ராமாயணம் தோன்றக் காரணம்

வணக்கம் இன்று முதல் எனது இரண்டாம் பாகம் தொடரும். பாகம் 2.

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.

நமது இதிகாசங்கள் புராணங்கள் அனைத்துக்கும் நடந்த விதத்தை ஊன்றி கவனித்தோமேயானால் சாபம்தான் அதற்கு காரணமே அன்றி வேறில்லை. அனைத்தும் சாபத்தினால் தான் நடந்தது.நமது ராமாயணம் தோன்றுவதற்கு மூல காரணமே சாபம்தான். அது என்ன  எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??.

பாரசுராமரின் தந்தை   ஜமதக்னி முனிவர்.அவரின் மனைவி பெயர் ரேணுகாதேவி. அங்கு அப்பொழுது ஆட்சியில் இருந்தவன் கார்த்த வீர்யார்ஜுனன்.அவனுடைய நடவடிக்கை பிடிக்காமல், அவனை  எச்சரிக்கும் பொருட்டு ஒருநாள் ரேணுகாதேவி அவனுடைய அரண்மனையில் புகுந்து அவனை எச்சரித்து விட்டு வந்தார் .ஆனால் ஜமதக்னி முனிவர் தன் மனைவியை காணவில்லை என்று எல்லா இடத்திலும் தேடி சலிப்புற்று நேரடியாக விஷ்ணுவுக்கு சாபம் கொடுக்கிறார்.

ஹே விஷ்ணுவே !!நான் என் மனைவியைக் காணாமல் தேடி தவிக்கின்றேன் ..நீயும் உன் மனைவியை தொலைத்துவிட்டு என்னைப்போல் தேடி அலைவாயாக !! என்று சாபம் கொடுக்கிறார்..உடனே மகாவிஷ்ணு தங்கள் சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ராமாவதாரத்தில் நான்  ராமனாக அவதாரம் செய்யும்பொழுது தேவி சீதையாக அவதாரம் செய்வார்.அப் பிறப்பில் உங்களுடைய சாபத்தை ஏற்கிறேன் என்று கூறினார்.

இதன் காரணமாகவே ஆட்சியைத் துறந்து வனத்தில் சீதையைத் தொலைத்து பலரின் உதவியுடன் ராவணனைக் கொன்று  ஆட்சியில் ஏறினார் ..இதற்குக் காரணம் சாபம்.

சாபம் 2.

பட்டாபிஷேகம் முடிந்து சீதை கருவுற்றிருக்கும் சமயம் மீண்டும் அவளை வனத்தில் கொண்டு  விடச் சொல்லுகிறார் ராமர்..அச்சமயம் லட்சுமணன் சீதையை விட்டு விட்டு அழுது புரண்டு மனவருத்தத்தை சுமந்திரனிடம் சொல்லும்பொழுது சுமந்திரன் இது முன்பே தெரிந்த ஒன்றுதான்.இதுவும் சாபத்தினால் தான் விளைந்தது. என்று கூறி அந்த சாபத்தை கூறுகிறார்.

அதாவது முன்னொரு காலத்தில் அசுரர்களால் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் சரண் அடைந்து அவருடைய மனைவியின் கருணையின் காரணமாக காக்கப்பட்டு அங்கே அச்சமில்லாமல் வாழத் தொடங்கினார்கள். இதுபற்றி தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் கோபமுற்று தகுதியற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் பிருகு முனிவரின மனைவியின் தலையை  தனது சக்ராயுதத்தால் அறுத்துத் தள்ளினார்.

அதைக் கண்ட பிருகு முனிவர் உடனே வெகுண்டு அனைவரையும் ரட்சித்து காப்பாற்ற வேண்டிய நீரே கோபத்தின்பால்பட்டு எனது மனைவியின் தலையை அறுத்து  தள்ளினீர்..நான் உங்களை சபிக்கிறேன்.. நீர் ராம அவதாரம் செய்யும்பொழுது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு மீண்டும் உமது மனைவியை இழந்து தவிப்பீராக!! என்று கூற அதைக் கேட்டு விஷ்ணு தங்களுடைய சாபத்தை மனமுவந்து ஏற்கிறேன் என்று கூறினார். இது சாபம் 2.

இதன் காரணமாகவே சீதை கருவுற்றிருக்கும் சமயம் வால்மீகியின் ஆசிரமத்தில் தஞ்சமடைந்து லவ் குசர்களை பெற்று பிறகு ராமனுடன் சேராமலே இப்பூவுலகை நீத்தார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நமது இதிகாசங்கள் அனைத்துக்கும் மூல காரணம் சாபமே.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ