வாசு பேரன் என்று பெயர் வந்த காரணம்

நான் ஏற்கனவே கூறியபடி எனது மகன் அமெரிக்காவில் டெக்ஸாஸில் இருக்கிறான். அவன் பெயர் அருண். ஆனால் அங்குள்ளவர்கள் வி அருண் என்று எழுதினால் வாசுதேவ அருண் என்று படிப்பதில்லை .ஏ வாசுதேவன் அருண் வாசுதேவன் என்றே படிக்கிறார்கள்.பிற்பாடு ஏ வை சேர்த்து அழைப்பதில்லை .வாசுதேவன் என்றே அழைக்கிறார்கள்.

இதை நான் இங்கு ஏன் கூறுகிறேன் என்றால் நான் சிவனேன்னு பொள்ளாச்சியில் இருந்தாலும் என் மகன் அங்கு வீடு வாங்கினால் அங்குள்ள வீட்டிற்கு வாசுதேவன் இல்லம் என்று அங்குள்ள ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் சூட்டப்பட்டு அங்குள்ள நிலவரப்படி என் பெயரில் வீடு உள்ளது போல் உள்ளது. இது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தாலும் இதைவிட மிகவும் ருசீகரமான ஒரு தகவலும் உண்டு. அதாவது

எனது பேரனின் இயற்பெயர் வாசுதேவன் ஆனால் அனைத்திலும் பள்ளி முதல்கொண்டு ஆரூஷ் என்ற பெயர் தான் உள்ளது.அவன் ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்து வலது கை எலும்பு முறிந்து விட்டது அவசர சிகிச்சைக்காக டாக்டரிடம் சென்று பெயரைச் சொன்னால் வாசுதேவன் என்றால் அவர்களுக்கு  புரியவில்லை .ஆதலால் அவர்கள் வாசுதேவன் என்பதை வாசு பேரன் என்று டைப் அடித்து பதிவு செய்து விட்டார்கள் அதனால் அவனது பெயர் வாசு பேரன் என்று ஆகிவிட்டது.

அவர்கள் ஆஸ்பத்திரியில் வாசுதேவன் என்று பதிந்த பெயரை இங்கே உங்களின் பார்வைக்காக அனுப்பியுள்ளேன்.

உண்மையில் அவன் வாசுதேவன் பேரன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மிகவும் மனம் மகிழ்ச்சியாக உள்ளது. அதை அமெரிக்காவே கூறி விட்டது என்பதை எண்ணும் போது இன்னும் மனம் புளகாங்கிதம் அடைகிறது.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ