ஆர்னவி சங்கரா டிவியில் ஆதித்ய ஹ்ருதயம்

அனைவருக்கும் வணக்கம். 
நான் ஏற்கனவே அனைவருக்கும் தெரிவித்து இருந்தேன். என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். என் பேரன் பேத்தியும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று.

இதற்கு முன்பு என் பேரன் பியானோ வாசித்து அமெரிக்காவில் பிரைஸ் வாங்கியதை பற்றி ஒரு கட்டுரை போட்டு இருந்தேன்.

இவர்கள் அமெரிக்காவில் வசித்தாலும் என் மருமகள் அங்கு தமிழ் கலாச்சாரப்படி பண்பாட்டின்படி வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு தினமும் ஆன்மீக கதைகளும் நமது சுலோகங்களும் இடைவிடாமல் சொல்லித் தருகிறாள். அதன் காரணமாக ஐந்து வயதே நிரம்பிய என் பேத்தி ஆர்னவி அருண் ,ஆதித்ய ஹ்ருதயத்தை இடைவிடாமல் சொல்லிக்கொடுத்து, கற்று, தேர்ச்சி பெற்று, இன்று சங்கரா டிவியில் 16 .2020 அன்று மாலை நாலரை மணி முதல் 5 மணி வரை என் பேத்தி ஆதித்திய ஹ்ருதயம் சொல்ல அது ஒளிபரப்பாகியது என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் .அதை நமது மத்திய குழு உறுப்பினர்களும் பார்க்க வேண்டும் என்ற அவாவின் காரணமாக இங்கு பதிவிடுகிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ