்து விட்டார் அந்தப் பெண் ஏதோ மாதிரி பேசுவாள். வலிப்பு வந்த மாதிரி துடிப்பாள். ஒரு நாளில் இரண்டு மூன்று தடவைஅதுபோல் நடக்கும் .ஏதோ சாதாரணம் என்று நினைத்து அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து விட்டார்கள் .திருமணம் செய்து போன இடத்திலும் இது போன்று நடக்க அவர்கள் பயந்து ,கொண்டு வந்து இவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டார்கள்.

தாயாருக்கு மிகவும் வருத்தம். பழனியில் உள்ள ஒரு கோயில் விடாமல் சென்று பிரார்த்தனை செய்வார்கள். ஒருநாள் ஊர் கோவில் என்று கூறும் பெரிய கோவிலில் (இந்தப் பெரிய கோவில் கோவை பொள்ளாச்சியில் இருந்து பழனி வரும் பொழுது சண்முகம் நதியைத் தாண்டி பஸ் ஸ்டாண்ட் செல்லும் முன்பு இடது பக்கம் மண்ரோட்டில்  இறங்கினால் பெரிய கோவில் ,மாரியம்மன் கோயில், பஜார் என்று வரும் ..அனைவரும் அவசியம் ஒருமுறை செல்ல வேண்டும். காரணம் இந்த கோவிலின் முன் புறத்தில் அமைந்துள்ள துர்க்கை மகா சக்தி வாய்ந்தவர் .அவருடைய சக்தியைப் பற்றித் தான் இப்பொழுது நான் கூறப் போகிறேன்)

அந்த அம்மாள் ஊர் கோவிலில் முன்னாடி உள்ள துர்க்கையிடம் தாயே என்னையும் என் குடும்பத்தையும் என் மகளையும் காப்பாற்று என்று கதறி அழ அதைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரவாதி ஒருவர் அருகில் வந்து அம்மா என்ன பிரச்சனை என்று வினவ இவர் தன் பிரச்சனைகளை கூற நான் அதற்குப் பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லி அதற்கான பணத்தை வாங்கி ஒரு வாரத்திற்குள் வேண்டிய பொருள்களை வாங்கி நான் தங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.(அந்த மந்திரவாதியை அனுப்பியதே தாயாராகத்தான் இருக்க வேண்டும் என்று பிற்காலத்தில் இவர்கள் கூற நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்)

முதன்முதலில் உயிருள்ள ஒரு கோழியை பலி கொடுத்துத்  தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி கோழியும் வாங்கி வைத்திருந்தார். நாளை ஞாயிறு பலி  தீர்க்க வேண்டிய நாள் .ஆனால் சனி இரவு என்று அந்த கோழி தலை தொங்கிவிட்டது .அதைப் பார்த்தவுடன் அவருக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. பில்லி சூனியம் ஏவல் அனைத்தும் நாம் அந்தக் கோழியை கொண்டு தான் செய்ய வேண்டும் என்று இருந்தோம் .அதனிடம் அந்தப் பலி இறங்கிவிட்டதால் இவர்களை பிடித்த பீடை  விலகி விட்டது என்று மகிழ்ந்து மறுநாள் காலை வந்து அம்மா உங்கள் பீடை விலகிவிட்டது. பரிகாரம் நிவர்த்தியாகி விட்டது என்று  கூறி வீபூதியை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் .. (பிறகு அன்று முதல் அந்த மந்திரவாதியைப் பல இடங்களில் தேடியும் இன்று அவர் யார் கண்ணுக்கும் தென்படவில்லை என்பது தான் இங்கு முக்கியமாக உணர வேண்டிய ஒரு செய்தி).துர்க்கை அம்மன் அவர் வடிவில் வந்தது போல் அந்த குடும்பத்தை பிடித்திருந்த அனைத்தும் அன்றே விலகி விட்டது.

பின் அந்தப் பெண் தன் கணவனுடன் சேர்ந்து சந்தோசமாக இன்றுவரை வாழ்ந்து வருகிறார் என்பது கண்கூடாக கண்ட நிதர்சனம். அதற்குப் பிறகு அந்தத் தாயார் ஊர் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து புடவை வாங்கிக் கொடுத்து பரிகாரமும் செய்தார் என்பதும் நிதர்சனமான நிச்சயமான உண்மை.

அதாவது ஏதாவது ஒரு வடிவில் தெய்வம் வழிகாட்டும் என்று கூறுவது போல் துர்க்கை அம்மன் கோவிலில் அன்று அந்தத் தாய்க்கு அந்த மந்திரவாதி மூலமாக வழிகாட்டி அந்த குடும்பத்திற்கு பரிகாரம் செய்யச் சொல்லி நிவர்த்தி செய்து ஒன்றும் அறியாதவள் போல் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை போற்றி வணங்குவோம் நன்றி வணக்கம்

முதலில் இந்த துர்க்கை அம்மன் கல்லில் கம்பியோ கூடாரமோ இல்லாமல் நின்று கொண்டிருந்தார். தற்பொழுது இந்த அம்மனின் மகிமை பரவ அந்த அம்மனின் கற்சிலையை சுற்றி கம்பி வேலி அமைத்து பலி பீடம் அமைத்து தனியாக பூஜை புனஸ்காரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி

நன்றி நாளை வேறு ஒரு வரலாறுடன்
சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ