முருகனின் அவதாரங்கள்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காணவிருப்பது முருகப்பெருமானின் அவதாரங்கள்

என்னது முருகப்பெருமானின் அவதாரங்கள் என்று கேட்கிறீர்களா முருகப்பெருமானும் பல அவதாரங்களை எடுத்துள்ளார் அது என்ன என்று சற்று விரிவாகப் பார்ப்போம்

முதல் அவதாரம்

பிரம்மதேவன் சனகாதி முனிவர்களைப் படைத்து ச்ருஷ்டியை உருவாக்க நினைத்தார்.சனகாதி  முனிவர்கள் நால்வரும் நாங்கள் சிருஷ்டியை  உருவாக்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு அனைவரும் தவத்தில் ஈடுபட்டனர். சனத்குமாரர் மிகவும் பயங்கரமான தவத்தில் ஈடுபட்டார். அனைத்தையும் துறந்து எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்தார்.

இவர் தவம் செய்து கொண்டிருக்கும் போது சிவனும் பார்வதியும் அடிக்கடி வந்து இவரை பார்த்து கொண்டு இருந்தார்கள். ஒருமுறை இவர் சிவனைப் பார்க்க சிவன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் .எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் கேட்கவில்லையே என்று கூறிவிட்டார் .சில நாள் கழித்து மீண்டும் வந்து அவரைப் பார்த்தபோது மீண்டும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் கேட்கவில்லையே என்று கூறினார் .இதுவே தொடர்ந்து பலப் பலமுறை நடந்து கொண்டிருந்தது.

மீண்டும் ஒரு முறை அவர் தவம் செய்யும் இடத்திற்கு சிவனும் பார்வதியும் வந்த பொழுது சனத் குமாரர் வெறுப்புற்று உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் நான் தருகிறேன் என்று கூறினார். அதற்காகவே காத்திருந்தது போல் சிவனும் எனக்கு நீங்கள் மகனாக பிறக்க வேண்டும் என்று கேட்டார். அவர் நீங்கள் மட்டும் கேட்டுக் கொண்டதால் உங்களுக்கு '-உங்களுக்கு மட்டும் நான் மகனாகப் பிறப்பேன் என்று கூறினார். தாயார் பார்வதியும் அடுத்து உள்ளார் .ஆனால்அவர்கேட்க வில்லை எனக்கு மகன் வேண்டும் என்று. நீங்கள் மட்டும் கேட்டதால் உங்களுக்கு நான் மகனாகப் பிறப்பேன் என்று மீண்டும் கூறினார்.

அதைக் கேட்ட பார்வதி தேவி என்ன கூறுகிறீர்கள் . பதி கேட்டால் பத்தினியும் கேட்ட மாதிரி தான் அர்த்தம். ஈசன் கேட்டார் என்றால் அதற்கு என்னுடைய சம்மதம் இருக்கிறது என்று தான் அர்த்தம். தாங்கள் இவ்வாறு கூற கூடாது என்று பார்வதி தேவி கூறினார்.

உடனே சனத்குமாரர் நான் கூறியபடி ஈசனுக்கு மட்டுமே மகனாகப் பிறப்பேன். ஆனால் தாங்கள் தட்சனின் யாகத்தில் தீயில் விழுந்த தங்கள் உடல் குளிர்ந்து நீராகி அந்த நீர் தற்போது சரவணப்பொய்கையாக  உருவெடுத்திருக்கிறது. ஈசனின் நெருப்புப் பொறிகள் சரவணப் பொய்கையில் விழுந்தவுடன் குழந்தையாக மாறி தங்களுக்கும் நான் மகனாக ஆவேன்  என்று கூறினார்.

ரெண்டாவது அவதாரம்.

அவ்வாறே நடந்தது. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகள் உண்டாகி அதை அக்னியும் வாயுவும் ஏந்தி சரவணப்பொய்கையில் விட சரவணப்பொய்கையில் சரவணப்பெருமாள் கந்தப்பெருமான் முருகப்பெருமான் ஞானபண்டிதன் ஆறுமுகன் தோன்றினார். இதுவே முருகனின் இரண்டாவது அவதாரம். முதல் அவதாரம் சனத்குமாரராகவும் இரண்டாவது அவதாரம் முருகப்பெருமான் ஆகவும் தோன்றினார் .இனி மூன்றாவது அவதாரத்தைப் பார்ப்போமா.

உலகைக் காக்கும் பார்வதிதேவி உலகில் குழந்தைகளுக்கு பசி என்றால் பசிப்பிணியை போக்குவார். மற்ற குழந்தைகளுக்கு பசி என்றால் பசிப்பிணியை போக்குவார்.ஆனால் தன் குழந்தை என்றால் பசிப்பிணியைப் போக்க மாட்டார் தானே வந்து பாலை ஊட்டுவார். ஆம் திருஞானசம்பந்தர் .ஞானசம்பந்தர் என்றவுடன் பார்வதிதேவி நேரில் வந்து ஞானப்பால் தன் மார்பில் சுரந்த பாலை குழந்தைக்கு புகட்டினார் ஊட்டினார் .தன் குழந்தை என்ற ஒரே காரணத்தினால் தான் பார்வதி தேவி தன்னுடைய மார்பில் சுரந்த பாலை ஊட்டடினார். மேலும் தன் குழந்தை பசி என்ற ஒரே காரணத்தினால் தான் தன் மார்பில் பால் சுரந்து.அதைத் தான் அந்த பாலைத் தான் குழந்தைக்கு ஊட்டினார் .அதாவது முருகனின் மூன்றாவது அவதாரம் திருஞானசம்பந்தர். பாண்டிச்சேரியில் இன்னும் சில இடங்களில் எங்கு எல்லாம் ஞானசம்பந்தருக்கு கோயில் உள்ளதோ அங்கு எல்லாம் முருகனின் மந்திரங்களால்  தான் ஞானசம்பந்தருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இது மூன்றாவது அவதாரம். இனி நாலாவது அவதாரத்தைப் பார்ப்போமா.

குமாரில பட்டர் உடன் போட்டியிட்டு அவரை வெல்ல வேண்டும் என்று ஆதிசங்கரர் வந்து கொண்டிருந்தார் .இந்த குமாரிலபட்டர் இயற்கையிலேயே வேதம் தான் சிறந்தது என்று என்ற கொள்கையை பரப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பௌத்தமதம் உச்சஸ்தாயில் இருந்தது. இவர் பௌத்த மதத்தில் சேர்ந்து அந்தக் கொள்கைகளை படித்து பின் தான் செய்தது தவறு என்று உணர்ந்தார் .பிறகு பௌத்த மதத்தைச் சேர்ந்த துறவிகள் இவர் பௌத்தர்  அல்ல என்று தெரிந்தவுடன்  அவரைக் கொல்வதற்காக அவரை விரட்டி வந்தனர் .ஒரு மலையின் உச்சிக்குச் சென்று வேதம் சத்தியம் என்றால்?? எனக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று மலையில் இருந்து குதித்தார் .அவருக்கு ஒன்றும் நேரவில்லை ஆனால் காலில் மட்டும் ஒரு சிறு எலும்பு முறிந்துவிட்டது .அவர் தெய்வத்தை நோக்கி என்ன காரணம் இவ்வாறு நிகழ்ந்தது என்று கேட்க வேதம் சத்தியம் என்று குதிக்க வேண்டுமேயொழிய சத்தியமாக இருந்தால் என்ற வார்த்தையை தாங்கள்  சந்தேகத்துடன் உச்சரீத்தீர்கள். அதனால்தான் அந்த சந்தேகத்தின் பலனை அனுபவிக்கிறீரகள் என்று அசரீரி கூறியது.

பிறகு அவர் மனசாட்சி அவரைக் குத்த ஆரம்பித்தவுடன் உடல் முழுதும் உமியை நிரப்பிநெருப்பு வைத்துக் கொண்டார்.அந்த நேரத்தில் ஆதிசங்கரர் அவரைக் காண வந்தார். அவருக்கு தன் நிலைமையை எடுத்துரைத்து தாங்கள் மண்டல மிச்ரரிடமும் சரஸவாணியிடமும் சென்று சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று கூறி தான்  இட்ட நெருப்பால் தானே மாண்டார். இதுவே குமாரிலபட்டரின் கதை. முருகனின் நான்காவது அவதாரம்.

இதுவரை முருகனின் அவதாரங்களை பார்த்தோம்

இதுவரை படித்தமைக்கு நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்