ஒரு அப்பாவிற்கு தன் பெண்ணே உயர்ந்தவள்

கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சி கே கே ஜி கல்யாண மண்டபத்தில் ராமாயண சொற்பொழிவு திரு.தாமல் ராமகிருஷ்ணனால் நடத்தப்படுகிறது.நேற்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கூறினார். அதை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தால் பகிர்கிறேன்.

அதாவது அக்காலம் தொட்டு இக்காலம் வரை மன்னரே ஆனாலும் குடிமக்கள் ஆனாலும் அனைவருக்கும் ஒரு பெண் என்ற முறையில் பெற்ற தகப்பனாருக்கு தன் பெண்ணே மிகவும்  உயர்ந்தவள் என்ற எண்ணம் இயற்கையாகவே உண்டு .இது ராமாயண காலத்திலேயே உண்டு என்று கூறும்பொழுது தற்காலத்தைப் பற்றி கூறவும் வேண்டுமோ!!???

அதாவது சுயம்வரம் நடக்கிறது .ராமன் சிவதனுசுவை முறித்துவிட்டார். அனைவரும் கூடி திருமணத்தை நிச்சயம் செய்து திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது மூன்று தலைமுறையை கூறி  கன்னிகா தாரணம் செய்வார்கள் .அவ்வாறு ராமனுடைய பரம்பரையை குலகுரு வசிஷ்டர் கூறுகிறார் எவ்வாறு??

நாபாகு மகாராஜா  நப்த்ரே அஜ மஹாராஜா பவித்ரே தசரத மகாராஜா புத்ரே சாட்சாத் மகாவிஷ்ணு ரூபாய ஸ்ரீ ராமா என்று கூறி முடிக்கிறார். உடனே ஜனக மகாராஜா அவருடைய குலகுரு சனந்தர் கூற சனகர் கூறுகிறார். அவருடைய மூன்று தலைமுறையை கூறிவிட்டு சாட்சாத் மகாலட்சுமி ரூபாய சீத்த்த்த்தா என்று கூறுகிறார்.

உடனே அனைவரும் சீதா தானே ஏன் சீத்த்த்த்தா என்று கூறுகிறீர்கள் என்று  கேட்டார்கள். உடனே ஜனக மகாராஜா அவள் என் பெண். என் மாப்பிள்ளை ராமனைக் காட்டிலும் உயர்ந்தவள். ஏனென்றால் ராமனுக்கு தோஷம் உள்ளது. என் பெண் தோஷமற்றவள் என்று கூறினார் .உடனே அனைவரும் அரண்டு போய் என்ன கூறுகிறார் ஜனகர் என்று அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குலகுரு வசிஷ்டர், விசுவாமித்திரர் ,தசரதர், சனந்தர் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஜனக மகாராஜா கூறுகிறார் ராமன் கௌசல்யையின் வயிற்றில் 12 மாதம் கர்ப்ப வாசம் இருந்து பிறந்ததனால் கர்ப்பவாசம் என்கிற தோஷம் அவருக்கு உண்டு. ஆனால் என் பெண் கர்ப்பத்தில் இருக்காமல் நேராக பூமியில் இருந்து கிடைத்ததால் நேர்கோட்டில் கிடைத்ததால் தோஷ மற்றவர். ஆதலால் தான் அவளுக்கு சீதா என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

இயற்கை தானே. அவர் கூறியது உண்மை தானே. ஆதலால்தான் என்ன ஆனாலும் ஒரு தகப்பனுக்கு மகாவிஷ்ணுவே மாப்பிள்ளையாக கிடைத்தாலும், தன் பெண் தான் உயர்ந்தவள் என்கிற எண்ணம் அக்காலம் தொட்டு இக்காலம் வரை அனைத்து தகப்பனாருக்கும் உண்டு என்பது உண்மை தானே.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ