மகாவிஷ்ணு மார்பில் ஸ்ரீதேவி பூதேவி அடைக்கலம் புகுந்த கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு .

நாம் கோயில்களில் ஆலயங்களில், ஸ்ரீரங்கத்தில் ,திருவனந்தபுரத்தில், அனேக இடங்களில் நாம் மகாவிஷ்ணுவை பார்த்திருப்போம், மகாவிஷ்ணு சிலா ரூபத்தில் ஆதிசேஷன் குடை தாங்க, வஷ்சஸ்தலத்தில்  ஸ்ரீ  தேவியும் (மார்பில்) ஸ்ரீதேவியும் ,பாத கமலத்தில் பூதேவியும் அமர்ந்திருப்பார்கள். இதன் தத்துவம் ,தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??.

ஒருமுறை பாற்கடலில் மகாவிஷ்ணு துயிலும் பொழுது சற்று கண்ணயர்ந்து விட்டார். அப்போது அரக்கர்கள் ஆன மது, கைடபர், ஆகியோர் பாற்கடலில் தோன்றி ஸ்ரீதேவியையும், பூதேவியையும், கவர்ந்து செல்ல முயன்றனர்.

அவ் வரக்கரர்களைக் கண்டு பயந்த  ஸ்ரீ தேவித் தாயாரும் பூதேவித் தாயாரும் பகவானை எழுப்பக்கூடாது .எழுப்பினால் குற்றம் என  நினைத்து என்ன செய்வது என்று ஒரு வினாடி ஆலோசித்து ஸ்ரீதேவி பகவானின் மார்பிலும் (வஷஸ்தலத்தில்) பூதேவி தாயார் பகவானின் பாதத்திலும் சரணடைந்தனர்.

அப்போது ஆதிசேஷன் பகவானின் நித்திரையைக் கலைக்கக் கூடாது என்று வருந்தி தன் வாயில் உள்ள விஷத்தை உமிழு விஷத்தின் நெடியினால் அரக்கர்கள் பயந்து அவ்விடம் விட்டு ஓடினர்.

நித்திரை கலைந்து எழுந்த பெருமாள் ஆதிசேஷனின் செயலை மிகவும் பாராட்டினார் .அன்றிலிருந்து பகவானின் மார்பில் ஸ்ரீதேவியும் பகவானின் பாத கமலத்தில் பூதேவியும் நிரந்தர வாசம் செய்வது என்று முடிவு எடுத்தனர்.

அதன் காரணமாகவே பின்னாளில் தோன்றிய தெய்வத்தின் ரூபங்கள் அனைத்தும் ஸ்ரீதேவியை மார்பிலும் பூதேவியை பாத கமலத்திலேம் ஆதிசேஷனை குடையாகவும் கொண்டது போல் சிலா ரூபங்களை வடிக்கத் தொடங்கினர்.

இந்த கதையின் பின்னணியில் தான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற இடத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. திருமயம் சென்றால் மலையுடன் கூடிய குகையில் சன்னதி உள்ளது. முதன்முதலில் இந்த தாத்பரியத்துடன்  உருவான கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் தான்.

இதுவே அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீதேவி மார்பிலும் பூதேவி பாதத்திலுமுள்ள வரலாறு..

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ