என் வாழ்வின் பொன்னான தருணங்கள்

#என் வாழ்வின் பொன்னான தருணங்கள்#

2000 வருடம் எனது மகன் பிளஸ் டூ எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளான்.ஓரோர்  எக்ஜாம் முடிந்த பிறகும் எவ்வாறு எழுதி இருக்கிறாய் என்று கேட்டால் பரவாயில்லை என்று ஒற்றை வரியில் தான் பதில் வரும் .இறுதித் தேர்வு எழுதிய பிறகும் எவ்வாறு எழுதியிருக்கிறாய் என்று கேட்டதற்கும் அதேபோல் ஒற்றை வரியில் தான் பதில்.(இந்த காலத்து பசங்க இல்ல. அப்படி ஒரு வரியில் தான் சொல்லுவாங்க. நம்மள மாதிரி எல்லாம் நம்ம காலம் மாதிரி விளாவரியா சொல்ல மாட்டார்கள்).

லீவில் அவனை டைப்ரைட்டிங் ,கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று பல கோர்ஸ்களுக்கு அனுப்பி உள்ளேன்.மனதில் உள்ளூர ஒரு பயம். நல்ல மார்க்கு வந்தால் இன்ஜினியரிங், இல்லையென்றால் காமர்ஸ் .மேலும், பணமும் வைத்திருந்தேன் .பணம் கொடுத்து ஒரு நல்ல காலேஜில் இன்ஜினியரிங் சேர்க்கலாம் என்று. ஆனால் எதையுமே நான் அவனிடம் முன்கூட்டி சொல்லவில்லை .அவனும் என்னிடம் எப்படி என்ன என்று மார்க்கைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் மவுனம் காத்து இருந்தோம் ரிசல்ட் வரும் வரை.

ரிசல்ட் வருவதற்கு முன்பு எனக்கு பள்ளியில் இருந்து போன் வந்தது .என்ன ஏது என்று நான் பயந்து கொண்டு போனை எடுத்தால் பள்ளியில் உங்கள் மகன் முதல் மார்க் !!!கெமிஸ்ட்ரியில் நூற்றுக்கு நூறு !!!கணக்கில் 199 ,பிசிக்ஸ் இல் 198 ,உடனடியாக அவனை அழைத்துக் கொண்டு தாங்கள் வரவும் என்று தகவல். எனக்கும் எனது மனைவிக்கும் மனம் எல்லாம் பூரிப்பு, ஆனந்தம் ,மகிழ்ச்சி ,சந்தோஷம், அந்த நேரத்தில் நான்  எனது இன்சூரன்சு ஆபீஸிலிருந்தேன். உடனடியாக கேள்விப்பட்ட உடனே 500 ரூபாயை எடுத்து அங்குள்ள அனைவரும் இனிப்பு வாங்கி கொண்டாடுங்கள் என்று கூறி விட்டு நேராக வீட்டிற்கு வந்து மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு சென்றால் அங்கு என்ன ஒரு வரவேற்பு.தினமலரில் இருந்து வந்து ஃபோட்டோ வும் எடுத்தார்கள்.

அதற்குப் பிறகு ஒருநாள் பொள்ளாச்சி எம்.எல்.ஏ.வாக அப்பொழுது இருந்தவர் திரு வி பி சந்திரசேகர் அவர்கள். அவர் 100 மார்க் வாங்கியதற்காக தங்க மெடல் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.அது அப்போது பொள்ளாச்சியில் உள்ள அனைத்து டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு பொள்ளாச்சி டாக்டர் அசோசியேசனின் தலைவர் திரு டாக்டர் ராஜா அவர்கள் தலைமையில் ஸ்கூலில் ஒரு விழா நடத்தப்பட்டு அவர் கையால் மீண்டும் எனது மகனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு ஒரு நாள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு அந்த வருடம் பிளஸ்-2 படித்து கொண்டிருக்கின்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் மகனை காண்பித்து ,இவர் ஒரு முன்னுதாரணம் .இவரைப்போல் தாங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறி பிரின்ஸ்பால் திருமதி மஞ்சுளா அவர்கள் கையாளும் பரிசு வழங்கப்பட்டது..

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் ,என்ற குறளை சிறிது மாற்றி"" சான்றோன் எனக்கேட்ட தந்தை"" என்று நான் அடைந்த பெருமிதத்திற்கு  அளவே இல்லை.

இதுவே நான் வாழ்வில் அனுபவித்த பொன்னான தருணங்கள்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ