சமையல் அருமை

இன்று அம்மாவைக் கூட்டிக் கொண்டு மகன் கண் டாக்டரிடம் சென்று விட்டான். மருமகள் பேரன் பேத்தியுடன் கோவை சென்று விட்டார்கள். நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்.

சற்று முன்பு ராதை ஸ்ரீராம் பதிவு பின் மற்றவர்களுடைய பதிவுகளை பார்த்தேன். அவர்கள் சமையல் செய்ததை போட்டிருந்தார்கள். நான் என்ன சளைத்தவனா?? என்று நினைத்து நானும் சமைத்திருக்கிறேன். இன்று அவர்கள் தலைவிதியோ என்னுடைய அதிர்ஷ்டமுமோ துரதிர்ஷ்டமோசமைக்க வேண்டிய சூழ்நிலை வந்த காரணத்தினால் இன்று நான் சமைத்திருக்கிறேன். அதை பதிவிட்டிருக்கிறேன்.

அவர்கள் இன்னும் டாக்டரிடமிருந்து வரவில்லை. சாப்பிட்ட பிறகு திட்டுவார்களோ புகழ்வார்களோ தெரியாது. நானும் சமையல் செய்து விட்டேன் என்ற பதிவை போடுகிறேன்.

சாதம் முள்ளங்கி பொரியல் தக்காளி ரசம் மற்றும் பருப்பு பொடி அப்பளம் மாவடு ஊறுகாய் . போதுமா.

அவர்கள் சாப்பிட்ட பிறகு என்ன கூறுகிறார்கள் என்பதை மீண்டும் ஒரு தனிப் பதிவாக போடுகிறேன் .நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்