அர்ஜுனனுக்கு வில்லனுக்கு விஜயன் என்று பெயர் எவ்வாறு வந்தது

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது அர்ஜுனன் எவ்வாறு வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.வில்லுக்கு விஜயன் என்ற பெயர்  அவனுக்கு பின்னாளில் எவ்வாறு அமைந்தது என்பதை பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போம்.

துருபத மன்னனால்  அவமானப்படுத்தப்பட்டு, மனம் நொந்து, வெந்து, சோர்ந்து, நடை தளர்ந்து, துரோணர் வந்து கொண்டிருந்தார், கிருபாச்சாரியாரின் குருகுலம் நோக்கி.

அப்பொழுது அவரின் குருகுலத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் .அவர்கள் வீசிய பந்து வேகமாக சென்று ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது .கிணற்றை சுற்றி அனைவரும் மிகுந்த கவலையுடன் சத்தமிட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது அழுக்குத் துணி உடுத்தி, மீசை தாடியுடன் ,பரிதாமாக வந்து நின்ற துரோணர் ,அவர்களை நோக்கி ஏன்? கிணற்றை சுற்றி அனைவரும் நின்று கொண்டிருக்கிறீர்கள்! என்று கேட்டார்.

அவருடைய தோற்றத்தைக் கண்டு முகம் சுழித்து, ஒரு அலட்சிய பார்வையுடன் துரியோதனன் ,அவரிடம் நாங்கள் எதற்கு நின்றால் உங்களுக்கு என்ன? உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறினான்.(தமிழில் ஒரு பழமொழி உண்டு. உருவம் கண்டு எடை போடாதே! தோற்றத்தை வைத்து மனிதனை ஆராயாதே! ஏழ்மையில் உள்ளவனைப் பரிகாசம் செய்யாதே !யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பது திறமைசாலிகளுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது)

உடனே அவரை கண்டு அர்ஜுனன் மிகவும் பணிவாக சுவாமி, எங்களுடைய பந்து, நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபொழுது கிணற்றில் விழுந்துவிட்டது ,அதை எடுக்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம் என்று மிகவும் அடக்கத்துடனும் ,பணிவுடனும், கூறினான்.

அது கேட்டு மிகவும் மகிழ்ந்த துரோணர் தம்பி உன் பெயரென்ன என்று கேட்டார்.

உடனே அர்ஜுனன் ,சுவாமி என் பெயர் அர்ஜுனன். நான் இங்கு குருகுலத்தில் படிக்கிறேன் என்று கூறினான்.

அதுகேட்டு அகமகிழ்ந்த துரோனர் நல்லது ,இப்பொழுதே நீருக்குள் விழுந்த பொருளை எடுக்கும் மந்திரவித்தையை உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று கூறி அங்கிருந்து சில புற்களை பறித்தார்.

பிறகு அர்ஜுனனை மட்டும் அருகில் அழைத்து, அவன் காதில் மந்திர உபதேசம் செய்து, தான் பறித்த புற்களை அவனிடம் கொடுத்து அர்ஜுனா மந்திரத்தை ஜெபித்தபடி ஒவ்வொரு புல்லாக கிணற்றுக்குள் வீசு என்றார்.

அவர்அவர் கூறியபடியே மந்திரத்தை ஜபித்து ஒவ்வொரு புல்லாக கிணற்றுக்குள் வீச அது ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு நீண்ட கயிராக மாறியது .பிறகு அந்தக் கயிரின் உதவியுடன் பந்தை மேலே கொண்டு வந்தான் அர்ஜுனன். அதுகண்டு அனைவரும் அதிசயித்தனர் .அர்ஜுனன் அவர் காலில் விழுந்து வணங்கினான். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே சிரத்தையும் கவனமும் கொண்டு கட்கும் வித்தையை  ச்ரத்தையுடன் கற்று மனதார நேசித்த காரணத்தினால் தான் பின்னாளில் அவன் வில் வித்தையில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல் வில்லுக்கு விஜயன் என்ற பெயரையும் பெற்றான்.

இதுவே அர்ஜுனன் வில்லுக்கு விஜயன் என்று பெயர் வந்த வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

  1. வில்லுக்கு விஜயன் வில்லனுக்கு விஜயனல்ல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ