இறைவன் பேசிய தருணங்கள்

#இறைவன் பேசிய தருணங்கள்#.

இறைவன் பேசிய தருணங்கள் எடுத்துரைத்தால் அது எண்ணிக்கையில் அடங்காது .ஒன்றா ,இரண்டா,?? குழந்தைப் பருவத்திலிருந்து அறியாப் பருவத்தில், அது வேண்டும்  இது வேண்டும் என்பதில் இருந்து அறிந்து வேண்டுவது தொடங்கி, அனைத்தையும் நிறைவேற்றி வைத்திருக்கிறான் ஆண்டவன் .நிறைவேற்ற வில்லை என்றாலும் சில காலங்களில் அதை நிறைவேற்றியதாக நாம் நினைத்துக் கொண்டு அவனை வழிபட வேண்டும். நல்லதே செய்திருக்கிறான் .அதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

எத்தனையோ காரியங்கள் இருக்க இங்கு முக்கியமாக இரண்டே இரண்டு காரியங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

முதற் காரியமாக 2015ஆம் ஆண்டில் நான் புதியதாக ஒரு மொபைல் வாங்கி காசி கயா முதலிய இடங்களுக்கு சென்றேன். அங்கு பல இடங்களில் நன்கு போட்டோவும் வீடியோ எடுத்த பிறகு ஒரு வாரம் நன்கு சுற்றிய பிறகு புறப்படத் தயாரானோம்.

 அது மார்ச் மாதம் என்பதால் பீகாரில் பயங்கர குளிர். நான் ஒரு கோட் போட்டு அதில் மொபைலை வைத்து அவர்கள் அமர்த்திய வேனில் அமர்ந்து ரயில்வே ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறோம். ரயில்வே ஸ்டேஷன் வந்துசேர்ந்தோம் 12 மணிக்கு ட்ரெயின் என்று சொன்னார்கள். இறங்கி லக்கேஜ் எல்லாம் கொண்டுவந்து பிளாட்பார்மில் வைத்து வண்டி சென்று விட்டது.

 திடீரென்று நான் எனது பாக்கெட்டில் பார்க்கிறேன் மொபைலை காணவில்லை .புதிய மொபைல் அனைத்து தகவலும் அதில் அடங்கியிருக்கிறது என்று பல இடங்களில் தேடி ஸ்டேஷனில் உள்ள போலீஸ்ல் கம்ப்ளைன்ட் கொடுத்து எல்லாம் செய்த பிறகு என் டூர் ஆர்கனைஸ் செய்தவர் அந்த வேன் டிரைருக்கு போன் செய்ய அவர் போன் என்னிடம் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும். காரணம் உங்கள் ஸ்டேஷனிலிருந்து எங்கள் வீடு இரண்டு மணி நேரம் பயணம் மீண்டும் வருவது என்றாலும் ஆயிரம் ரூபாய் டீசல் ஆகும். ஆதலால் என்னிடம் இருக்கட்டும் நான் கொரியர் அனுப்புகிறேன் என்று சொன்னார். காணோம் என்ற போதும் மனம் இறைவனை வேண்டியது. கிடைத்து விட்டது என்ற தகவல் அறிந்த பிறகும் மனம்  இறைவனை வேண்டியது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே இறைவா என்ற போதும் மனம் இறைவனை வேண்டியது.சரி  என்ன ஆனாலும் பரவாயில்லை என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு ஒன்னரை மணி நேரமே உள்ளது என்ற பிறகும் துணிச்சலாக அவர்கள்  எண்ணுக்கு  தொடர்பு கொண்டு அவர்களை ஸ்டேஷனுக்கு வரச் சொன்னேன்.

 வந்து சேருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்று இருந்தபோதும் இறைவன் மேல் பாரத்தைப் போட்டு நீங்கள் உடனடியாக வாருங்கள் ஆயிரத்திற்கு நான் 2000 தங்களுக்கு தருகிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் எனக்கு கிடைக்கட்டும் .இல்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை வேகமாக வருமாறு கூறினேன். கால் மணி நேரம் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை மற்றவர் போனில் இருந்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன் .ட்ரெயின் வந்து விடுமோ என்ற பயமும் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால்,

இறைவன் கருணை என்பது வேறு.அவரை தொடர்பு கொண்டே இருந்து ரயில்வே ஸ்டேஷனில் மனம் பதைபதைக்க இறைவனை வேண்டிக் கொண்டு பார்த்தால் அவர்கள் வந்து சேர்ந்து என்னிடம் போனை கொடுத்து நான் சொன்னபடி அவர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு விட்ட பிறகு ஸ்டேஷனில் பார்த்தால் வண்டி ஒன்றரை மணி நேரம் அல்ல இரண்டரை மணி நேரம் லேட் என்று அங்கு போர்டில் பார்த்தபிறகு இறைவனின் கருணையை என்னவென்று சொல்வது. தொலைப்பது போல் தொலைக்க வைத்து அதை எனக்கு மீண்டும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் கிடைக்கச் செய்து நான் இருக்கிறேன் என்று ப்ரூவ்  செய்த இறைவனிடம் இது ஒரு  பேசிய தருணம் அல்லவா.

2. ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுடைய ஜெனரல் இன்சுரன்ஸ் இல் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பென்சன் உண்டு என்று அனவ்ன்ஸ் செய்தார்கள். நானும் அப்ளை செய்தேன். ஆனால் நான் வி.ஆர்.எஸ் .வாங்கியதால் மேலும் 20 வருடம் பூர்த்தி செய்யாததால் எனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று சந்தேகத்தை யூனியனில் எழுப்பினார்கள்.

அதனுடைய கண்டிஷன் 20 வருட சர்வீஸும் 55 வயதிற்கு மேலும் இருந்தால் தான் வீ.ஆர்.எஸ் கொடுத்திருக்க வேண்டும்.நான் 20 வருடத்திற்கு இரண்டு மாதம் குறைவாக வீ.ஆர்.எஸ். கொடுத்து 55 வயது நிறைந்த உடன் கொடுத்ததால் யூனியனில் இந்த சந்தேகம்.அங்கும் எனக்கு ஆபத்பாந்தவனாக  அனாதை ரட்சகனாக இறைவனைத்தான் மனதார பிரார்த்தித்து பென்சன் வாங்கி கொடு என்று வேண்டினேன்.

பல இன்னல்களுக்கு இடையில் சென்னையில் தலைமை அலுவலகத்தில் பல சர்க்குலர் களைப் பார்த்து இறுதியாக சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்டர்ஒன்றில் 20  வருடமோ அல்லது 55 வயதோ ஏதோ ஒன்று நிறைந்திருக்க வேண்டும் என்று ஒரு சர்க்குலர் கிடைத்ததாக கூறி தாங்கள் 55 வயதிற்கு பிறகு தான் விஆர்எஸ் கொடுத்தீர்கள் என்ற காரணத்தினால் உங்களுக்கு பென்சன் உண்டு என்று கூறி எனக்கு சேங்ஷன் செய்து தற்போது நான் பென்சன் இன்சூரன்ஸ் கம்பெனியிலும் வாங்கிக் கொண்டு இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியில் இறைவனின் கருணையை என்னவென்று கூறுவது !!

இதுவும் இறைவன் பேசிய தருணம் அல்லவா!!
இது போல் பல தருணங்களில் இறைவன் என்னுடன் பேசி இருக்கிறார். நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இறைவா நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ