சீனியர் சிட்டிசன் ஹோம் ஆலம்

மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இப்பவும் நமது மத்யமர் குழுவில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் .மேலும் அவர்களுடைய குழந்தைகள் நிறைய பேருடைய குழந்தைகள் வெளிநாடுகளில் செட்டிலாகி இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தனியாக பல ஊர்களில் வாழ்வதற்கு சிரமப்பட்டு கொண்டிருப்பார்கள். நானும் அவர்களில் ஒருவன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த வயதான காலத்தில் சமைப்பது, வீடு பெருக்குவது, மொழுகுவது, பாதுகாப்பிற்கு ஆட்கள் இல்லாதது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய நான் இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சி மாநகரில் 15 கிலோமீட்டர் தூரத்தில் புரவி பாளையத்தில் ஸ்டெப்ஸ் டோன் ஆலமென்று சீனியர் சிட்டிசன் ஹோம் ஒன்று நடக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு வீடு ஒன்று வாங்கி (நமக்கே நமக்கான வீடு ஒன்று) வாங்கி தற்சமயம் அங்கு வசித்து கொண்டு இருக்கின்றேன்.

அங்கு சாப்பாடு அவர்களே தருகிறார்கள். ஒரு ஆளுக்கு மாதம் 5,000 ரூபாய். நாம் வாங்கும் வீட்டை பொறுத்து மெயின்டனன்ஸ் சார்ஜ் வாங்குகிறார்கள்.(maintenance including house keeping stp water security club house park recreation room gym walking space generator acqa water all including etc etc).

நான் எனது மனைவி இருவருக்கும் ஆக மாதம் சாப்பாட்டுச் செலவு 10000. மெய்டனென்ஸ் 5000/- மேற்கொண்டு காபி டீ பழம் பால் போன்ற செலவு 5000/_ மொத்தம் 20000/_ இதற்கு மேல் நாம் செய்யும் செலவைப் பொறுத்து 5000/_ . ருபாய் 25000/_ இருந்தால் லேவிஷாக யாரையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வாழலாம்.

பொள்ளாச்சியைச் சுற்றி பல கோவில்கள் பல சுற்றுலாத் தளங்கள் பல ஆன்மீக தலங்கள் அனைத்தும் உள்ளன. வாரம் ஒரு முறை ஒரு தலங்களாக சென்று வந்தாலே ஒரு வருடத்திற்கு அருமையாக பொழுதைக் கழிக்கலாம் இதை நான் இங்கு கூறுவதற்கு காரணம் சிலர் எங்கு செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள் அவர்களுக்கான ஒரு வடிகால் இது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ